மறுரூபப்படுத்தும் வல்லமை Tucson, Arizona USA 65-1031M 1இன்று காலை உங்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கென இங்கு வந்துள்ளதை நான் எவ்வளவு பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன் என்பதை இப்படிப்பட்ட நேரத்தில் போதிய அளவுக்கு பாராட்டுதலாக தெரியப்படுத்துவதென்பது எவருக்குமே ஒருவகையான கடினமான செயலாக அமைந்திருக்கும். இந்த ஊழியத்தைக் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்று நிச்சயமுள்ளவனாயிருக்கிறேன். இந்த சிறந்த வாய்ப்பிற்காக சகோ. லீயோ, சகோ. ஜீன் மற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் முதலாம் பாடலை முடிவு வரை கேட்டுக் கொண்டிருந்தேன். அதைப் பாடும்போது, அதில் ஏதோ ஒன்று அடங்கியுள்ளது. பாடல்கள் மூலம் ஏறெடுக்கும் இத்தகைய ஆராதனையை இப்பொழுது நீங்கள் காண்பதில்லை. இங்கு ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை வந்து, என்னை இப்பாடல்களின் நன்மையினால் நிறைத்துக் கொள்வது எனக்கு எப்பொழுதுமே கிடைக்கப் பெற்றுள்ள சிறந்த சிலாக்கியமாகும். இன்று காலை சகோ. லீயோ, அவர்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருகின்றனர் என்னும் பாடலை அறிவித்தபோது, இந்த பெரிய எழுப்புதலை முன்னணியில் நின்று துவங்குவதற்காக என் மனைவியையும், பில்லி, ரெபேக்காள் இவர்களையும் விட்டு நான் புறப்பட்டு சென்றபோது, என் மனைவி இந்த பாடலைப் பாடினது என் நினைவுக்கு வந்தது. 2இந்த அழகான, தூய்மையாய் தோற்றமளிக்கும் ஸ்திரீகளை நான் கண்ணோக்கின போது, என் மனைவி மேடாவை நினைத்தேன். அவள் இவர்களைப் போலவே அப்பொழுது இருந்தாள். அவள் சிறு உருவம் படைத்த, கறுத்த தலைமயிர் கொண்டவளாயிருந்தாள். ஆனால் இப்பொழுதோ அவள் என்னைப் போல் இருக்கிறாள். எங்களுக்கு வயதாகிக் கொண்டே சென்று, நரைத்துவிட்டது. எங்கள் காலம் கடந்து சென்று கொண்டேயிருக்கிறது. இருப்பினும், அவருக்குள் நாங்கள் மறுபடியும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படப் போகிறோம் என்னும் மகத்தான நம்பிக்கையைக் கொண்டவர்களாயிருக்கிறோம். அங்கு காலம், முதுமை வேறெதுவுமே நமக்கு இடையூறு உண்டாக்கவோ, நம்மைத் தொல்லைப்படுத்தவோ இருக்காது. 3இங்குள்ள அன்பு நிறைந்த இந்த கிறிஸ்தவர்களைப் போல என் ஜீவியத்தில் நான் வேறெங்கும் காணவில்லை என்று நம்புகிறேன். உங்களுக்குள் இருக்கும் இந்த அன்பை மரிக்கவிடாதீர்கள். அதை மட்டும் நினைவு கொள்ளுங்கள். எனக்கு முன்பு... ஜனங்கள் மத்தியிலிருந்த பேச்சு, என் முதல் மனைவியின் பெயர் ஹோப். அவள் தான் பில்லியின் தாயார். அவர்கள்... அப்பொழுது நாங்கள் மூவர் மாத்திரமே இருந்தோம் - அதாவது ஹோப், நான், பில்லி. அவர்கள் எங்களை ''நம்பிக்கை, விசுவாசம், அன்பு'' என்று அழைப்பதுண்டு. இந்த வார்த்தை உண்மையென்று விசுவாசிக்க அந்நாட்களில் எங்களுக்கு திடமான விசுவாசம் இருந்தது. தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால், பாருங்கள், இவைகளில், “அன்பே பெரியது''. இன்று காலை சகோ. லீயோ கூறினதுபோல், ”அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்து போம், தீர்க்கதரிசனங்களாலும் ஒழிந்து போம், ஆனால் அன்பு ஒருக்காலும் ஒழியாமல், என்றென்றைக்கும் நிலைநிற்கும்''. பாருங்கள்? பாவமில்லா தேவசபை மீட்கப்படும் நாள் வரை அன்பின் ஆட்டுக் குட்டியின் வார்த்தை வல்லமை, என்றும் ஒழியாது. காயத்தில் ஊறும் உம் இரத்தத்தை விஸ்வாசத்தால் கண்ட நாள் முதல் மீட்பின் அன்பே என் பாடலாம் என் மரண நேரம் வரை. 4அன்பை விடப் பெரிது வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த அன்பை நாம் வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் போனால்... நம்மிடம் அன்பு உண்டு என்று நாம் சொல்லிக் கொள்ளலாம், அதை நாம் வெறுமனே சொல்லுகிறோம். ஆனால் நாம் பெற்றிருக்கிறோம் என்று கூறுவதை உண்மையாகவே வெளிப்படுத்திக் காண்பிக்க முடியுமானால், அப்பொழுது அதை நமக்குள் பெற்றிருப்பதாக காண்பிக்கிறோம். நாம் பிழையற்றவர்கள் அல்ல. நாம் தவறுகள் செய்கிறோம். தவறான செயல்களை நாம் புரிகிறோம். ஆனால் பாருங்கள், அன்பானது அது அனைத்தையும் மூடுகிறது. நம் தப்பிதங்களை நாம் காணும்போது, நாம் திரும்பி வந்து ஒருவரிடத்தில் ஒருவர் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம். ஆம், அவர்கள் தான் போர் வீரர்கள். அவர்கள் தான் தீரமுள்ள ஆண்களும் பெண்களுமாவர். போதிய தைரியம் கொண்ட எவனும் போர்க்களம் செல்ல முடியும். ஆனால் விழ நேர்ந்தாலும் எழுந்து மறுபடியும் முயற்சிக்கிறவனே உண்மையான வீரன் ஆவான். சபையிலே ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் நான் விழுந்தாலும் நான் இழந்தாலும் என்னும் பாடலைப் பாடுவதுண்டு. நான் விழுந்தாலும் நான்... (பாடல் சரியாக எனக்கு ஞாபகமில்லை). நான் எழுந்து மறுபடியும் முயற்சிக்கட்டும் தேவனே, என்னை மன்னியும், இன்னும் ஒரு விசை என்னை சோதனை செய்திடும் (பாருங்கள் - பாருங்கள்?) நான் விழுந்திடினும், பாவம் செய்திடினும், நான் எழுந்து மறுபடியும் முயற்சிக்கட்டும் தேவனே, என்னை மன்னித்து, இன்னும் ஒரு விசை என்னை சோதனை செய்திடும் 5இங்கு நூற்றிருபது பேர்கள் அளவில் கூடியுள்ள உங்கள் நடுவில் சத்துருவானவன் தோன்றி உங்கள் சிந்தைகளின் மூலம் இதை, அதை செய்யத் துவங்குவதை நீங்கள் காண முற்படுவீர்கள். அவன் அவ்வாறு செய்யும் போது சற்று நின்று, இன்று காலை நாம் பேசியதை நினைத்துப் பாருங்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரங்களை நினைவு கூருங்கள். உங்களில் சிலர் தண்ணீர் குழாய் வேலை செய்பவர்களாகவும், தச்சர்களாகவும், இதை, அதை, மற்றதை செய்பவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் உழைக்க வெளியில் செல்லும்போது, ஒவ்வொரு நாளும் உலகத்தோடு உரச வேண்டியுள்ளது. அவைகளை நீங்கள் காணும்போது, பெரிய சோதனைகள் எழுகின்றன. அப்பொழுது நீங்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த புனிதமான சிறு இடங்களை ஞாபகம் கொள்ளுங்கள். அது ஒன்றுதான் என்றும் நிலைத்திருக்கும். இந்நாட்களில் ஒன்றில் உங்கள் தொழில்கள் தோல்வியுறும். உங்கள் உடல் நிலையை நீங்கள் இழக்கக்கூடும். இவ்வுலகில் நீங்கள் கொண்டுள்ள ஜீவனையும் கூட இழக்க நேரிடும். ஆனால் அது மாத்திரமே இழக்கப்படாமல் என்றும் நிலைநிற்கும். அவர் எல்லா காரியங்களுக்கும் மையமாய் இருப்பாரானால், நம்மை அதனிடம் இழுத்துக் கொண்டுள்ள அந்த மையக் கம்பத்தின் மேல், நம் மனதை வைப்போமாக. 6என்னே! நேர்த்தியும் தூய்மை தோற்றமும் கொண்ட சிறு கூட்டமே! உங்கள் ஆடைகளை நான் குறிப்பிடவில்லை. அவை உண்மையாகவே சுத்தமாக உள்ளன, உங்கள் முகங்களும் கூட. இளமையும், முதுமையும், நடுத்தர வயதுமான இங்குள்ள எல்லா பெண்களும் உதட்டுச் சாயமின்றியும், நீண்ட தலை மயிர் கொண்டவர்களாயும் உள்ளனர். ஆம். பாருங்கள்? தேவனை ஆராதிக்கும் இச்சிற்றிடத்தில், எப்படிப்பட்ட பொக்கிஷத்தைப் பெற்றிருக்கிறீர்களென்று நீங்கள் உணருவதில்லை. சகோதரன், சகோதரி ஷாண்ட்ஸ் அவர்களுக்கும், அவர்கள் வீட்டில் இருக்கும்படியான சிலாக்கியத்திற்கும், என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்பொழுது இதுதான் அவர்கள் வீடு. அவர்கள் கனடாவிலுள்ள தங்கள் சொத்துக்களை விற்று, நம்முடன் தேசாந்திரிகளாகத் திரிய இங்கு வந்துள்ளனர். நமக்கு இனிமேல் உலகப் பிரகாரமான உடமைகள் கிடையாது. தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்திற்காக நாம் காத்திருக்கிறோம். 7சகோ. லீயோவையும், சகோ. ஜீன் அவர்களையும், நாங்கள் முதன்முறை சந்தித்தபோது, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட, தரிசனத்திற்கு அவர்கள் இதுவரையிலும் உண்மையுள்ளவர்களாக இருந்து வந்ததற்காக, அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அதை அவர் உங்களிடம் அநேக முறை கூறியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அது வினோதமான ஒன்று. அதை நான் அப்படி நினைக்கவேயில்லை. ஏதோ ஒன்று வரப் போகிறது என்று தெரிந்து கொண்டேன். இந்த இளைஞன், கூர் நுனி கோபுரத்தையும், அதன் மேல் நான் நின்று கொண்டிருப்பது போலவும் சொப்பனம் கண்டு என்னிடம் வந்தார். சொப்பனத்தில், நான் நின்று கொண்டிருந்த இடத்தை அடைய இவர் ஏறி வந்தார். நான் ஒளிமயமான ஒரு தட்டின் மேல் நின்று கொண்டிருந்தேனாம். அவர், ''சகோ. பிரான்ஹாமே, நீர் எப்படி அங்கு அடைந்தீர்?'' என்று கேட்டாராம். நான், ''சகோ. லீயோ, தேவன் மாத்திரமே ஒரு மனிதனை உயரேயுள்ள இந்த இடத்துக்கு கொண்டு வந்து, இந்த நிலையில் வைக்க வேண்டும். இதை நீங்கள் கண்டுவிட்டதால், மக்களிடம் திரும்பிச் சென்று, இது தேவனால் உண்டானதென்று நீங்கள் விசுவாசிப்பதாக அவர்களிடம் கூறும்'' என்றேனாம். 8எனக்கு எப்படிப்பட்ட இடம் இருந்தது என்று அப்பொழுது நான் சிறிதும் அறியாதவனாயிருந்தேன். இந்த பையன்களை நான் நேசிக்கிறேன். நான் அவர்களுடன் இருக்கத் தக்கதான ஒரு நிலையில் அவர்களை வைக்க வேண்டுமென்று விரும்பினேன். அவர்கள் ஒலி நாடாக்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர். ஆனால், பாருங்கள், என்னைப் பொறுத்த வரையில், எனக்குத் தெரிந்த வரையில், அவர்கள் இன்னும் ஒலிநாடாக்களைத் தயாரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஒலிநாடாக்களை தயாரிப்பதைக் காட்டிலும் மகத்தான காரியத்தை தேவன் அவர்களுக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். அறிவுள்ள எவருமே ஒலிப்பதிவுக் கருவியை இயக்கி, ஒலி நாடாக்களையும் தயாரித்து விற்க முடியும். ஆனால் இன்று காலை கூடியுள்ளது போன்ற சிறு கூட்டத்தை இசைவாயும் ஒற்றுமையாகவும் வைத்து, அவர்கள் செய்தியை இன்னும் பற்றிக் கொண்டிருக்கச் செய்வதற்கு பரிசுத்த ஆவியின் வழிநடத்தல் அவசியமாயுள்ளது. தேவனே, இம்மக்களுக்கு இவ்வுலகில் நீண்ட ஆயுளையும், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அளித்து, பாதையின் முடிவில் எஜமானின் சந்தோஷத்திலே பிரவேசிக்க அருள்வீராக. 9நாம் ஒரு போருக்கு இப்பொழுது ஆயத்தமாயிருக்கிறோம், எக்காளம் தொனிக்கப் போகின்றது, பாடல்கள் பாடப்பட்டாயிற்று, இப்பொழுது வார்த்தை வருகிறது. நான் இங்கு நின்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறேன்... ஆம், ஒருக்கால் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இங்குள்ள இந்த இளம் வீரர்கள் கூறின விமரிசனங்களைக் கேட்கும் போது! எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறது. உங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும், தேவனால் எனக்களிக்கப்பட்ட இந்த செய்தியை நீங்கள் விசுவாசிப்பதற்கென உங்களை எந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்று நான் சுற்றிலும் கேள்விப்பட்டு வருகிறேன். நீங்கள் எல்லோரும் வராமலிருந்தால் இச்செய்தியினால் ஒரு பயனும் இல்லை. பாருங்கள், அதை விசுவாசிக்க யாராகிலும் இருக்க வேண்டும். அது தேவனிடத்திலிருந்து வரும் வரைக்கும் அதை விசுவாசிக்க யாராகிலும் இருப்பார்கள். தேவன் ஒரு வழியை வகுத்துக் கொடுத்துள்ளார். அவர் தமது மகத்தான வழியை இவ்வாறே தீர்மானித்துள்ளார். அதாவது அவர் ஒன்றை அனுப்புவாரானால், அந்த ஒன்றை சந்திக்க ஏதாவதொன்று அங்கிருக்கும். ஆழத்தின் அழைப்புக்கு ஆழம் செவி கொடுக்கிறது. அவ்வாறு தான் அது இருக்க வேண்டும். 10இன்று காலை சகோ. ஜீன் செய்த ஜெபத்தில் உபயோகித்த “அவருடைய கம்பீரமான பிரகாரங்களில்'' என்னும் சொற்கள் எனக்குப் பிரியம். நான் அங்குள்ள பாலத்தைக் கடந்து, தேவனுக்கு பயபக்தியும் மரியாதையும் செலுத்தும் இடத்துக்கு வரும்போது, அதே விதமான உணர்ச்சி எனக்கு உண்டாகின்றது. அந்த உணர்ச்சியை நான் எப்பொழுதும் கொண்டவனாயிருக்கிறேன். சத்துரு என்ன செய்த போதிலும்... இதை ஞாபகம் கொள்ளுங்கள், மறந்து போகாதீர்கள். முக்கியமாக, சகோ. லீயோ, ஜீன் இருவரும். இது இவ்விதமாகவே எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து செல்ல சாத்தான் அனுமதிப்பான் என்று நினைக்கிறீர்களா? ஓ, இல்லை. அவன் நிச்சயமாக அனுமதிக்க மாட்டான். இந்நாட்களில் ஒன்றில் அவன் சுழற் காற்றைப் போல் பறந்து வருவான். ஆனால் வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார் (ஏசா. 59:19). தேவனுடைய சமுகத்தில் உங்கள் ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டிருங்கள். ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். தேவனைப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால், நீங்கள் தேவனிடம் அன்பு கூருகிறீகள் என்பதை அது காண்பிக்கிறது. ”நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்'' (யோவான். 13:35). 11சிறிது முன்பு நான், ''எவ்வளவு அழகாக் பாடுகின்றனர்! என்ன நேர்த்தியான குரல்! ஆண்களும், பெண்களும், கணவரும், மனைவியரும், இளைஞரும், முதியோரும், நடுத்தர வயதுள்ளவர்களுமாய் இங்கு அமர்ந்திருக்கும் எவ்வளவு அருமையான கூட்டம்! இவர்கள் பிரஸ்காட் வானொலி ஒலிபரப்பில் பாட வேண்டியவர்கள்'' என்று எண்ணினேன். ஆனால் பாருங்கள், இந்த இளைஞரை தேவன் அதை செய்வதற்கென்று அழைக்கவில்லை. பாருங்கள்? பாருங்கள்? மணவாட்டி வெளியே அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பாருங்கள், வெளியே அழைக்கப்படுகிறாள். இங்குள்ள என் ஊழியம், வெளியே அழைத்தலே. நீங்கள் குடியிருப்பு ஒன்றை அமைத்துக் கொண்டு அங்கு வசித்து, உங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், கழுகு தன் குஞ்சுகளை கவனிப்பது போல், கவனித்து வருகின்றீர்கள்... நீங்கள் ஏதாகிலும் தவறைக் காண்கையில், அந்த நபரை தனியே அழைத்து அதற்காக ஜெபிப்பது போன்ற காரியங்களைச் செய்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் வருகை தரும் ஸ்தலமாக இருக்கத் தக்கதாக, அதை தூய்மையாயும் பரிசுத்தமாயும் வைத்திருங்கள். 12தேவன் ஆராதிக்கப்பட விரும்புகிறார். நீங்கள் அவரை ஆராதிக்கும்போது, நாம் பாடுவது போல் ஒரு பாடலைப் பாடாமல், ஆராதனையின் ஆவியில் பாட வேண்டும், பாருங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் திரும்ப விழுவதை நீங்கள் உணருவீர்கள். இங்குள்ள வாலிபனை நான் காணும்போது, அந்நாட்களில் இளைஞர்கள் இவ்விதமாக அமர்ந்திருந்ததையும், இங்கு இளைஞர்கள் தங்கள் மனைவிகளுடன் அமர்ந்துள்ளது போல் அன்றும் அவர்கள் அமர்ந்திருந்து, அந்த திடகாத்திரமானவர்கள் குழந்தைகளைப் போல் கதறி அழுததையும் நான் நினைவு கூருகிறேன். இந்த நாளில் என்னவென்று பாருங்கள். அவர்கள் விபச்சாரத்திலும், உலகத்தின் அசுத்தத்திலும் ஜீவித்து, தெருவில் சுற்றுபவராயிருக்கின்றனர். “இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது'' (சங். 133:1) என்று சங்கீதக்காரன் கூறியது போல, நீங்கள் தனியே வந்து இவ்வாறு ஒன்று கூடியுள்ளதை நினைத்துப் பார்க்கும் போது! அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடிகளில் வடிகிறதும் அவனுடைய அங்கிகளின் மேல் இறங்குகிறதுமான அபிஷேகத் தைலத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அந்த அபிஷேகத் தைலம்.... அந்த அபிஷேகத் தைலம் என்ன செய்ததென்று அறிவீர்கள். அவன் தேவனுடைய சமூகத்திற்கு சென்றபோது, அது அவனை பாதுகாத்தது. பாருங்கள், அவன் தேவனுடைய சமூகத்திற்கு செல்லும் முன்பாக, அந்த எண்ணெயால் அபிஷேகிக்கப்பட வேண்டும். சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுதல் அந்த எண்ணெய்க்கு ஒப்பிடப்பட்டுள்ளது. சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணும் அந்த அபிஷேகத்துடன், நாம் கர்த்தருடைய சமுகத்தில் பிரவேசிக்கிறோம். எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. 13நாம் தேவனுடைய வார்த்தையை ஆராய்வதற்கு முன்பு ஜெபம் செய்வோம். பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரன் இன்று காலை கூறியது போல், தேவரீருடைய கம்பீரமான பிரகாரத்துக்குள் நாங்கள் பிரவேசிக்கிறோம். இப்பொழுது, பிதாவே, இங்குள்ள இம்மக்களுக்கு நான் என்ன கூறுகிறேனோ, அதற்காக நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் பதிலளிக்க வேண்டியவனாயிருக்கிறேன் என்று நாங்கள் உணருகிறோம். இவர்கள் உம்முடைய பிள்ளைகள். தகப்பனே, தொடர்ந்து இவர்களை ஆசிர்வதியும். சகோ. லீயோவையும், சகோ. ஜீனையும் ஆசிர்வதியும், சூரிய அஸ்தமனம் வரைக்கும் நாங்கள் ஏறெடுக்கும் இப்பயணத்தில், இந்த மக்களை வழிநடத்த அவர்கள் பரிசுத்த ஆவியால் வழி நடத்தப்படுவார்களாக. ஓ, தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, எங்களை குமாரனிடத்தில் வழிநடத்தும். கர்த்தாவே, அதை அருளும். வார்த்தையின் மூலமாக எங்களுக்கு ஜீவ அப்பத்தைப் பிட்டுத் தாரும். நாங்கள் இப்பொழுது யுத்தத்தில் உள்ளோம் என்பதை அறிந்திருக்கிறோம். ஜீவியத்தில் எஞ்சியுள்ள நேரத்தில் போரிடத் தக்கதாக, இந்த போர் வீரர்களின் மேல் சர்வாயுதவர்க்கத்தை அணிவிக்கிறோம். அதைக் கொண்டு அவர்கள் போரிட வேண்டியவர்களாயிருக்கின்றனர். கர்த்தாவே, ஒவ்வொரு ஆயுதத்தையும் அதற்குரிய சரியான இடத்தில் நீர் பொருத்தி, சத்துருவானவன் அவர்களுக்கு எதிராக வரும் போதெல்லாம் அவர்கள் இவைகளைக் கொண்டு காக்கப்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெயத்தை ஏறெடுக்கிறோம். ஆமென். 14நான் சற்று மெதுவாக பேசுபவன், ஏனெனில் நான் பயிற்சி பெற்ற ஊழியக்காரன் அல்ல. இங்கு சாமர்த்தியமும், புத்திசாலித்தனமும் நுண்ணறிவும் படைத்தவர்கள் உள்ளனர் என்று அறிவேன். ஆனால் அவர்கள் இங்கு வந்து தங்களை நொறுக்கி, தாழ்மையாயிருக்கக் கருதி, அவைகளை ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். அந்த மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல் கூறின சொற்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவன், “நான் மனுஷ ஞானத்துக்குரிய நயவசனத்தோடு உங்களிடத்தில் வரவில்லை. ஏனெனில் உங்கள் விசுவாசத்தை நீங்கள் அதன்மேல் வைப்பீர்கள். எனவே நான் உங்களிடத்தில் ஆவியின் பெலத்தினால் வருகிறேன்'' என்றான் (1கொரி. 2:5). பாருங்கள், அவன் பெற்றுள்ளதாக அறிந்திருந்த பெரிய காரியங்களை அவன் தள்ளிவிட்டான். சுவிசேஷ ஊழியங்களில் பணியாற்றும் சகோ. ஹூகி, மற்றும் சகோதரி, உண்மையில் நுண்ணறிவும் புத்திசாலித்தனமும் கொண்ட உங்கள் அநேகருக்கு முன்பாக சொற்ப கல்வியுடைய நான் மிகவும் சிறுமைப்பட்டவனாக நிற்பதை இக்காலை உணருகிறேன் . மொழியின் முதலெழுத்துக்களையும் கூட சரியாக அறிந்திராத ஒருவன் பேசுவதைக் கேட்பதற்காக உங்கள் நுண்ணறிவு போன்றவைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களை தாழ்த்தி இங்கு அமர்ந்திருப்பது உங்களை மிகப் பெரியவர்களாக செய்துவிடுகிறது. பெருமையினால் தோள்களை வெளியே தள்ளிக் கொண்டு நடக்கிறவன் அல்ல... தன்னைத் தான் தாழ்த்தக் கூடியவனே. நற்பண்பு என்பது மனிதனின் புயங்களிலுள்ள தசைகளினாலோ அல்லது அவன் கைகளிலுள்ள தழும்பினாலோ அளக்கப்படாமல், அவன் ஜெபித்தனால் அவன் முழங்கால்களில் ஏற்பட்டுள்ள முடிச்சுகளினால் அளக்கப்படுகிறதென்பது என் கருத்து. அது தான் ஒருவனை மனிதனாக்குகிறது என்று நினைக்கிறேன். 15இன்று காலையில் வேதத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். எனக்கு வார்த்தையென்றால் விருப்பம். உங்களுக்கும் விருப்பம் அல்லவா? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) நாம் கர்த்தரை ஆராதித்தோம், அவனரத் தொடர்ந்து ஆராதிப்போம். நாம் எந்நிலையில் உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள அவரை, நமக்குள் அசையும் இருபுறமும் கருக்குள்ள வெட்டும் பட்டயமாகத் தொழுது கொள்வோம். நான் ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், இக்காலையில் நான் போதிக்க விரும்புகிறதைக் கூறுவதற்கு இந்த ஒரு இடம் ஏற்றது என்று உணருகிறேன். சகோ. லீயோவும் ஜீனும் மற்றவர்களும், நாங்கள் இவ்விடம் விட்டுப் புறப்பட்ட பிறகு, இச்செய்தியை தியானித்து, அதிலுள்ள கருத்துக்களை உங்களுக்குக் கொடுப்பார்கள். இக்காலையில் சகோதரன் தன் செய்தியில் இதை அருமையாகக் குறிப்பிட்டதை நான் கேட்டேன், அவர் அதை கிரகித்துக் கொள்கிறார் என்று என்னால் அதை இவ்வாறு பிரசங்க பீடத்தில் நின்று கொண்டோ, அல்லது ஒலி நாடாக்களின் மூலமாக வெளிப்படையாகக் கூறவோ இயலாது. ஆனால் பாருங்கள், நீங்கள் உட்கார்ந்து அதை ஆழ்ந்து படியுங்கள். அதை மறுபடியும் மறுபடியும் படித்துக் கொண்டேயிருங்கள். அதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அநேகர் அதை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். சிறு மந்தையே, உங்களுக்குத் தெரியுமா? மனிதர் நடுவில் அப்படித்தான் இருக்கிறது. எப்பொழுதுமே அப்படித் தான் இருந்து வந்திருக்கிறது. 16நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்னும் போது (அவருடைய சீஷர்கள் உட்பட, பாருங்கள்) இந்த நாளில் அவர்கள் இதை புரிந்து கொள்வார்களென எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்கள் அறிந்துள்ளபடி, அவர் நேரிடையாகக் கூறி அதை விளக்கமாட்டார். அவர் அதை கூறி விட்டுவிடுவார். உதாரணமாக, அவர், “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும் அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை'' (யோவான். 6:53) என்று கூறி அப்படியே விட்டுவிட்டார். அவர் அவ்விதம் உரைத்தபோது, ஒரு வைத்தியனோ, ஒரு தாதியோ அந்தக் கூட்டத்தில் அவர் அருகில் இருந்திருந்தால் என்ன கூறியிருப்பார்கள்? ''பாருங்கள், இந்த மனிதன் இரத்தம் குடிக்கும் ஒரு பூதம். இவன் தன் இரத்தத்தைக் குடிக்கச் சொல்கிறான்'' என்று கூறியிருப்பார்கள். பாருங்கள், அவர் அதை விவரித்துக் கூறவேயில்லை. அவர் அதை மட்டும் கூறி விட்டுவிட்டார். ஆனால் பிற்பாடு, பவுல் வந்தபோது அதை விவரித்துக் கூறி, ''அவருடைய மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணுவது'' இராப்போஜனத்தில் பங்கு கொள்வதையே குறிக்கிறது என்றான். ஆகவே அவர் அவைகளை கூறினார், அவ்வளவே. 17கடைசியாக, மற்றுமொன்று அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பிறகு அவருடைய அப்போஸ்தலர்கள் ஒரு நாள்; அவருடைய தோளின் மேல் சாய்ந்து கொண்டிருந்த ஒரு சீஷன் இருந்தான். அவன் தான் அவர் நேசித்த யோவான். அவன் ஒரு இளைஞன் . அவனைக் குறித்து அவர், ''நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன?'' என்றார் (யோவான். 21:22). எனவே இயேசு வரும்வரை அவன் மரிப்பதில்லையென்னும் பேச்சு அவர்களிடையே பரம்பிற்று. இயேசு அவ்வாறு கூறவில்லை. ''நான் வருமளவும் அவனிருந்தால் உனக்கென்ன?'' என்று மட்டும் கூறினார். நீங்கள் வார்த்தையில் ஒன்றைப் படிக்கிறீர்கள். அப்பொழுது தேவன் எவ்வாறு... அது ஒரு நோக்கத்திற்காவே உரைக்கப்பட்டது. இக்காரியங்களெல்லாம் ஒரு நோக்கத்திற்காகவே. இந்த இளைஞனான யோவானை தேவன் எடுத்து, அவனை ஆவிக்குள் உயர்த்தி, வரப் போகும் இக்காலத்தையும் அவருடைய வருகையையும் அவன் காணும்படி செய்தார். பாருங்கள், “அவன் இருந்தால் உனக்கென்ன?'' என்று அவர் கூறினார். அவர் அவனைச் சரீரப் பிரகாரமாக அவருடைய வருகை மட்டும் வைக்கவில்லை. ஆனால் பாருங்கள், அவன் மூலமாய் அவர் பேசின வார்த்தை, நாம் இப்பொழுதுள்ள இக்காலத்துக்கு நம்மைக் கொண்டு வந்தது. ஆகவே, எல்லாம் நன்மைக் கேதுவாகவே நடக்கிறது. 18ரோமர் நிருபத்தில், நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த அதிகாரத்திலிருந்து முதல் இரண்டு அல்லது மூன்று வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். இரண்டு வசனங்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவைகளை வாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் எனக்குத் தெரிந்த வரையில் இப்பகுதியை சிறப்பாக விவரிக்க முயற்சிக்கிறேன். ரோமர், 12-ம் அதிகாரம். அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை. இக்காலையில் இங்கு கூடியுள்ள உங்களுக்கு, உங்கள் செயலுக்கு இது ஒரு அருமையான பகுதி என்று நினைக்கிறேன், இப்பொழுது ''அன்றியும்'' என்பது நான் புரிந்து கொண்டுள்ளபடி ஒரு இணைப்புச் சொல்லாகும் (conjunction). (ஆங்கில வேதாகமத்தில் 'அன்றியும்' என்னும் சொல்லுடன் அடுத்த வசனம் ஆரம்பிக்கிறது. தமிழ் வேதாகமத்தில் அது விடப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). நீங்கள் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். நாம் அனைவரும் செய்ய விரும்புவதும் இதுவே. “அதாவது, 'இந்தப் பிரசஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய - பரிபூரணமும் - பிரியமுமான - ' சித்தம் செய்வ தற்கு. நம் மனம் - புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும்''. நாமிருக்கிறபடி, இப்பொழுது நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நாம் பெற்றுள்ளபடி, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டுள்ளோம். வாழ்க்கையிலுள்ள மாம்சப் பிரகாரமான காரியங்களினின்று மாற்றப்படவும், அவருடைய வார்த்தையின் மூலம் அவருடைய ஆவியினால் மறுரூபமாக்கப் பட்டு தேவனுடைய பரிபூரண சித்தத்தைச் செய்யும்படியாயும். கிறிஸ்துவுக்குள் இருந்த சிந்தை நமக்குள் இருக்க விரும்புகிறோம். இப்பொழுது என் பொருள்: ''மறுரூபப்படுத்தும் வல்லமை'' என்பதாம். 19இப்பொழுது என் வேதாகமத்தை இங்கு வைத்து விடுகிறேன். அநேக வருடங்களுக்கு முன்பு, இங்குள்ள இளைஞர்களைப் போல் நான் இருந்தபோது, வேதத்தைப் படிக்கையில் வசனங்களைக் குறித்து வைப்பதில்லை. எனக்கு வயதாகிக் கொண்டே வருவதால், என்னுடன் ஒரு சிறிய குறிப்புப் புத்தகத்தையும் எடுத்து செல்கிறேன். நான் சிலவற்றை பெறும்போது, அவைகளைக் குறித்துக் கொண்டு, அதற்குரிய வசனங்களையும் குறித்து வைக்க வேண்டியதாயுள்ளது. முன்பெல்லாம் வேத வசனங்கள் அனைத்தையும் என் நினைவில் கொண்டு பிரசங்கத்துக்கு வருவது வழக்கம். ஆனால் அன்பான சிநேகிதரே, இன்று காலை உங்களைப் போல் நான் இளைஞனல்ல. நான் வயது சென்றவன். அநேக கடினமான யுத்தங்களை கடந்து வந்தவன். அந்த கடினமான யுத்தங்கள் இன்று காலை என்னை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளன. பாருங்கள்? தேவன் என்னை அவ்வழியே கடந்து வரச் செய்து, “என் ஜீவியம் ஒரு வழியைத் திறந்து, இதுதான் அது, பாருங்கள்'' என்று உறுதியாகக் கூறும்படி செய்திருக்கிறார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நிச்சயமுள்ளவனாய் இருக்கிறேன். அவ்வழி திறக்கப்பட்ட பின்பு, நீங்களும் அப்பாதையில் ஓடுகின்றீர்கள். ஆனால் எனக்கு முன்பு, நான் போவதற்கென்று வேறொருவர் வழியைத் திறந்து கொடுத்தார். பாருங்கள்? இவ்வாறு ஒருவருக்காக ஒருவர் அந்த வழியைத் திறக்கிறோம். சில நேரங்களில், முதுமையடைந்து கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த ஒரு போர்வீரனின் உடலில் போரில் ஏற்பட்ட தழும்புகளை நீங்கள் காண்கிறீர்கள். பவுல், ”கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று ஒரு சமயம் கூறினான் (கலா. 6:17). பாருங்கள்? பவுல் இளைஞனான தீமோத்தேயுவிடம் அதை ஒப்புவித்தபோது, அந்த அடையாளங்களை எவ்வளவு பயபக்தியுடன் நோக்கியிருக்க வேண்டுமென்று நான் யூகித்துப் பார்க்கிறேன். 20இப்பொழுது “மறுரூபமாதல்'' (transforming), நான் ஒரு பொது வேலை நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு மின் அழுத்தத்தை மாற்றி அமைக்கும் இயந்திரமான டிரான்ஸ்ஃபார்மர் (Transformer) இருந்தது. அந்த சொல் தன்னில் தானே அந்த பொருளைக் கொண்டதாயுள்ளது. அந்த சொல்லுக்கு மாற்றப்பட்ட ஒன்று, அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் ஒன்று என்று பொருள். அடுத்த நாற்பத்தைந்து நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 'மறுரூபப்படுதல்' என்னும் பொருளின் மேல் பேச விரும்புகிறேன். வினோதமாய் தோன்றும் சிலவற்றை நான் இங்கு சொல்லக் கூடும். சகோ. லீயோ சற்று முன்பு கூறியது போல், அதை ஏற்றுக் கொண்டு, சிறிது நேரம் அதை ஆராய்ந்து பாருங்கள், அதைக் குறித்து சிறிது சிந்தியுங்கள். 21'மறுரூபமாகுதல்' என்பது மாற்றப்பட்டு, 'வித்தியாசமாக்கப்பட்டிருந்தல்' என்பதாம். ஒரு தவளைக் குஞ்சைப் போல் (tadpole). அது தவளைக் குஞ்சிலிருந்து தவளையாக மாறுகின்றது. பாருங்கள், முன்பு அது ஒரு நெத்திலி மீனைப் போல் தண்ணீரில் நீந்தினது. அது தலையும் வாலும் பெற்று காண்பதற்கு நெத்திலி மீனைப் போலவே இருந்தது. சிறிது கழிந்து அது தன் வாலை இழக்க ஆரம்பிக்கிறது. அது ஒரு வகையினின்று (Species) மற்றொரு வகைக்கு மாறுகிறது. உங்கள் மனம் புதிதாகிறதினாலே “மறுரூபமாகுங்கள்'' என்று பவுல் கூறிய போது, இதை தான் அவன் தன் மனதில் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நாம் பார்ப்போம், அதை நான் சரியாக சொல்லட்டும் இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல், ''ஒத்தவேஷம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்... உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். “மனம் புதிதாகுதல்” ஒரு காலத்தில் நீங்கள் விலையேறப் பெற்றதாக நினைத்தவைகளை விலக்கி, வேறொன்றுக்கு மாற்றப்படுவது; நீங்கள் முன்பு எப்படி இருந்தீர்கள் என்பதிலிருந்து இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு. தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ஓ, நாம் அதை எப்படி செய்வது என்பதை அறியவே விரும்புகிறோம். பாருங்கள்? நாம் இங்கு வந்துள்ளோம், அவரை நாம் நேசிக்கிறோம். அவர் நம்மை இரட்சித்தார், நாம் என்ன செய்ய வேண்டுமென்று இப்பொழுது அறிய விரும்புகிறோம். இக்காலையில் நாம் ஒரு சிறு படிமேலே சென்று, இந்நிலையிலிருந்து சிறிது உயர எழும்ப முயற்சிக்கிறோம். சில சமயங்களில் நாம் சிலவற்றை சந்திக்க நேரிடும்... அது என்னவென்று காணும் வரைக்கும் சிறிது நேரம் அதில் நிலைத்திருங்கள். 22ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில், “தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்'' என்று காண்கிறோம் (ஆதி. 1:2). ஜலம் என்பது... ”ஆதியிலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது'' என்று வேதம் கூறுகிறது. இருளின் குழப்பத்தைத் தவிர அங்கு வேறொன்றுமில்லை. அது எவ்வளவு பயங்கரமான வடிவில் இருந்திருக்கும்! இருளைத் தவிர வேறொன்றுமில்லை. வெளிச்சமோ அலைகளின் ஓசையோ எதுவுமே இல்லாதிருந்தது. அலைந்து கொண்டிருந்த அந்த நட்சத்திரம் எங்கோ ஓரிடத்தில் சுழற்பாதைகளில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அது இழந்து போன நிலையில், தன் வழியைக் கண்டு பிடிக்க முடியாத பயங்கரமான ஒரு பொருளாய் இருந்தது. நாமும் கூட தேவனிடத்திலிருந்து விலகிச் செல்லும் போது அப்படித்தான் அலைந்து திரியும் நட்சத்திரங்களாக; நம்பிக்கையற்றவர்களாக, தேவனற்றவர்களாக ஆகிவிடுகிறோம்; நாம் எங்கு செல்கிறோம் என்பதை அறியாமல், இருளில் வெறுமையாய் உழல்கிறோம். தேவன் அந்த இருளின் குழப்பத்தை எடுத்து, தம் வார்த்தையின் மூலம் அதை ஏதேன் தோட்டமாக மாற்றினார், பாருங்கள். நாமும் கூட தேவனுடைய வார்த்தையினால் அவ்விதமே மாற்றப்படுகிறோம். “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று தேவன் உரைத்த போது, அங்கிருந்த அந்த சிருஷ்டி பொருள் சூரியனிடம் வந்து, சூரியனைச் சுற்றி சுழல ஆரம்பித்து, ஏதேன் தோட்டமாக மாறியது. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தது. அது தேவனுடைய பரிபூரண சித்தத்தை செய்தது. ஏனெனில் அது குழப்பத்திலிருந்து ஏதேன் தோட்டமாக தேவனுடைய வார்த்தையினால் மாற்றப்பட்டது. 23இப்பொழுது, அதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம். இந்நாள் வரையிலும் என் செய்தி தேவனுடைய வார்த்தையையே வலியுறுத்திக் கொண்டு வருகிறது. என்ன நேரிடினும், நாம் அதையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் வார்த்தையில் நிலைத்திருங்கள். உங்கள் குறிக்கோள்களும், நோக்கங்களும் தேவனுடைய வார்த்தையின்படி உள்ளதாவென்று எப்பொழுதும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அவ்விதம் இல்லையேல், அதை விட்டுவிடுங்கள். பாருங்கள்? ஆனால் அது தேவனுடைய வார்த்தையோடு சரியாக அமைந்திருக்குமாயின், அப்பொழுது அதை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது, தேவன் சில சமயங்களில்... இக்காலையில் இங்குள்ள உங்கள் சிறு குழுவைப் போல். அவர் ஓர் இரவிலேயே அதை நிகழச் செய்கிறவர் அல்ல. தேவன்... நாம் தான் அவசரப்படுகிறவர்கள். தேவன் ஒரு போதும் அவசரப்படுகிறவர் அல்ல. அவர் ஒன்றை உரைக்கும் போது, அது வருங்காலத்தில் நிறைவேறும். அவர் ஏதாகிலும் ஒன்றை உரைக்கும் போது, அது நிறைவேறியே ஆக வேண்டும். ஆனால் அது தன் நேரத்தை எடுத்துக் கொள்ள அவர் அனுமதிக்கிறார். 24எபிரேய பிள்ளைகள்- வேதத்திலுள்ள பிரசித்தி பெற்ற கதாபாத்திரங்கள் - தேவனுடைய வார்த்தையே உண்மையென்று அதில் நிலைநின்றார்கள். அவர்கள், ''எங்கள் தேவன் இந்த சூளையின் அக்கினியிலிருந்து எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். ஆகவே, நாங்கள் இந்த சிலையைப் பணிய மாட்டோம். ஏனெனில் இது வார்த்தைக்கு விரோதமானது. அவர் எங்களைக் கொன்று போட்டாலும், மறுபடியும் உயிரோடெழுப்புவார்'' என்றார்கள். பாருங்கள், அவர்கள்... அவர்களை அவர் அந்த அக்கினி சூளை வரை நடக்கச் செய்து, அதில் போடப்பட அனுமதித்தார். அவர்கள் மேல் அவர் எந்த கவனம் செலுத்தாதது போலவும், அவர்களைக் கவனியாதது போலவும் தோன்றியது. இருந்த போதிலும், அவர் எப்பொழுதுமே கவனித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று அவர் எப்பொழுதுமே கவனித்துக் கொண்டிருக்கிறார். 25“வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று தேவன் உரைத்தார். அதன் பிறகு இந்த ஏதேன் உண்டாக ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தன. ஏனெனில் ''பூமியிலே (நமது பூமியில்) ஒருநாள் கர்த்தருக்கு ஆயிரம் வருஷம் போலவும், பூமியிலே ஆயிரம் வருஷம் கர்த்தருக்கு ஒருநாள் போலவும் இருக்கிறது'' என்று வேதத்தின் மூலம் நாம் போதிக்கப்பட்டுள்ளோம் (2பேதுரு. 3:8). இந்த பூமியை உருவாக்கி அதை ஒரு ஏதேனாக்க ஆறாயிரம் வருடங்களாயின. ஆனால் பாருங்கள். எல்லா ஞானத்திற்கும் மகத்தான அதிபதியான தேவன், தாம் என்ன செய்ய வேண்டுமென்று விரும்பினாரோ, அதை தம் சிந்தையில் கொண்டிருந்தார். இந்த இணைப்பு வாகனத்தை (Trailer) மனிதன் உண்டாக்கினபோது, அவன் சிந்தையில் இருந்ததுபோல். இந்த பூங்காவை அமைக்க சகோதரர்களாகிய நீங்கள் திட்டமிட்டபோது, அதை எப்படி அமைத்தீர்கள்? அது உங்கள் சிந்தையில் இருந்தது. சிந்தையிலிருந்த தரிசனத்தின் படியே பணிபுரிந்து அதை முடித்தீர்கள். அதைப் போலவே தேவன் இவ்வுலகத்தையும் சிருஷ்டித்தார். அவர் கிரியை செய்தார்; அது அவருடைய சிந்தையிலிருந்தது. நீங்கள் கவனிப்பீர்களானால், ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றினது போலவும் (evolution), அவர் படிப்படியாக அதிகமாக கற்று கொண்டு, மேலும், சிறந்தவைகளை உண்டாக்கினது போலவும் தோன்றும். ஆனால் பாருங்கள், அவர் எல்லாவற்றிற்கும் மேலானவர். அது படிப்படியாக தோன்றும்படி அவர் செய்தார். அவர் பூமியிலே தோன்றச் செய்த ஒவ்வொன்றும், தாவரவர்க்கம், மீன் போன்றவை; பிறகு அது பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வந்து; அதன் பிறகு தமது சாயலிலே ஒருவன், மனிதன்; அத்துடன் அவர் நிறுத்திக் கொண்டார், பாருங்கள், ஏனெனில் அது அவர் விரும்பின பரிபூரணத்திற்கேற்றபடி அமைந்திருந்தது. 26நீங்களும் அப்படித்தான் துவங்குகிறீர்கள், உதாரணமாக இந்த இணைப்பு வாகனத்தை உண்டாக்கத் துவங்கினபோது, நீங்கள் முதலில் இரும்புச் சட்டத்தை உண்டாக்கிவிட்டு, ''நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?'' என்கிறீர்கள். அவ்வாறே பூங்காவை அமைக்க இந்த மூலையிலுள்ள கற்பாறைகளை முதலில் அப்புறப்படுத்தி, ''நான் என்ன செய்து கொண் டிருக்கிறேன்?'' என்று கேட்பது போல. பாருங்கள், துவக்கத்தில் அது இப்பொழுதுள்ளபடி இருக்கவில்லை. இது சிறு ஏதேனைப் போல் இப்பொழுது காட்சியளிக்கிறது. ஏனெனில் என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் சிந்தையிலிருந்தது. அதன்படியே நீங்கள் பணிபுரிந்து வந்து, இவ்விதமாய் இதை அமைத்துவிட்டீர்கள். நாமும் கூட நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக விரும்புகிறோம். பாருங்கள், நாம் இப்பூமியில் பெற்றிருப்பது அல்ல, இப்பூமியில் நாம் என்ன எதிர்நோக்கப் போகிறோமோ அது; வரப்போகும் அந்த உலகில் நாம் என்னவாயிருக்கப் போகிறோம் என்பதே. நம்ழுடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுதல். 27இதை உண்டாக்க தேவன் ஆறாயிரம் வருடங்கள் எடுத்துக் கொண்டார் என்று ஆதியாகமம் 1-ல் காண்கிறோம். தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது, அவர் அதை நிறைவேற்ற விரும்பினாரென்று நாம் காண்கிறோம். அநேகர் ஆதியாகமம் 1, 2 அதிகாரங்களையும், முக்கியமாக 3-ம் அதிகாரத்தையும் போதிக்கையில், “தேவன் திரும்பத் திரும்ப அதையே கூறுவது போல் தோன்றுகிறது'' என்பார்கள். ஓ, அவர் செய்த எல்லாவற்றையும் முதலில் கூறிவிட்டார். ஓ, எவ்வாறு அவர்... ''வெளிச்சம் உண்டாகக் கடவது, இது உண்டாகக் கடவது, இது தோன்றக் கடவது'' என்று ஒன்றுமே இல்லாத போது உரைத்தார். அப்பொழுது ஒன்றுமேயில்லை. அப்பொழுது வெளிச்சம் இல்லை. அந்த பழைய உலகம் ஜலத்தினால் மூடப்பட்டு இருளில் மிதந்து கொண்டிருந்தது. ஆனால், பாருங்கள், அவர் தமது வார்த்தையை உரைத்துவிட்டார். அப்பொழுது அவர் உரைத்தார். 28ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில், “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்'' என்று கூறப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம் (ஆதி. 1:27). பாருங்கள், அவர் மனிதனை சிருஷ்டித்துக் கொண்டிருந்தார், அவர் வார்த்தையை மாத்திரம் உரைத்தார். அவருடைய அநேக நாட்கள் சென்றன, ஒருக்கால் பல நூறு வருடங்களான பிறகும், நிலத்தைப் பண்படுத்த மனிதன் எவனும் இல்லை. நிலத்தைப் பண்படுத்த யாருமே இல்லை. ஆகவே தேவன் மனிதனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். பாருங்கள், அவர் வார்த்தையை உரைத்தார். அதன் பிறகு அந்த வார்த்தை நிறைவேற வேண்டியதாயிருந்தது. ”வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று அவர் உரைத்தபோது, வெளிச்சம் உண்டாக பல நூறு வருடங்கள் அல்லது ஒருவேளை எண்ணூறு வருடங்கள் பிடித்திருக்கலாம். ஆனால் தேவன் அவ்வாறு உரைத்ததனால் அது நிறைவேறியது. தேவன் ஒரு சபையைப் பெற்றுக் கொள்ளப் போகிறார். நாம் எத்தனை இருளின் காலங்கள் வழியாக கடந்து வர நேர்ந்தாலும், வேறு என்ன நேரிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நாம் அதில் ஒரு பாகமாக இருந்தாலும், இல்லாமற் போனாலும் அவர் கறைதிரையற்ற ஒரு சபையைப் பெறுவார். ஏனெனில் அவர் ஏற்கனவே அதை உரைத்துவிட்டார், அது நிறைவேறும். அது அங்கிருக்கப் போகிறது. 29தாவர இனம் உண்டாகவும், மற்ற ஒவ்வொரு இனம் உண்டாகவும் அவர் கட்டளையிட்டார். உதாரணமாக, “பனைமரம் உண்டாகக் கடவது. சிந்தூர மரம் (oak) உண்டாகக் கடவது. தேவதாரு மரம் உண்டாகக் கடவது'' என்பது போன்ற வார்த்தைகளை அவர் உரைத்திருப்பார். நாம் வசிக்கின்ற டூசானிலுள்ள பாலைவனத்தைப் பாருங்கள். அங்கு சப்பாத்தி கள்ளி, இடம் மாறும் சப்பாத்தி கள்ளி போன்ற பலவிதமான கள்ளி வகைகள் உள்ளன. அங்கிருந்து முப்பது நிமிட பிரயாண தூரத்தில், மலையின் மேல் ஷெர்மன் ஊசியிலை மரங்கள் உள்ளன. இந்த சப்பாத்தி கள்ளி இந்த மலையின் மேல் வளராது. அவ்வாறே அந்த ஷெர்மன் ஊசியிலை மரமும் இந்த பாலைவனத்தில் வளராது. இந்த செடிகளை உண்டாக்கின ஞானம் எங்கிருந்தது? பாருங்கள், அது எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும். அது ”உண்டாகக் கடவது'' என்னும் தேவனுடைய வார்த்தை. அது உண்டானது. 30சிருஷ்டிகரான தேவன் வெவ்வேறு இனங்களையும் ஜீவனையும் தம் வார்த்தையினால் தோன்றச் செய்தாரென்று நாம் காண்கிறோம். இவையனைத்தும் ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்ட தலைமை ஸ்தலத்திலே உண்டாக்கப்பட்டன. தேவன் தம்முடைய குமாரனையும், அவனுடைய மணவாட்யையும் அவைகள் மேல் ஆளுகை செய்ய அங்கு வைத்திருந்தார். பாருங்கள், அவருடைய மகத்தான இந்த சிருஷ்டிப்பிற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் எல்லாவற்றையும் அழகாக உண்டாக்கினார். அவர் மலர்களையும், ஜீவனையும், பறவைகளையும் உண்டாக்கினார். அங்கு மரணம், பாவம், கவலை, வியாதி ஒன்றுமில்லை. மிகச் சிறப்புள்ள இவையனைத்தும் ஏதேன் தோட்டம் என்கின்ற அந்த தலைமை ஸ்தலத்திலே வைக்கப்பட்டன. அங்கு அவர் தன் குமாரனாகிய ஆதாமையும், அவன் மணவாட்டியையும் - மனைவியை - வைத்தார். நீங்கள், ''அது அவன் மனைவி'' என்று கூறலாம். அவள் அவனுடைய மனைவியாவதற்கு நியமிக்கப்பட்டவள் என்றாலும், அவள் இன்னும் அவனுடைய மனைவியாகவில்லை. 31வேதத்தில் நாம் காண்பது போன்றது இது. ''தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' (மத். 1:20) என்று யோசேப்புக்கு கூறப்பட்டது. பாருங்கள்? அவளை விவாகம் செய்து கொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள வாக்குத்தத்தம் செய்த போதே அவள் அவனுடைய மனைவியாகிவிடுகிறாள். இருப்பினும் அவன் அவளை மனைவியாக அறிந்திராத காரணத்தால் (இனசேர்க்கை வழியில்), அவள் இன்னும் அவனுடைய மனைவியாகவில்லை. அந்நிலை தான் ஏதேன் தோட்டத்திலும் இருந்தது. “தேவனுடைய குமாரனும் அவன் மணவாட்டியும்'' என்று நான் குறிப்பிட்ட காரணம் அதுவே. ஆதாம் தன் மனைவியை மனைவியாக அறிந்து கொள்ளவில்லை. இருப்பினும் மறைமுகமாக (Potentially) அவள் அவன் மனைவியே. இப்பொழுது சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவு போல. 32தேவன் உரைத்த நல்வார்த்தை விதைகள் தன் தன் இனத்தைப் பிறப்பித்தன. ஆகவே எல்லாமே நிம்மதியாக இருந்தன. பூமி தோன்றினது, அங்கு வெளிச்சம் இருந்தது. அவர் சூரியனைப் பிரகாசிக்கச் செய்தபோது, சூரிய வெளிச்சம் அங்கிருந்தது. அவர் ஏன் சூரியனைப் பிரகாசிக்கச் செய்தார்? சூரியன் பிரகாசிக்காவிடில், அவர் பேசி சிருஷ்டித்த செடிகள் வளராது என்று தன் சிந்தையில் கொண்டிருந்தார். அது எதுவாயிருந்தாலும், எல்லாமே அதன் நோக்கத்தை நிறைவேற்றும்படி அவர் செய்கிறார். உதாரணமாக, ஒரு மரம் ஒரு குறிப்பிட்ட பழம்தருகிறது - ஓக் மரம் ஓக் பழத்தையும் (acorn), ஆப்பிள் மரம் ஆப்பிள் பழத்தையும். அவர் தோட்டத்தில் பழங்களை உண்டாக்குகிறார். அவை எல்லாமே தம் நோக்கத்திற்காகவே. அவர் உரைத்தபடியே, எல்லாமே நிறைவேறின. அவர் உரைத்து சிருஷ்டித்த பிறகு அவர் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று ஓய்ந்திருப்பது மட்டுமே. அவர் வார்த்தையை உரைத்தார். அவர் உரைத்த காரணத்தால், அவையனைத்தும் நிறைவேறியே ஆக வேண்டும். அது நிறைவேறுவதற்கு முன்பு, என்னென்ன கட்டங்களின் வழியாய் வந்ததோ, என்னவெல்லாம் நிராகரிக்கப்பட்டதோ அல்லது வேறென்ன நிகழ்ந்ததோ, நான் அறியேன். ஆனால் அது நிறைவேறியே ஆகவேண்டும். ஏனெனில் அது நிறைவேற வேண்டுமென்று அவர் உரைத்தார். அவர் அதை உரைத்தார். அப்படித்தான் இக்கடைசி நாட்களில் இங்கு சபை இருக்கப் போவதையும் குறித்தாகும். அவர் ஒரு மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளப் போகிறார். “இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண அவர் வல்லவராயிருக்கிறார்'' (மத். 3:9). நாம் அவரைப் பின்பற்றவில்லையெனில் அவர் வேறு யாரையாகிலும் தம்மை பின்பற்றும்படி செய்வார். பாருங்கள்? அவர் மணவாட்டியைப் பெற்றுக் கொள்ளப் போகிறார். ஏனெனில் அவர் அதை ஏற்கனவே உரைத்துவிட்டார். அவர் என்ன உரைத்தாலும், அது அவ்வாறே நிறைவேற வேண்டும். அது மாற முடியாது. அது அவ்வாறே தோன்ற வேண்டும். ஏனெனில் அது தோன்றுமென்று அவர் உரைத்தார். 33அவர் உரைத்த பிறகு இந்த மகத்தான காரியம் அனைத்தும் நிறைவேறுமென்று அவர் அறிந்திருந்தார். அவரால் ஓய்ந்திருக்க முடிந்தது. எல்லாமே அவர் ஆதிக்கத்தில் இருந்தது. அவருடைய விதை அவருடைய வார்த்தையே. அவருடைய வார்த்தைதான் விதை. அப்படித்தான் இயேசு கூறினார். எல்லாமே சரியாய் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றும் தன் தன் இனத்தைப் பிறப்பித்து தன் இனத்திலே வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்று அவர் உரைத்திருந்தார். பாருங்கள், அதனதன் இனத்தையே அவருடைய வார்த்தை முளைப்பிக்க வேண்டும். அவர் பனை மரம் என்று உரைத்தபோது, பனை மரமும் ஓக் மரமும் சேர்ந்த கலப்புள்ள மரம் வளர வேண்டுமென்று அவர் அர்த்தங் கொள்ளவில்லை. அவர் இங்கு பனை மரம் வளர வேண்டுமென்றும் அங்கு ஓக் மரம் வளர வேண்டுவென்றும், எல்லாமே அதனதன் ஸ்தானத்தில் இருக்க வேண்டுமெனும் அர்த்தத்தில் தான் உரைத்தார். ஓ, நாமும் வார்த்தையின் எந்த பாகமாக இருக்கிறோம் என்று அறிந்து கொள்வோமானால்! என்னவானாலும், நம்முடைய ஸ்தானத்தை நாம் வகிக்க வேண்டும். 34சில சமயங்களில், சக்கர வண்டியில் அமர்ந்திருக்கும் இந்த சிறு சகோதரியை நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவளுக்காக எத்தனை விசுவாச ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன! நமக்குப் புரிவதில்லை. எனவே அவளை நாம் தேவனிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவள் இனிய சுபாவம் கொண்டவளாய் உங்கள் நடுவில் ஒரு மலராய் இருக்கிறாள். பாருங்கள், நம்மால் எழுந்து சுற்றிலும் நடக்க முடிகிறது. அவளுக்கும் நம்மைப் போல் நடக்க ஆசை இருக்கும். இருப்பினும், ஊனமுள்ள நிலையில் அவள் உட்கார்ந்திருந்த போதிலும், அவள் சந்தோஷமுடன் இருக்கிறாள். அவளைக் காணும் போதெல்லாம் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. பாருங்கள், ஏனெனில் அவள்... நாம் அனைவருமே தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதைக் காட்டிலும் மேலான அற்புதங்கள் தேவன் செய்துள்ளதை நாம் கண்டிருக்கிறோம், பாருங்கள், அவளும் கூட அதை அறிந்திருக்கிறாள். ஆனாலும் அவள் தன் ஸ்தானத்தை வகிக்க சித்தம் கொண்டிருக்கிறாள். 35பாருங்கள், அது என்னவாய் இருந்தாலும், அதை தான் நாம் விரும்புகிறோம். தாவீது என்று நினைக்கிறேன், அவன், “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாய் இருப்பதைப் பார்க்கிலும், என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே (ஆங்கில வேதாகமத்தில் மிதியடியாக (door mat) இருப்பதையே'' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) தெரிந்து கொள்வேன் என்று கூறினான் (சங். 84:10). பாருங்கள், என்னவாய் இருந்தாலும், ”என் ஸ்தானத்தை நான் வகிப்பதையே''. சில சமயங்களில், தேவன் உங்களை அழைத்துள்ள ஸ்தானத்தை வகிப்பதற்காக, இவ்வுலகில் உங்களுக்கு அருமையாயுள்ள எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பிரிந்து வர வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். நான் கூறும் மறை பொருளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன். பாருங்கள்? சில சமயங்களில், உங்களுக்கு மிகவும் அருமையானவரோடும் கூட கை குலுக்கி விடைபெற்று, தேவன் உங்களை அழைத்த அந்த ஸ்தானத்தை கிறிஸ்துவுக்குள் வகிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்? தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உங்கள் பழைய நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒருக்கால் அது அருமையான குடும்பத்தை சேர்ந்த மகளாகவோ அல்லது மகனாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம். அப்படிப்பட்ட உங்களை அவர் வேறிடத்தில் நிறுத்துகிறார். ஏனெனில் அவர் கடைபிடிக்கும் முறை அதுவே. அவர் உங்கள் மனதை புதிதாக்கி, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்படி செய்கிறார். அதற்காக நீங்கள் ஒரு கிரயத்தை செலுத்த வேண்டியதாயுள்ளது. பாருங்கள்? 36நம்முடைய மீட்பு மலிவானதல்ல. நமக்காக தேவனுடைய குமாரன் மரிக்க வேண்டிதாயிற்று. பாருங்கள்? விலையேறப் பெற்ற பொருட்களைப் பெற விலையேறப்பெற்ற கிரயத்தை செலுத்த வேண்டும். இந்த செய்தியை உங்களுக்கு சுலபமான முறையில் நான் கொண்டு வரவில்லை. பாருங்கள்? இல்லவே இல்லை. எனக்கு அருமையான எல்லாவற்றையும், என் சொந்த ஜனங்களையும், எல்லோரையும் நான் புறக்கணிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அதனால் கிடைக்கப் பெற்ற பொக்கிஷம் தேவனுடைய சித்தத்தை செய்வதே. அதை செய்வதற்கு தடைகள் ஏற்பட்டன. எனக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவர்கள் அறிந்திருந்தும், என்னை புறக்கணிக்கவும், எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று நினைக்கவும் முற்பட்டனர். “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் போன்றவை சபைக்கு விரோதமானது'' என்றும் அவன் ஒரு பைத்தியக்காரன்'' என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் என்ன கூறினாலும், செய்ய வேண்டியது ஒன்றுண்டு. தேவன் ஒரு மனிதனை எடுத்து, அவனைத் தம் கையில் இறுத்தி, ''இதை செய்'' என்று சொல்லும் போது. அவன் அதை செய்கிறான். பரிசுத்த பவுலுக்கும் அது எப்படிப்பட்ட விலையேறப்பெற்ற காரியமாக இருந்திருக்க வேண்டும்! அந்நாளில் கனம் பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேலின் பாதத்தருகே அமர்ந்திருந்து அவனிடம் பயின்றவன் அவன்... மதபேதம் என்று அவன் கருதி சபைக்கு ஏற்பட்டுள்ள யாவும் மிகவும் மோசமான காரியங்கள் என்று நினைத்திருந்த அதற்கே அவன் திரும்பி வந்து அதில் பங்கு பெறுகிறவன் ஆனான். இது ஒரு வினோதமான காரியமே! அற்புதமான வழிகளில், விசித்திரமான வினோதமான வழிகளில், தேவன் எவ்வாறு தம் அற்புதங்களைச் செய்கிறார்! 37தேவன் ஒன்றை உரைத்தால், அது ஒரு விதையாக அமைந்து, தன் இனத்தைப் பிறப்பிக்க அதனால் முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். அது தன் இனத்தை மாத்திரமே பிறப்பிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது. மனிதன் அதில் குறுக்கிடாவிடில், அது எப்பொழுதும் அதையே பிறப்பிக்கச் செய்யும். அது போன்று, வேத சாஸ்திரிகள் குறுக்கிடாமலும், அதை வேறெங்கோ பொருத்த முயற்சிக்காமலும், வேறெதையும் செய்யாமல் இருந்தால், தேவனுடைய சபையும் மற்ற யாவும் ஆதியில் இருந்த விதமாகவே தன் இனத்தை தோன்றச் செய்யும். தேவன் அதை உரைத்தார். அவர்கள் எவ்வளவுதான் வார்த்தையை அசுத்தமாக்கவும், அதில் குறுக்கிட்டு வேறென்ன செய்ய முயன்றாலும், அது தன் இனத்தை தோன்றச் செய்யும். அதை எதுவுமே தடை செய்ய முடியாது. நான் பேசுவது உங்களிடம் கூச்சலிடுவது போல் இல்லை என்று கருதுகிறேன் (சகோ. பிரான்ஹாம் ஒலிபெருக்கி கருவியை சரி செய்கிறார் - ஆசி). அதிக சத்தமாய் உள்ளதா? (சபையோர் “இல்லை'' என்கின்றனர்). 38பாருங்கள், எல்லாம் ஒழுங்காக இருந்ததாக நாம் காண்கிறோம். தேவன் உரைத்தார். அவர், ''அது உண்டாகக் கடவது, இது உண்டாகக் கடவது, ஏதேன் தோட்டம் உண்டாகக் கடவது, அழகான மலர்கள் உண்டாகக் கடவது. என் சாயலின்படி என் குமாரன் உண்டாகி, அவன் ஏதேன் தோட்டத்தில் நின்று, அவனருகில் அவன் மணவாட்டி நிற்கக் கடவள் என்றுரைத்தார். ஓ, அது எவ்வளவு அழகாக இருந்தது! பிதா - அவர் பிதா, பாருங்கள். எனவே அவருடைய சொந்த பிள்ளைகள் தோன்றினர். அவர்களுக்காக அவர் ஒரு பரதீசை உண்டாக்கினார். தேவன் தம் பிள்ளைகளுக்கு நன்மைகள் செய்ய பிரியப்படுகிறார். உங்களுக்கு நினைவிருக்கிறதா? தாய்மார்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ஜதை காலணிகள் தேவைப்பட்டபோது, உங்கள் சாப்பாட்டுச் சிலவை குறைக்க நேரிட்டாலும் அதை எப்படியாவது வாங்கித் தருவீர்கள், பாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவதொன்றை செய்ய நீங்கள் எதையும் செய்வீர்கள். தந்தையே, பிள்ளைகளுக்கு ஏதாவதொன்றை வாங்கித் தர நீங்கள் இன்னும் சிறிது கடினமாக உழைத்துச் சம்பாதிப்பீர்கள் அல்லவா? பாருங்கள்? நாம் பெற்றோராக இங்கு இருக்கிறோம் என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள், அவர் மிகச் சிறந்த தகப்பன். அப்படியானால் அவர் இன்னும் எவ்வளவு அதிகமாக தம் பிள்ளைகளுக்குச் செய்வார்! “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” (1கொரி. 2:9) என்று அப்போஸ்தலன் கூறியதில் வியப்பொன்றுமில்லை. நம்மால் அதை சிந்தையில் யோசித்துக் கூட பார்க்க முடியாது. தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியுள்ளவைகளை யோசித்து பார்க்கும் அளவுக்கு நமது சிந்தைக்கு சக்தி கிடையாது. அது எப்படியிருக்குமென்று ஓரளவுக்கு நான் கற்பனை செய்ய முடியும். சிந்தித்துப் பார்க்க முடியும். ஆனால் அது எவ்வளவு பிரம்மாண்டமானது என்று சிந்தித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு சிந்தனா சக்தி கிடையாது. அது நம் சிந்தைக்கு அப்பாற்பட்டது. நாம் இளமை கொண்டவர்களாய் பாவமில்லாமல் இருக்கப் போகும் அந்த பரலோகம் எப்படிப்பட்டது என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஓ, அது எவ்வளவு அழகான இடமாயிருக்கும்! ஆனால் பாருங்கள், அது நம் கருத்துக்கு அப்பாற்பட்டது. எனவே, பாருங்கள், அவர் நமக்கு ஆயத்தம் பண்ணியுள்ளவைகள் என்னவென்று மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் முடியாது. அவர் அதை உரைத்தார். அது அப்படியே நிறைவேறும். 39இந்த அழகான அமைப்பை (layout) அவர் உருவாக்கின பிறகு... அதை அமைப்பு என்று கூற எனக்குப் பிரியமில்லை. அது அதுபோன்ற ஒன்று... குழந்தை பிறப்பதற்கு முன்பு தாய் அதை 'லேயட்' (layette) என்று அழைப்பது வழக்கமில்லையா? சிறு அன்பின் பாகமாக தேவன் தங்களுக்கு அளிக்கும் குழந்தையின் பிறப்பை எதிர் நோக்கினவர்களாய், அவர்கள் மேஜோடுகளையும் மற்றவைகளையும் ஆயத்தப்படுத்துகிறார்கள் அல்லவா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் அதை தான் செய்தார். அவர் இந்த ஏதேன் தோட்டத்தை அவர்களுக்காக சிருஷ்டித்தார். அவர் அதை உரைத்தார். அது அவர் சிந்தையில் இருந்தது. அவர் ஒன்றை உரைக்கும் போது, அது நிகழ்ந்தே ஆக வேண்டும். இதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவர் என்ன உரைக்கிறாரோ, அது நிகழ்ந்தே ஆக வேண்டும். பாருங்கள், ஒன்றுமே அது நிகழாமல் தடுக்க முடியாது, அது நிகழாமல் தடை செய்ய முடியாது. தேவன் அதை உரைத்தார், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது! தேவன் அதை உரைத்தார். அது நிகழும். 40அவர் இவையனைத்தையும் தம் சிந்தையில் கொண்டிருந்தார். அவர், ''உண்டாகக் கடவது'' என்றார். அது ஆதியாகமம் முதல் அதிகாரம், பாருங்கள். அவர், “இது உண்டாகக் கடவது, அது உண்டாகக் கடவது'' என்றுரைத்தார். அவர், ”இது இங்கிருக்கட்டும், இது இங்கிருக்கட்டும், இது இங்கிருக்கட்டும்'' என்று விதையை விதைத்துக் கொண்டிருந்தார். அது அவ்விதமே இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அது மாற முடியாது. அப்படியானால், இது நமக்கு விசுவாசத்தைத் தருகிறது. அவர் வேதத்தில் என்ன கூறியுள்ளாரோ, அது அப்படியே நடக்கும். ஆகவே இந்த விதை நம்முடைய இருதயங்களில் விழுவதற்கு அனுமதிப்போம். நம்முடைய இருதயங்கள் அது விதைக்கப்படும் நிலமாக அமைந்திருக்கட்டும். இக்கடைசி நாட்களில், அவர் எந்த இடத்தில் நம்மை வைத்திருக்கிறாரோ, அந்த இடத்துக்கு ஏற்றவாறு நாம் செயல் புரிவோமாக. பாருங்கள், ''கர்த்தாவே, விதை எங்கள் இருதயங்களில் விழட்டும். உம்முடைய வார்த்தை என் இருதயத்தில் விழட்டும்'' என்று கூறுவோம். அவிசுவாசம் என்பதே இல்லாமல் போகட்டும். ஆபிரகாமைப் போல். அவன் முதிர்வயதாயிருக்கையில், அது கூடாத காரியம் போல் தோன்றினது. “அது எப்படி சாத்தியமாகும்? இந்நிலை எனக்கு எப்படி உண்டாகும்?'' என்று அவன் யோசிக்கவேயில்லை. அவன் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டு, அதை விசுவாசித்துக் கொண்டேயிருந்தான். தேவன் அதை நிறைவேறப் பண்ணினார். தேவன் இவையனைத்தையும் உரைத்தார். எனவே அது அப்படியே ஆகும் என்று அவர் அறிந்திருந்தார். அது அப்படியே ஆயிற்று. அது தன் தன் இனத்தை முளைப்பிக்கும்படி செய்தார். 41அவர் அந்த விதை அனைத்தையும், அவர் நினைத்திருந்தபடியே, ஜீவ சிருஷ்டிகளாக மாற்றினார். அவர் உரைத்த விதமாகவே, அவை தோன்றின. அவர் ''உண்டாகக் கடவது'' என்றார். ஒருவேளை அவர் உரைத்து பல நூற்றாண்டுகள் கழிந்திருக்கக் கூடும். ஆனால் அழகான ஏதேனையும் அங்கு பெரிய பறவைகள் பறந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். அந்த பறவைகள் சாக வேண்டியதில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றாக மேய்ந்தன, மற்றும் சிங்கம், சிறுத்தை, காளை அனைத்தும் ஒருமித்திருந்தன. அங்கு கொல்வதோ, மரணமோ, கவலையோ ஒன்றுமில்லை. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் உல்லாசமாய் நடந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை பிறப்பித்தது. அது வேறொன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அது அப்படித்தான் இருக்க வேண்டும்'' என்று தேவன் உரைத்திருந்தார், அது அப்படியே ஆகவேண்டும். ஓ, இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு, அந்த வார்த்தையின் முழு நிறைவேறுதலை நாம் சந்திக்க விரும்புகிறோம் என்பதைக் கூற எவ்வளவாய் விரும்புகிறேன்! 42“தேவன் உண்டாகக் கடவது'' என்றுரைத்தார். இதோ அது முதலாவதாக பரிபூரணமாக, அவர் உரைத்தவாறே தோன்றுகிறது. இந்த மரம் அதே வகையான மரத்தை தான் பிறப்பிக்க முடியும். அதுபோன்று இந்த மரமும் இந்த மரத்தைத் தான் பிறப்பிக்க முடியும். தேவனுடைய குமாரனாகிய ஆதாம், ஒரு தேவனுடைய குமாரனைத் தான் தோன்றச் செய்ய முடியும். பாருங்கள், என் கருத்தை கிரகித்துக் கொண்டீர்களா? ஒவ்வொன்றும் அதனதன் இனத்தை பிறப்பித்தது. ஆகவே தேவன், ”இப்பொழுது நான் ஓய்ந்திருக்கப் போகிறேன்'' என்று சொல்ல முடிந்தது. அதன் பிறகு தேவன் உண்மையிலேயே மிகவும் சொற்பமாகவே பேசினார் என்பதை கவனித்தீர்களா? வீழ்ச்சிக்கு பிறகு அவர் அதை தம் தீர்க்கதரிசிகளிடத்தில் ஒப்படைத்தார், இப்பொழுது அவர்கள் வார்த்தையைக் கொண்டு வருகின்றனர், பாருங்கள். தேவன் ஓய்ந்திருந்தார். அவர் செய்ய வேண்டியது வேறொன்றுமில்ல. அவர்கள் அவருடைய தலைமை ஸ்தலத்திற்கு சென்று கதவைதட்டி, “பிதாவே, இது என்ன?'' என்று கேட்கும் போது, அவர்கள் மூலம் தம் வார்த்தையை அனுப்புகிறார். பாருங்கள், இக்காரியங்களைச் செய்ய அவர் ஒரு வழிமுறையை வைத்துள்ளார். 43“இது இப்படியே உண்டாகக் கடவது...'' எல்லாமே அதன்படி நடந்தது. ஒவ்வொரு விதையும் அதனதன் இனத்தை பிறப்பித்தது. இப்பொழுது, எல்லாமே அழகாக, தேவன் உரைத்தது நிறைவேறிக் கொண்டிருந்த நேரத்தில், இதோ அந்த ஒழுக்கங்கெட்ட அசுத்தமான வஞ்சகன் வருகிறான். இப்பொழுது இங்குள்ள ஒவ்வொருவரையும் அதைக் குறித்து தான் எச்சரிக்க முயல்கிறேன். தேவனுடைய வார்த்தையானது ஊன்றப் பற்றிக் கொண்டு வளர ஆரம்பிக்கும் வேளையில், அவன் மிகுந்த நயமான பேச்சுடன் வந்து, யார் அதை பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதை வலியுறுத்த வசனங்களை எடுத்துரைப்பதை கவனியுங்கள், பாருங்கள், அவனுக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அவன் ஒரு வஞ்சகன். அவனை ஒத்திருப்பவன் (conformer) என்பதற்கு பதிலாக உருக்குலைப்பவன் (deformer) என்றழைக்கப் போகின்றேன். அவன் ஒத்திருப்பவைகளை உருக்குலைப்பவன். அவன் உருக்குலைப்பவன் அல்லது தாறுமாறாக்குகிறவன். அவன் மூல வித்தையும் மூல திட்டத்தையும் கறைபடுத்தினவன். இங்கு பாருங்கள், இன்று காலை இங்குள்ள உங்கள் குழுவுக்கு ஒரு திட்டம், ஒரு தரிசனம் உள்ளதென்று வைத்துக் கொள்வோம். அந்த கறைபடுத்துகிறவனைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். ஓ, அவன் வஞ்சகமாகவும் திறமையாகவும் இருப்பான், பாருங்கள். ஆனால் வாலிபனே, உன் - தரிசனத்தில் தரித்து நில். பார், அதை விடாமல் பற்றிக் கொள். 44அவன் வந்தபோது, வித்தை உருக்குலைத்தான் என்று நாம் காண்கிறோம். அவன் ஏவாள் என்ற விளைநிலத்தில் நுழைந்து வித்தைக் கறைப்படுத்தினான். அந்த வித்து அவளுக்குள் புகுவதற்கு முன்பு, அவன் கறைப்படுத்தப்பட்ட வித்தினால் அதை கறைபடுத்தி, அதன் விளைவாக அழகான ஏதேன் தோட்டத்தை கறைப்படுத்தினான். இப்பொழுது உள்ள ஒரே காரியம் புதுப்பிக்கப்படுதல் மாத்திரமே. இப்பொழுது நாம் எங்குள்ளோமோ, அங்கிருந்து தேவனுடைய சிருஷ்டிப்பின் மூல தொடக்கத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாம் மறுபடியும் ஏதேன் தோட்டத்திற்கு செல்வோம்; அங்கு கணவனும் மனைவியுமாக, பாவம் எதுவுமின்றி நித்தியகாலமாய் வாழ்வோம். 45இப்பொழுது அவர் புதிதாக்குதலினாலே நம் மனதுகளை மறுரூபப்படுத்த விரும்புகிறார். நம் மனம் புத்தாகிறதினாலே மறுரூபமாக வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இப்பொழுது, சாத்தான் உட்புகுந்து, வார்த்தையை உருக்குலைத்து, அது இல்லாத ஒன்றை சொல்லும்படியாக செய்கிறான். அதை தான் அவன் ஆதியில் செய்தான். இப்பொழுது கவனியுங்கள். உங்களிடம் கூற வேண்டுமென்று எத்தனித்துள்ள என் வழக்கமான கருத்துக்கு அடிப்படையாக இந்த கருத்தை நான் கூறாமற்போனால், இன்று காலை நான் கூறப் போவது ஜனங்களுக்கு மிகவும் வினோதமாகத் தென்படும். அதாவது, உருக்குலைப்பவன் உள்ளே நுழைந்தான். மூல வார்த்தையைக் கொண்டு ஒவ்வொன்றும் அதனதன் இனத்தைப் பிறப்பிக்க தேவனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்தன. அவர் உண்டாக்கின ஒவ்வொன்றும், தேவனுடைய சொந்த வார்த்தை அதனதன் இனத்தைப் பிறப்பித்தலே. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையை உருக்குலைக்க, உருக்குலைப்பவனும் ஆறாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டான். அவன் என்ன செய்துவிட்டான்? அவன் ஒரு புதுவிதமான ஏதேனுக்கு சாத்தானின் ஏதேனுக்கு - தன்னைக் கொண்டு வந்துவிட்டான். அங்குதான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 46அவன் அதை எப்படி செய்தான்? அது எப்படி நேர்ந்தது? அவன் அதை எப்படி செய்தான் என்பதே அதன் முக்கியமான பகுதியாகும். அதை உங்கள் முன்னிலையில் வைக்கவே நான் இங்கிருக்கிறேன். அப்பொழுது வரப்போகும் வாரங்களில் நீங்கள் உங்கள் சகோதரருடன் சேர்ந்து ஆராய்ந்து பார்த்து, சாத்தான் அதை எப்படி செய்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். அவன் எவ்வளவு தந்திரசாலியாயிருந்து தந்திரமாக உள்ளே நுழைகிறான் என்பதை கவனியுங்கள். அவன் அந்த வித்துக்களை உருக்குலைத்தான். அவனால் அவைகளை அழிக்க முடியவில்லை, அவைகளை அவனால் உருக்குலைக்க மாத்திரமே முடிந்தது. நீதி தாறுமாறாக்கப்படுதலே பாவம் என்று நாம் உணருகிறோம். பொய் என்பது உண்மை தவறாக எடுத்துரைக்கப்படுதல். பாருங்கள், எதுவுமே. விபச்சாரம் என்பது தேவனால் நியமிக்கப்பட்ட சரியான செயல் தவறான வழியில் செலுத்தப்படுவதாகும். பாருங்கள், எதுவுமே மரணம் என்பது ஜீவன் தாறுமாறாக்கப்படுதல். பாருங்கள், மரணம் ஜீவனைக் குலைத்துப் போடுகிறது. 47தன் விஷத்தெளிப்பினால் அதை செய்ய அவன் ஆறாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டான். அவன் அதை எப்படி செய்தான்? இது தான் மிகவும் முக்கியமான பாகம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவன் அதை நாகரீகத்தின் மூலம் செய்தான். அது வினோதமாய் ஒலிக்கக் கூடும், ஆனால் அது தான் உண்மை. நான் இப்பொழுது ஒன்றைக் கூறப் போகிறேன், அது உங்களை ஒரு வேளை சில நிமிடங்கள் ஊகிக்கும்படி செய்யும். அவ்விதம் இராது என்று நான் நம்புகிறேன் இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நான் அறியாமையை ஆதரிக்க முனையவில்லை. நாகரீகமும், விஞ்ஞானமும், கல்வியும், இன்று நாம் சிறந்ததாகப் போற்றும் இக்காரியங்கள், சாத்தானின் கருவி என்று உங்களுக்குத் தெரியுமா? நாகரீகம் கூட. நாகரீகமானது ஒருபோதும் தேவனால் உண்டாகவில்லை. நாகரீகம் சாத்தானால் உண்டானது. இன்னும் சில நிமிடங்களில், வார்த்தையின் மூலம் அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கிறேன். நாகரீகம் தேவனால் உண்டானதல்ல என்பதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நாம் பெற்றுள்ள இந்த நாகரீகத்தில், நாம் விஞ்ஞானத்தின் மூலம் செயல்பட்டு அதிகமதிகமாய் நாகரீகமடையுந்தோறும், நம்மை நாமே கொன்று கொண்டிருக்கிறோம். பாருங்கள்? நாகரீகம் இப்பொழுது உச்ச நிலையை அடைந்துவிட்டது, இந்த நாகரீகத்தில் நமக்கு மரணம் உள்ளது, இந்த நாகரீகத்தில் நமக்கு பாவம் உள்ளது, இந்த நாகரீகத்தில் நமக்கு வியாதி உள்ளது. இது தேவனால் உண்டாயிருக்க முடியாது. 48ஆகவே தேவன், இந்த ஆயிர... வரப்போகும் அவருடைய சொந்த மகத்தான ராஜ்யத்தில், நமக்கு ஒரு நாகரீகம் இருக்கும். அது இதைப் போன்று இராது. அது விஞ்ஞானத்தின் மூலம் வராது. அது வார்த்தையினால் உண்டாகும் விசுவாச நாகரீகமாயிருக்கும். பாருங்கள்? நாம் பெற்றுள்ள இவ்விஞ்ஞான நாகரீகம் முற்றிலும் சாத்தானின் கண்ணியேயாகும். அதைக் கொண்டு தான் அவன் மக்களைக் கொன்றுபோட்டான். இப்பொழுதும் அதைக் கொண்டு தான் அவன் அனுதினமும் நம்மைக் கொன்று வருகிறான். நாம் ஒவ்வொரு நாளும் புசிக்கும் போது, நாம் ஜீவிப்பதற்கு பதிலாக மரித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் இதை ஓரளவு எடுத்துக் கொண்டு, இத்துடன் கலந்து, கலப்புள்ள உணவாக்கி, நம்மை மரிக்கச் செய்யும் அளவிற்கு ஒவ்வொன்றையும் தாறுமாறாக்கியுள்ளனர். இது மரித்துக் கொண்டிருக்கும் மானிடவர்க்கம். நீங்கள் என்ன தான் செய்ய முயன்றாலும் நீங்கள் மரிக்கின்றீர்கள். அந்த ஆப்பிரிக்க மக்களின் படத்தை நேற்றிரவு பார்த்தீர்கள். அவர்கள் ஏன்... அவர்கள் பெனிசிலின் மருந்தை உபயோகித்ததேயில்லை. அவர்கள் நம்மை காட்டிலும் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களுக்கு இந்த மருந்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது... விஷக் கிருமிகள் அவர்களைத் தொல்லைப்படுத்துவதில்லை. பாருங்கள், விஷக்கிருமி கையுயர்த்தி, அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. பாருங்கள்? ஏனெனில் அவன், பாருங்கள், அவனால், அவன்... அவர்கள் மருந்தை உட்செலுத்திக் கொள்வதில்லை. ஏன்? அவர்கள் எல்லோருமே... பாருங்கள், விஞ்ஞானம் என்பது நமது நோயைப் போக்க அவர்கள் நமக்குள் செலுத்தும் பெனிசிலின் அல்லது வேறொரு மருந்து என்று கருதுகிறோம். அது ஒன்றை அழித்துப்போட்டு, வேறொன்று வளர்வதற்கு அதை விளை நிலமாக மாற்றிவிடுகிறது. பாருங்கள்? ஒரு ஆப்பிரிக்கன் அந்த மருந்தை உட்செலுத்திக் கொள்வதில்லை. பாருங்கள்? 49உங்களில் அநேகர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். ஒரு நல்ல, ஆரோக்கியமான செடிக்கு தெளிப்பு மருந்து ஒருபோதும் அவசியமில்லை என்று நீங்கள் அறிவீர்கள். விரட்டியடிக்கும் பொருள் (repellant) அதன்மேல் உள்ளது. ஆகவே விஷக்கிருமி உண்மையில் ஆரோக்கியமுள்ள செடியின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் நிலத்தில் இரசாயன உரமிட்டு வளர்த்த செடியை (hotbed plant), கலப்புள்ள செடியை தான் நீங்கள் குழந்தையைப்போல் வளர்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக, இங்குள்ள உங்களில் சிலர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். பழைய காலத்து நீண்ட கொம்புடைய பசுவைச் சிந்தித்துப் பாருங்கள். இன்றுள்ள ஹெரி ஃபோர்டு (Hereford) ரக மாடுகளுக்கு அதைக் காட்டிலும் நல்ல மாமிசம் உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியா? அப்படி ஒருக்காலும் இல்லை. பழைய காலத்து நீண்ட கொம்புடைய பசு - அதன் சார்பில் பேசுவதாக எண்ண வேண்டாம் - அது மானைப் போல் குளிர்காலத்தில் வெளியே சென்று குளிரைத் தாங்கிக் கொள்ளும். ஓ, அது மெலிந்து தான் இருந்தது. ஆயினும் அது இருமடங்கு... 50ஆனால் இந்த ஹெரி ஃபோர்டு ரக மாட்டிற்கு வைக்கோலை கொடுக்கின்றீர்கள். அதன் வயிறு வரைபடமெடுத்து, பின்னங்கால்கள் வரை மாமிசம் உள்ளதைக் காண்பிக்கிறீர்கள். அது என்ன? குளிர்காலத்தில் நீங்கள் அதை அவிழ்த்து வெளியே விடுங்கள் பார்க்கலாம். அது மடிந்து போகும். அது குளிர்காலத்தில் வெளியே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், அதனால் தாங்கிக் கொள்ள முடியாது. நீங்கள் அதற்கு தீனி கொடுத்து, குழந்தையைப் போல் அதை பராமரிக்க வேண்டும். அது ஒரு கலப்பினம். பாருங்கள்? ஆனால் உண்மையான, கலப்பினமில்லாத பழைய காலத்து நீண்ட கொம்பு இனத்தை அவிழ்த்துவிட்டால், அதற்கு ஒன்றும் செய்யாது. நம் கிறிஸ்தவர்களும் இந்நாளில் அவ்விதமே உள்ளனர். நாம் முகத்துதி செய்து, கெஞ்சி, சபையில் சேரும்படி செய்து, மூப்பர் பதவியைக் கொடுத்து, முதுகில் தட்டிக் கொடுத்து, சபையில் ஒரு பெரிய பதவி அளிக்கப்பட்ட அநேகர் இருக்கின்றனர். அப்படி நீங்கள் செய்யாமற் போனால், இவர் இதை செய்யவும், அவர் அதை செய்யவும் நீங்கள் அனுமதிக்காவிட்டால், அவர் சபைக்கு வரவும் கூட மாட்டார். அது குழந்தையைப் போல் பேணி காப்பதாகும். உண்மையான கிறிஸ்தவர்கள் இவ்விதமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் கரடுமுரடானவர்கள், பலசாலிகள். பரி. பவுல் அல்லது பரி. பேதுரு அப்படிப்பட்ட கிறிஸ்தவராக இருந்திருப்பார்களென்று நீங்கள் நினைக்கிறீர்களா? “நீங்கள் என்னை பொது கண்காணியாக நியமிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் என்று தெரியாது. நான் இன்னின்ன ஸ்தாபனத்தில் போய் சேர்ந்து கொள்ள வகையுண்டு'' என்று அவர்கள் கூறியிருப்பார்களா? அவர்கள் கரடு முரடானவர்கள். அவர்கள் விசுவாசத்தைக் கொண்டிருந்த மனிதர். அவர்கள் தேவனோடு வாழ்ந்து, தேவனோடு நடந்தார்கள். அவர்கள் சொற்ப வார்த்தைகளைப் பேசின மனிதர். அவர்கள் இரவும் பகலும் இடைவிடாமல் அவருக்கு ஊழியம் செய்தனர். அவர்களுக்கு மருந்தைத் தெளித்து, குழந்தையைப் போல் பேணிப் பாதுகாத்து, இது, அது, மற்ற பதவிகளை அளிக்க அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் கரடு முரடான மனிதர். அவர்கள் உண்மையான வித்துக்கள், ஸ்தாபனங்களிலுள்ள கலப்புள்ள வித்துக்கள் அல்ல. 51“மெதோடிஸ்டுகள் என்னை சரியாக உபசரிக்காமல் போனால், நான் பாப்டிஸ்டுகளிடம் சென்றுவிடுவேன். பாப்டிஸ்டுகள் என்னை சரியாக உபசரிக்காமல் போனால், நான் பெந்தெகொஸ்தேயரிடம் சென்றுவிடுவேன். அவர்களும் என்னை சரியாக உபசரிக்காமல் போனால், நான் கத்தோலிக்கரிடம் அல்லது வேறு யாரிடமோ சென்றுவிடுவேன்''. பாருங்கள், அது கலப்புள்ளது. அதற்கு மருந்து தெளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஆம், ”டாக்டர். சங்கை சகோ. இன்னார் இன்னாரே'' அது கிறிஸ்தவம் அல்ல. கிறிஸ்தவம் எந்த பதவிகளையும் சலுகைகளையும் கேட்காது. அது தேவனை மட்டும் அறிந்திருக்கும். அது மூலவித்து. அது தேவனை நேசித்து, ஒருவரிலொருவர் அன்பு கூரும். அவர்களுக்கு தெளிப்பு மருந்தோ, குழந்தையைப் போல் பேணி காத்தலோ, அவர்களை முதுகில் தட்டி, ''ஆம், இந்த சகோதரி குட்டை தலைமயிர் வைத்துக் கொண்டால் பரவாயில்லை என்று நினைக்கிறேன்'' என்று கூறவோ அவசியமிருக்காது. ''அப்படிப்பட்ட ஒன்றும் இல்லை, அவர்கள் இப்படியே இருக்கட்டும்'' என்றிராமல், அது கரடுமுரடாய் இருக்கும். ஏனெனில் அதுதான் சுவிசேஷம்! அதை அவர்கள் முன்னிலையில் வையுங்கள், அது விழ வேண்டிய இடத்தில் விழட்டும். கிறிஸ்தவர் அதை நேசிக்கின்றனர். பரிசைப் பெற்றிட மற்றவர் கடும் போரிட்டு இரத்தக் கடல்களின் வழியாக அக்கரை சேர்ந்திருக்கும்போது ஓர் இலகுவான பூப் படுக்கையின் மேல் நான் பரலோக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமோ? நான்முதுகில் தட்டிக் கொடுக்கப்பட்டு, “இது, அது, மற்றது'' என்று குழந்தையைப் போல் வளர்க்கப்பட வேண்டுமோ? கரடுமுரடானவர்களுடன் மேலே என் இடத்தைப் பெற எதிர்பார்க்கிறேன். போர் வடுக்களாகிய விருதைப் பெறாமல் மேலே செல்ல நான் எதிர்பார்க்கவில்லை. நான் போரிட வேண்டுமானால், நான் அரசாள வேண்டுமானால் கர்த்தாவே, என் தைரியத்தை அதிகரியும். பாருங்கள், நான் ஒரு கிறிஸ்தவனைப் போல் நிற்கட்டும், குழந்தையைப் போல செல்லமாக வளர்க்கப்பட்டு, ஏதோ ஒன்றுக்குள் நுழைக்கப்படாதிருப்பேனாக. கிறிஸ்தவம் என்பது ஏதோ ஒன்றைச் சேர்வதல்ல, அதில் நீங்கள் பிறக்கின்றீர்கள். நீங்கள் புது சிருஷ்டியாகி விடுகின்றீர்கள். நீங்கள் பூமிக்கு வந்துள்ள தேவனுடைய வித்தாயிருக்கிறீர்கள். 52சாத்தான் இந்த விஷத் தெளிப்பைத் தெளித்தான் என்று இப்பொழுது நாம் காண்கிறோம். அந்த தெளிப்பு நாம் சிறந்ததாகப் போற்றும் நவீன ஞானமும், கல்வியும், விஞ்ஞானமும், நாகரீகமுமே. இன்றைய இந்த மாமிசப் பிரகாரமாள வாழ்க்கையில், நாடுகள் அனைத்திலும் பெரிய எதிரியாக உள்ளது கம்யூனிஸம் என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? கம்யூனிஸத்தின் தேவன் யார்? நாகரீகம், கல்வி, விஞ்ஞானமே. அது உண்மை, இல்லையா? விஞ்ஞானம், விஞ்ஞான ரீதியானவைகளைக் கொண்டு தான் அவர்கள் வாழ்ந்து முன்னேறுகின்றனர். அது விஞ்ஞானம் என்னும் தேவனாயுள்ளது. இந்த நவீன நாகரீகம், விஞ்ஞானம், கல்வி என்னும் விஷத் தெளிப்பைக் குறித்து நீங்கள் மாத்திரம் சிந்திப்பீர்களானால்... 53கல்வியும் நாகரீகமும் பிசாசினால் உண்டானது என்பதை நான் இப்பொழுது நிரூபித்துக் காண்பிக்கட்டும். உங்களுக்கு விருப்பமானால், ஆதியாகமம் 4-ம் அதிகாரத்திற்கு திருப்பி அதை காண்போம். சரி, நாம் 16-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். 14-ம் அதிகாரம்... மன்னிக்கவும், 4-ம் அதிகாரம், இப்பொழுது சாத்தனைக் கவனியுங்கள். இங்குள்ள சகோதரனோடு இந்த ஒலி நாடாக்களைத் தொடர்ந்து கேட்ட்டவர்களே, நான் சர்ப்பத்தின் வித்து என்ற தலைப்பில் பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறீர்கள். அதை ஒருபோதும் மறுக்கமுடியாது. அது அந்த ஏழு முத்திரைகள் ஒன்றில் திறக்கப்பட்டது. அது மறைந்திருந்தது. 54பெற்றோர் எவ்வாறுள்ளனரோ, அதே விதமான போதகத்தினால் பிள்ளைகள் வளர்க்கப்படும்போது, அவகர்ள் தங்கள் பெற்றோரின், தங்கள் ஸ்தாபனங்களின் சுபாவத்தைப் பெறுகின்றனர். அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். பாருங்கள், அவர்கள் அந்த பெற்றேருக்குப் பிள்ளைகளாக பிறந்த காரணத்தால் அதை விசுவாசிக்கின்றனர். ஆனால் இன்று நாம் அந்த பெற்றோருக்குப் பிறக்கவில்லை. நம்முடைய தகப்பன் வார்த்தையே. அந்த வார்த்தை... ''நானும் கூட தேவனுக்குத் தான் பிறந்தவன்'' எனலாம். அது அந்த காலத்திற்கு. ஆனால் இது உச்ச காலம். இந்த காலம் ஸ்தாபனங்களுக்கு அப்பாற்பட்டது. ஒன்று வெளிப்பட வேண்டியதாயிருந்தது; அது வெளிப்பட வேண்டும்; அந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு அதிலுள்ள இரகசியங்கள் வெளிப்பட வேண்டுமென்று தேவன் முன்குறித்திருந்தார். அது லவோதிக்கேயா சபையின் காலத்தில் செய்யப்பட வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன், அது சிறு சந்தேகமும் கூட இல்லாமல்... தற்பெருமை பேசுவதாக எண்ண வேண்டாம். நாம் எவருமே, இயேசு கிறிஸ்துவைத் தவிர நம்மைக் குறித்து பெருமை பேச ஒன்றுமில்லை. நாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து மாத்திரமே பெருமை பேசுகிறோம். நாம் இதற்கு நன்றியுள்ளவராயிருக்கிறோம்... இக்கடைசி நாட்களில் தேவன் நம்மை தெரிந்து கொண்டு, எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, அதை வானத்திலும் பூமியிலும் அடையாளங்களால் நிரூபித்து காண்பித்து அதை அறிந்து கொள்ளச் செய்த அந்த சிலாக்கியத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் வார்த்தைக்கு நேரடியாக சென்று, நாம் வாழும் காலம் என்னவென்றும், செய்தி எப்படிப்பட்டதென்றும் நிரூபித்துக் காண்பித்தனர். நாம் ஒரு பிரத்தியேக மதக் கொள்கை கொண்ட கூட்டத்தினர் (cult) அல்ல. நாம் மத வெறியரும் அல்ல. நாம் பரிசுத்த ஆவியினால் அழைக்கப்பட்ட தேவ ஊழியர். நமக்கு பலவிதமான பெயர்கள் சூட்டப்படுகின்றன, ஆயினும் நாம் அப்படித்தான் என்று அர்த்தமல்ல. 55இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள். சாத்தானின் குமாரன் காயீன். நீங்கள் அனைவரும் ஒலிநாடாக்களைக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன், அவைகளை இங்குள்ள ஒலிநாடா சேமிப்பு அறையில் காண்கிறேன். இப்பொழுது ஞாபகங் கொள்ளுங்கள், ஏவாள் சாத்தானால் கர்ப்பவதியானாள். அதே நாளில்... டூசானில் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இப்பொழுது நமக்கு மருத்துவக் குறிப்பு உண்டு. அதாவது ஒரு ஸ்திரீ இரண்டு மனிதருடன் வாழ்ந்து இரண்டு விதமான பிள்ளைகளைப் பெற முடியுமென்று. அது நமக்குத் தெரியும். நாய்களின் இனப்பெருக்கத்தில், உடனுக்குடன் சேர்க்கை ஏற்பட்டால் அது சாத்தியமென்று நான் அறிந்திருக்கிறேன். ஆகவே சாத்தான் இந்த பொல்லாத சர்ப்பத்தை சந்தித்தான். அது ஒருவேளை காலை நேரமாக இருந்திருக்கும். அது அப்பொழுது ஊரும் பிராணியாக இல்லாமல் மிருகமாக இருந்தது. அது எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் மிகவும் தந்திரமும், வஞ்சகமும், புத்திசாலியுமாய் இருந்தது. அது மனிதனின் கீழ் இருந்தது. மனிதனும் ஒரு மிருகமே. நாம் குட்டிப்போட்டு பால் கொடுக்கும் இனத்தை (mammal) சேர்ந்த சூடான இரத்தம் கொண்ட (warm - blooded) மிருகம். சாத்தான் - இல்லை, இந்த சர்ப்பம் - மனிதனுக்கு அடுத்ததாக இருந்த இணைப்பு (link). அது மனிதக் குரங்குக்கும் (Chimpanzee), மனிதனுக்கும் இடையே இருந்த இனம். விஞ்ஞானம் காணாமற்போன அந்த இணைப்பை தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் அறிந்து கொள்ளக் கூடாதபடி அது மறைக்கப்பட்டு, அதன் ஒரு எலும்பும் கூட மனித எலும்பு போல் தோற்றமளிக்காதபடி, அது ஊரும் பிராணியாய் மாற்றப்பட்டது. 56இவன் பாவமே அறியாத, நிர்வாணம் என்னவென்று தெரியாத ஏவாள் என்னும் இந்த இளம் பெண்ணை தோட்டத்தில் கண்டான் என்று நாம் - காண்கிறோம். அவன் அவளை அறிந்தான். அவன்; சாமர்த்தியமும், தந்திரமும், புத்திசாலியுமாய் இருந்தான். அவன் அவளிடம், “இந்த விதை... இந்த விருட்சம் பார்வைக்கு இன்பமும், இச்சிக்கப்படத் தக்கதுமாய் இருக்கிறது'' என்று அன்று காலை அவளுடன் சேர்ந்த போது சொன்னான். அதன்பிறகு பாருங்கள், அன்றைய பிற்பகலிலேயே அவள் ஆதாமிடம் அது என்னவென்று எடுத்துக்கூறி, அவனும் அதே செயலைப் புரியும்படி அவனை இணங்கப் பண்ணினாள். அதைச் செய்யக் கூடாதென்று ஆதாம் அறிந்திருந்தும், அவன் தன் மனைவியுடன் சென்று, வேண்டுமென்றே இச்செயலைப் புரிந்தான். எப்படியும் இச்செயலுக்கு அவன் கடைசியில் வந்திருப்பான். ஆனால் பாருங்கள், தேவ ஞானத்திற்கேற்றபடி அது அவ்விதமே அமைய வேண்டியதாய் இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் இது, அவர் இரட்சகர், பிதா, சுகமளிப்பவர் என்னும் அவருடைய தன்மைகளை வெளிப்படுத்திக் காட்ட முடியும். அதைக் குறித்து நான் பிரசங்கித்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், பாருங்கள். அது அவ்விதம் நடைபெறாதிருந்தால்... 57தங்களுடைய சுய சித்தத்தின்படி அவ்விதம் செய்ய அவர் அவர்களை அனுமதித்தார். அச்செயல் புரியும்படி அவர்களிடம் கூறிவிட்டு, அவர் நீதியுள்ளவராய் இருக்கமுடியாது. ஆனால் அவர்களைத் தம்முடன் சமநிலையில் நிறுத்தி, சுய சித்தத்தின்படி அவர்களே இச்செயலைப் புரியும்படி விட்டுவிட்டார். அவர்கள் அதைச் செய்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே பாருங்கள், ஆதாம் அவளுடன் சேர்ந்த போது, அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்களில் ஒருவன் சாத்தானின் குமாரன், மற்றவன் தேவனால் உண்டான ஆதாமின் குமாரன் - காயீனும், ஆபேலும். அது இப்பொழுதும் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் டூசானில் இப்பொழுது உள்ளது. அந்த வெள்ளை மாது காலையில் தன் கணவனுடன் சேர்ந்தாள், பிற்பகல் கறுப்பு நிறத்தவனுடன் (Negro) சேர்ந்தாள். ஆண் பிள்ளைகளில் ஒன்று... இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒன்று சுருட்டை மயிர் கொண்ட நீக்ரோ குழந்தை. மற்றது மிகவும் அழகான வெள்ளை நிறமும் வெண் மயிரும் கொண்ட குழந்தை. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். அந்த இரண்டு குழந்தைகளையுமே அந்த வெள்ளைக்காரத் தகப்பன் வளர்க்கும்படி அவள் முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ, ''என் குழந்தையை நான் வளர்க்கிறேன், ஆனால் அவனுடையதை நான் வளர்க்கமாட்டேன். அந்த நீக்ரோ மனிதன் தன் குழந்தையை கவனித்துக் கொள்ளட்டும்'' என்று கூறிவிட்டான். ஆகவே, பாருங்கள், இது உண்மை. 58எப்பொழுதுமே இரட்டையர். அதன் காரணமாகவே... சிறு மந்தையே, இதை மறவாதே. கடைசி நாட்களில் சபையும் இரட்டையராக இருக்கும். அது மிகவும் நெருங்கி இருந்து, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்''. மத்தேயு 24:24, பாருங்கள். சபையானது... அது ஒரு பெந்தெகொஸ்தே அசைவு. அது உண்மையானது போல் காணப்பட்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். சற்று கழிந்து, எனக்கு சமயம் வாய்த்தால், தெரிந்து கொள்ளப்படுதல் என்னவென்றும் அது எப்படி நேரிடுகிறதென்றும் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். பாருங்கள், அது உண்மையானதைப் போலவே இருப்பதால், அவர்களை அது வஞ்சிக்கும். பாருங்கள், இரண்டு தகப்பன்மார்கள், அவ்வளவுதான்; ஒரே தாய், ஒரே சபை, ஒரே அசைவு, எல்லாம் ஒன்று. விளை நிலமும் ஒன்றே. அங்குதான் வார்த்தை விழுகின்றது. ஆனால் அவைகளில் ஒன்று தாறுமாறானது. நீங்கள் புரிந்து கொண்டீர்களா? புரிந்து கொண்டால் ''ஆமென்'' என்று சொல்லுங்கள் (சபையோர் ”ஆமென்'' என்கின்றனர் - ஆசி). பாருங்கள், அவைகளில் ஒன்று தாறுமாறானது. ஏனெனில் அது தவறான தகப்பனால் உண்டானது. தேவன் அனுமதிப்பாரானால், ஸ்தாபனம் தான் மிருகத்தின் முத்திரை என்பதை என்றாவது ஒரு நாளில் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். பாருங்கள். அது தவறான தகப்பன். மக்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக அவர்கள் ஸ்தாபனங்களைச் சேரும்படி அவன் தூண்டுகிறான் பாருங்கள், அது தவறான தகப்பன். அது காயீனின் அசைவு 59இம்முறை வீடு திரும்பியதும், நான் ''சர்ப்பத்தின் அடிச்சுவடு“ என்ற பொருளின் மேல் பேசப் போகின்றேன்; ஆதியில் அந்த மிருகம் எப்படி இருந்ததென்றும் முடிவில் எப்படியிருக்குமென்றும், வேதம் முழுவதிலும் காணப்படும் அதன் அடிச்சுவட்டை எடுத்து காண்பித்து, அது எங்கு முடிவடைகிறது என்பதையும் காண்பிப்பேன், பாருங்கள்?தொலைபேசியின் வழியாய் நீங்கள் அதை கேட்கலாம், பாருங்கள் - தேவன் நம்மை அனுமதிப்பாரானால். அவன் எவ்வளவு தந்திரமுள்ளவன் என்பதை கவனியுங்கள். அவன் எவ்வாறு உண்மையானதைப் போலவே... அவர்கள் யூதாஸும் இயேசுவும் போல; தங்கள் கோத்திரத்திலே சகோதரராயிருந்த ஏசாவும் யாக்கோபும் போல. ஒரே கிளையில் காகமும் புறாவும் போல. நாம் போரிடுகிறதான இப்பெரிய யுத்தத்தில், ஒவ்வொன்றும் இரட்டையாசு உள்ளது. 60சத்துரு ஏவாளிடம், ''ஓ, தேவன் அப்படி சொன்னாரா? நிச்சயமாக, ஆனால் நிச்சயமாக...'' என்று கூறினதுபோல் அவன் வஞ்சகத்தை உடயோகிக்கிறான் பாருங்கள், நீ சாகவே சாவாய்'' (ஆதி. 2:17), என்று தேவன் முதலில் கூறின பிறகும் அதைக் குறித்து யோசிக்க முயற்சிப்பது. சாத்தான், ''ஆமாம், தேவன் அதை கூறினார் என்பது உண்மையே, ஆனால் நிச்சயமாக...'' என்றான். அதன் மேலுள்ள தெளிப்பை பாருங்கள். ஆனால் தேவன் என்ன சொல்கிறாரோ, அதை அவர் காக்கிறார். சாத்தானிடமிருந்து அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை. அவர் அதை காக்கிறார். ஆகவே, சாத்தானின் தந்திரத்தால் ஏமாறாதீர்கள். அறிவாகிய இந்த விஷத்தெளிப்பிற்கு பிறகு, அது தன் இனத்தைப் பிறப்பித்தது என்று நாம் இங்கே ஆதியாகமத்தில் காண்கிறோம். விஞ்ஞானம் என்பது அறிவாகும். விஞ்ஞானம், விஞ்ஞானம் என்று எல்லோரும் பேசுகிறதையே நாம் கேட்கிறோம். பள்ளியிலும் விஞ்ஞானம் பெரிய பாடமாக அமைந்துள்ளது. இன்றைக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் மேலான ஒரு மோட்டார் வாகனம், மேலான இது, மேலான வீடு, மேலான இது, மேலான அது என்றுள்ளது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எந்நேரமும் மரித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வாகனங்கள் உண்டாக்கிக் கொண்டு நடப்பதை நிறுத்திவிட்டோம். நடப்பதை நிறுத்தினதால் திமிங்கலத்தின் கொழுப்பாக (blubber) நாம் மாறிவிடுகிறோம். இப்பொழுது நம்மிடையே ஆண்மைத்தனம் கொண்ட மனிதர் இல்லை. ஜெல்லி மீனைப் போல் (Jellyfish) மிருதுவானவர்களே உள்ளனர். அது உண்மை. 61ஸ்திரீயும் கூட, அவள் செய்வதெல்லாம், சலவை செய்ய வேண்டிய துணிகளை இயந்திரத்தில் போட்டு ஒரு பொத்தானை அழுத்துவதே; (சகோ. பிரான்ஹாம் ஏதோ ஒன்றைத் தட்டுகிறார் - ஆசி). துணிகள் வெளுத்து வெளிவருகின்றன. ஆனால் முன்பெல்லாம் உங்கள் தாய் ஊற்றுக்குச் சென்று, தண்ணீரை மொண்டு சுமந்து வந்து, விறகு வெட்டி எங்கேயாவது ஓரிடத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து துணிகளை அதில் போட்டு சலவை செய்வது வழக்கம். இப்பொழுது நாம் மிருதுவாகிவிட்டதால், அல்விதம் கடினமாக உழைத்தால், அது நம்மைக்கொன்று போடும். அது நம்மால் முடியாது, அப்படிப்பட்ட காலத்தில் இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விஞ்ஞானமும் கூட, இளம் பெண்களுக்கு இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள்ளாகவே மாதவிலக்கு நின்றுவிடுவதாகக் கூறுகிறது. ஜெப வரிசையில் அப்படிப்பட்டவர்களை நான் சந்தித்துள்ளேன். இளைஞர்களும் இருபது முதல் இருபத்தைந்து வயதிற்குள்ளாகவே நடுத்தரவயதை அடைகின்றனர். என் தாய்... என் மனைவிக்கு அது முப்பத்தைந்து முதல் நாற்பது வயதிற்குள் நின்று போனது. என் தாயாருக்கு நாற்பத்தைந்து முதல் ஐம்பது வயதிற்குள் அது நின்றுபோனது. இக்கடைசி நாட்களில் அவர்கள் எப்படி சீரழிகின்றனர் என்று பாருங்கள். ஏன்? நாம் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அதிகமாக செயல் புரிகின்றோம். 62நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குதிரையின் மேல் சவாரி செய்தோ அல்லது கால்நடையாக மட்டுமே பிரயாணம் செய்தான். ஆனால் இப்பொழுதோ அவன், சிந்தனை செல்லும் வேகத்தில், 'ஜெட்' விமானத்தில் பிரயாணம் செய்கிறான். பாருங்கள், விஞ்ஞானம் அதை செய்தது, அது பிசாசினால் உண்டானது. நீங்கள், “சகோ. பிரான்ஹாமே, அது உண்மையா?'' என்று கேட்கக் கூடும். ஆம், ஐயா! இப்பொழுது நாம் ஆதியாகமம் 4-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு... (ஆதி. 4:16) அவன் செய்த முதல் காரியத்தைக் கவனியுங்கள் (இவ்வளவு போதும் என்று நினைத்தால் என்னிடம் கூறுங்கள், இதை நிறுத்திவிடுகிறேன்). பாருங்கள், “காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டான்.'' அங்கு தான் அவன் தவறு செய்தான். கர்த்தருடைய சந்நிதியைவிட்டு புறப்படும் அந்த நிமிடமே நீயும் தவறு செய்கின்றாய், நானும் தவறு செய்கின்றேன். அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதி. 4:16 63பாருங்கள், அது எவ்வளவு மார்க்க சம்பந்தமானது என்று. அவன் கிழக்கு பக்கம் சென்றான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி (பாருங்கள், நாகரீகம்), அந்த பட்டணத்திற்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான். ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்; (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)... லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர். ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான் (பாருங்கள், இசை; விஞ்ஞானம், இவைகள் வருகின்றதைப் பாருங்கள்) சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான் (வேறு விதத்தில் கூறுவோமானால், அவைகளை உருக்கி வார்த்து ஒன்றாக இணைத்தல்). தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்; எனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன். காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான். (ஆதி.4:17-24). 64இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் தேவனுடைய சந்நிதியை விட்டு விலகிச் சென்றவுடனேயே, கட்டிடங்களைக் கட்டத் துவங்கினர்; விஞ்ஞானத்தில் ஈடுபட்டு பித்தளை, இரும்பு முதலியவற்றால் கருவிகள் செய்யத் துவங்கினர். வாத்தியக் கருவிகள் செய்து அவைகளை இசைக்கத் துவங்கினர். பாருங்கள். பாருங்கள்? இது எங்கிருந்து வந்ததும் யார் கர்த்தருடைய சந்நிதியை விட்டு விலகிச் சென்றது? சர்ப்பத்தின் வித்தான காயீன். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). கவனியுங்கள், காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு சென்று, விஞ்ஞானத்தினால் இவைகளைச் செய்யத் துவங்கினான். பாருங்கள், அவன் எங்கே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று; விஞ்ஞானம், கல்வி, பட்டினங்கள், கலாச்சாரம் போன்றவைகளில். அது பிசாசினால் உண்டானது. அதை ஆரம்பித்தது யார்? பிசாசு. இன்றும் அது யாரால் நடைபெறுகிறது? பிசாசினால். நம்மை அழிக்க அணுகுண்டுகளும் மற்றவைகளும். அவைகளின் மத்தியில் நாம் வாழ்கிறோம். நாம் மானிடர், நாம் இங்கு வாழ வேண்டியவராய் இருக்கிறோம். ஆனால் தேவனுடைய மகத்தான நாகரீகத்தில் இவையொன்றும் இராது. பாருங்கள். விஞ்ஞானமானது இயற்கையானவைகளை எடுத்து, தாறுமாறாக்கி, அது செய்யத் தகாதவைகளை செய்யும்படி செய்கின்றது. 65விஞ்ஞான பூர்வமான மதவழிபாடும் அவ்விதமே! அது தேவனுடையதை எடுத்து, அது செய்ய வேண்டியவைகளை செய்வதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபன சபையை உருவாக்கிக் கொண்டது. அவர்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றனர். வேதமோ, ''அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்கின்றது. (எபி. 13:8). “தெய்வீக சுகமளித்தல் என்பது இல்லை''. ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷடிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' (மாற். 16:17-18). அவர் என்ன கூறினார்? எல்லா நாடுகளுக்கும், ஒவ்வொருவருக்கும், சர்வ சிருஷ்டிக்கும்! ''இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். உலகத்தின் - உலக ஒழுங்கு - முழுவதிலும், முடிவு பரியந்தம்''. அவர் நிச்சயமாக அங்கிருக்கிறார்! 66பாருங்கள், அவர்கள் விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டு, ''ஓ, நாங்கள் ஒன்று கூடி, ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, ஒரு நல்ல அங்கத்தினராக இருந்து, எங்கள் சந்தாவைக் கட்டும் வரைக்கும்...'' என்கின்றுனர். பாருங்கள், ''ஓ, தேவன் என்று ஒருவர் இல்லை'' என்று அவர்கள் கூறவில்லை. கடைசி நாட்களிலுள்ள கள்ளக் கிறிஸ்துக்களைக் குறித்து நான் பிரசங்கித்த ஒலிநாடாவை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பாருங்கள், கள்ள இயேசுக்கள் அல்ல (சாத்தானுக்கு அதை விட நன்றாகத் தெரியும், பாருங்கள்), ஆனால் கள்ள கிறிஸ்துக்கள். “கிறிஸ்து” என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர், என்று பொருள். அவர்கள் உண்மையில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். எதனால்? அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அவர்கள் அவைகளைச் செய்கின்றனர். ஆனால் பாருங்கள், அது இக்காலத்துக்கு வரும்போது; நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், முன்பிருந்த பெந்தெகொஸ்தே காலத்தில் அல்ல. நாம் கடைசி காலத்தை அடைந்திருக்கிறோம். முதலாம் காலம் வார்த்தையாகிய கிறிஸ்துவுடன் துவங்கினது. கடைசி காலமும் கிறிஸ்துவாகிய வார்த்தையுடன் முடிவடைய வேண்டும். மற்றவை அனைத்தும் - பதர், மற்றவை போன்றவை - நான் உங்களுக்கு விளக்கியுள்ளபடி, வார்த்தையை சுமப்பவைகளாய், மூல வித்தைப்போன்று, அது பரிபூரணம் அடையும் வரை, அதனதன் நோக்கத்தை நிறைவேற்றுபவைகளாய் இருந்து வந்தன. 67இபொழுது 25-ம் வசனம்: பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று; காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். (ஆதி. 4:25-26) அந்த சர்ப்பத்தின் வித்து எப்படி விஞ்ஞானம், கல்வி, கட்டிடம், இன்னிசை என்னும் பெரிய காரியங்களுக்குள் சென்றது என்பதைப் பாருங்கள், 68ஆனால் நீதியான வித்து யார் அது... பாருங்கள். ஏவாளுக்கு வித்து இருக்கவில்லை. அதை நீங்கள் அறிவீர்கள். ஸ்திரீக்கு வித்து கிடையாது. அவளிடம் முட்டை மாத்திரமே உள்ளது, வித்து இல்லை. அவள்... தேவ ஏற்பாட்டின்படி அவள் வித்தைப் பெற்றாள். ஸ்திரீயிலிருந்து தோன்றிய அந்த பெரிய வித்து, தேவன் அளித்த இயேசுவே. பாருங்கள், காயின் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக தேவன் அவளுக்கு ஒரு வித்தை ஏற்படுத்தினார். சத்துரு, மரணம், சர்ப்பத்தின் வித்து, தாறுமாறாக்குதலின் மூலம் தேவனுடைய வித்தைக் கொன்றது. பார்த்தீர்களா? மூல வித்தை மறுபடியும் கொண்டு வர, ஸ்திரீயின் மூலம் ஒரு வித்து - அதாவது கிறிஸ்து - தோன்றும்படி தேவன் ஏற்படுத்தினார். பார்த்தீர்களா? ஆகவே நீங்கள் பாருங்கள், தாறுமாறாக்குதல், என்பது கல்வி, அறிவு, மற்றும் இன்று நாம் விஞ்ஞானம், மார்க்கம் என்று அழைக்கிறோமே, அவைகளின் மூலம் மரணத்தைக் கொண்டு வந்தது. ஆனால் அவள்... அவர் ஒரு வித்தை ஏற்படுத்தினார். அப்பொழுது மனிதர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்து மறுபடியும் வார்த்தைக்கு வரத் துவங்கினர். பாருங்கள்? ஞாபகம் கொள்ளுங்கள், இந்த வித்தை தொடர்ந்து கொண்டே வாருங்கள். இன்னும் சில வாரங்கள் கழித்து, இந்த சர்ப்பத்தின் அடிச்சுவடுகளை நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். அதை நீங்கள் தொடர்ந்து கொண்டே வருவீர்களானால், அது வேதம் முழுவதிலும் காணப்படுகின்றது. அதை கவனியுங்கள். 'திராட்சை செடி' என்ற தலைப்பில் நான் அளித்த என் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இந்த இரண்டு திராட்சை செடிகளும் ஒன்றாகவே வளர்கின்றன. அவை ஒன்றாகவே வளர்ந்து, இக்கடைசி நாட்களில் தலைப் பகுதிக்கு வரும்போது, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக ஒன்றுக்கொன்று நெருங்கியிருக்கும். அது கோதுமை மணியைப் போலவே ஒன்றைக் கொண்டு வரும். ஆனால் அது கோதுமை மணியல்ல. அது பதர். 69அவர்களுடைய நாகரீகத்தையும் கல்வியையும் பாருங்கள். நான் எழுதி வைத்துள்ள வேதக் குறிப்புகள் இன்னும் பத்து உள்ளன. அவைகளை இப்பொழுது குறிப்பிடப் போவதில்லை. கல்வியும், விஞ்ஞானமும். நாகரீகமும் பிசாசினால் உண்டானவை என்று நாம் இதன் மூலம் புரிந்து கொள்கிறோம். அது உண்மை. அது தேவனால் உண்டானதல்ல, அது பிசாசினால் உண்டானது. நீங்கள் அவைகளைப் பெறக் கூடாது என்று நான் கூறவில்லை. இல்லை, நிச்சயமாக இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் நாம் நிரூபிப்போம். அதாவது தேவன்... ஸ்திரீகளாகிய நீங்களும் மனிதராகிய நாங்களும் இப்பொழுது ஆடை அணிந்து கொள்வது போல, ஆதியில் நாம் ஆடைகளை அணிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் பாருங்கள், நாம் வாழ்கின்ற இக்காலத்தில் நாம் உடை உடுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படி செய்ய வேண்டுமென்று நமக்கு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதியில் அதை நாம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை, ஏனெனில் நாம் பாவமே அறியவில்லை. ஆனால் இப்பொழுதோ நாம் உடை உடுத்தியே ஆக வேண்டும். 70இப்பொழுது நமக்கு மோட்டார் வாகனங்கள் அவசியமாயுள்ளது. விஞ்ஞானத்தின் மூலம் உண்டாக்கப்பட்ட மோட்டார் டோர் வாகனங்களில் நாம் பல இடங்களுக்குச் சென்று, நண்பரைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் அது தேவனால் உண்டானதல்ல - கல்வி போன்றவை. ஆனால் அவை... தேவனுடைய கல்வி, நாகரீகம், விஞ்ஞானமுறை அனைத்தும் அவைகளின் மூல நிலையிலேயே உள்ளன, பாருங்கள், நாம் இப்பொழுது செய்து கொண்டிருப்பதற்கு அது அப்பாற்பட்டது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் ஒன்றை எடுத்து, வேறொன்றுடன் சேர்த்து ஒன்றாக்கி, அழிவு உண்டாகக் கூடிய இரசாயனப் பொருட்களை தயாரிக்கின்றனர். அவைகளை பழைய நிலையிலேயே வைத்துவிட்டால், அவை சரியாயுள்ளன. ஆனால் அவைகளை ஒன்றாக சேர்க்கும்போது, அவை தவறாகிவிடுகின்றன. பாருங்கள்? அது மரணத்தைக் கொண்டு வருகிறது. 71அதுபோல், நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை இவ்வுலகத்தின் மார்க்கத்துக்குள் வைக்க முயற்சிக்கும்போது, உங்கள் மேல் மரணத்தை வருவித்துக் கொல்கிறீர்கள். அது அந்த விஷயத்தைக் கொன்றுவிடுகிறது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அது அந்த நபரைக் கொல்கிறது. நீங்கள், “நல்லது, இப்பொழுது பாருங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் அப்படி விசுவாசிக்க வேண்டியதில்லை. நீங்கள்... எங்கள் சபை சொல்வதை'' என்கிறீர்கள். அங்கேயே அந்த வெடிகுண்டு அந்த நபரைக் கொன்று விடுகிறது. நீங்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி, தேவனுடைய வார்த்தையை மாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வார்த்தையில் நிலைத்திருங்கள். அதை விட்டுவிடாதீர்கள். தேவன் ஒன்றைக் கூறியிருந்தால், அதுதான் அது. கல்வி எதை நிரூபிக்க முடிந்தாலும் எனக்குக் கவலையில்லை. 72நோவாவின் நாட்களில், மேலே வானத்தில் தண்ணீர் இல்லை என்று நிரூபித்துக் காட்ட அவர்களால் முடிந்தது. ஆனால் தேவன் மழை பெய்யப் போகிறதென்று உரைத்தார், அவர் உரைத்தபடியே மழை பெய்தது. அது உண்மை, இன்று அவர்கள், “பூமியில் விழுவதற்கு மேமே அக்கினி இல்லை'' என்கின்றனர். ஆனால் ஒரு நாளில் அது விழும் போது கவனியுங்கள். ஆஹ்ஹா. ''நாம் இதை எப்படி செய்யப் போகிறோம், அதை எப்படி செய்யப் போகிறோம்?'' தேவன் அதை செய்யப் போவதை கவனியுங்கள், அதை அவர் செய்வார். அதை செய்யப் போவதாக அவர் கூறியிருக்கிறார். அந்த வித்து எவ்விடத்திலாவது பற்றிக் கொள்ளும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! அந்த வித்தை விளையச் செய்யும் விளை நிலத்தையே தேவன் இன்று தேடிக் கொண்டிருக்கிறார். அது ஒருவருக்குள்ளே ஆரம்பிக்கிறது. அவர்கள் அதை தாறுமாறாக்குவார்கள். அவன் ஏவாளுக்குச் செய்தது போல, இவர்களும் விஷத்தைத் தெளிப்பார்கள். தேவ குமாரர்களைச் சுமந்து அவர்களை பெற்றெடுக்கத் தக்கதாக அது ஏவாளில் ஆரம்பித்தது, சாத்தானின் குமாரர்களைப் பெற்றெடுக்க அல்ல. அவள் விளை நிலமாக இருந்தாள், அது தவறான இடத்தில் விழுந்தது. அதேபோல வார்த்தையும் ஒரு அவிசுவாசிக்குள் அல்லது சத்தேகப்படுபவனுக்குள் அல்லது கடவுள் நம்பிக்கையில்லாதவனுக்குள் விழும்போது, அவனை ஒரு சபையின் அங்கத்தினனாக உருவாக்குமேயொழிய, ஒரு தேவ குமாரனையோ அல்லது ஒரு தேவ குமாரத்தியையோ உருவாக்காது. தலை மயிரை வளர்க்க வேண்டுமென்று ஸ்திரீகளுக்குச் சொல்லிப் பாருங்கள், உங்கள் முகத்தை நோக்கி அவர்கள் சிரிப்பார்கள். அவர்களிடம் அல்லது அந்த மனிதர்களிடம் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறினால், அவர்கள் உங்களை நோக்கி சிரிப்பார்கள். அவர்கள் தேவ புத்திரர் அல்ல. அது தவறான விளைநிலம், இருப்பினும் அவர்கள் வித்தைப் பெற்றுள்ளனர். தவறாக அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை நீங்கள் காண்கிறீர்களா? ஆம், அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசி, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கின்றனர். ஆயினும் அது சாத்தானால் உண்டானதே. 73''அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து: கர்த்தாவே, கர்த்தாவே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தவில்லையா? பெரிய வல்லமையான காரியங்களையும், அற்புதங்களையும் உம் நாமத்தினால் செய்யவில்லையா? என்று சொல்வார்கள்'' என்று இயேசு கூறினார். அவரோ, “அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்'' என்று சொல்வார் (மத். 7:22-23). அக்கிரமம் என்பது என்ன? ''என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவி கொடார்'' என்று தாவீது கூறினான். (சங். 66:18). பாருங்கள்? செய்யவேண்டும் என்று அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது தான் அக்கிரமம். நன்றாய் அறிந்திருந்தும் அதைச் செய்வதில்லை. அதுதான் அக்கிரமம். பாருங்கள்? அவர்கள் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும் என்று அறிந்திருந்தும், சபையின் நிமித்தமோ, அல்லது வேறொருவர் நிமித்தமோ அல்லது வேறொன்றின் நிமித்தமோ தேவவார்த்தையினின்று விலகி, ஸ்தாபனம் சொல்வதைச் செய்யும் செயல். ''நல்லது, எனக்குத் தெரியாது. இவ்விதம் செய்ய வேண்டும் என்று என் சபை சொல்கிறது. நான் அவ்விதமே விசுவாசிக்கிறேன்'' என்று பதிலளிப்பது. 74பாருங்கள், அது உங்கள் முன்னால் இருந்தும், அதை நீங்கள் செய்யாமலிருப்பது. அதுதான் அக்கிரமம். ''அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்.'' அந்த மகத்தான பரி. பவுலைப் பாருங்கள். அவன், “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும்...'' என்று 1கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் கூறியுள்ளான். நீங்கள், அல்லது வேறு யாராகிலும், அதை பற்றிக் கொண்டு, அதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம் என்று கூற விரும்புகிறீர்களா? பவுல், ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை'' என்கிறான் - இங்கே உங்கள் மத்தியில் நீங்கள் பெற்றுள்ள அன்பு போல் பாருங்கள். ஆம், நீங்கள் பாஷைகள் பேசலாம். ஏனெனில் அது வார்த்தை. ஒரு பிரசங்கி வார்த்தையைக் கொண்டு சென்று, அதை பிரசங்கித்து, அதை மக்களுக்கு எடுத்துரைக்கலாம். அந்த வார்த்தையும் வளரும். ஆனால் அந்த பிரசங்கியே மாய்மாலனாயிருக்கக் கூடும். அது வார்த்தை. பாருங்கள்? ஆனால் தேவனின் உண்மையான ஜீவ சிருஷ்டி. வார்த்தையின் எல்லா நோக்கத்தையும் எடுத்துக் கொள்கிறான். ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்''. வார்த்தையுடன் ஏதாவதொன்றை நீங்கள் சேர்த்தால், ஒரு தாறுமாறான செடியைப் பெறுவீர்கள். 75நான் கோதுமையை விதைத்து, அத்துடன் ஒரு ஊமுள்ளையும் சேர்த்து, அதை மகரந்தச் சேர்க்கையினால் கலப்பினமாக்கினால், ஒரு கோதுமை ஊமுள் கிடைக்கும். பாருங்கள், அது கோதுமையைப் போல் தோன்றினாலும் அது ஒரு ஊமுள் ஆகும். அதில் நிஜமான ஜீவன் இல்லை. அது தன்னைத் தான் மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. பாருங்கள்? அது வளர்ந்து வரும். ஆனால் தன்னைத் தான் உற்பத்தி செய்து கொள்ள அதனால் முடியாது. ஒரு கழுதை ஒரு பெண் குதிரையோடு இனம் சேர்க்கப்பட்டால், அந்த பெண் குதிரை ஒரு கோவேறு கழுதையைப் பிறப்பிக்கும். ஆனால் அந்த கோவேறுக் கழுதையால் வேறொரு. கோவேறு கழுதையைப் பிறப்பிக்க முடியாது. ஏனெனில் அது கலப்பினமாகும். 76“ஒவ்வொரு வார்த்தையும் தன் இனத்தைப் பிறப்பிக்கக் கடவது'' பாருங்கள், அது ஒருமுறை தான் பிறப்பிக்கும். அதே போல், சபை ஒரு கட்டப்பட்ட ஸ்தாபனமாகிவிட்ட பின்பு, அதற்கு மறுபடியும் இனவிருத்தி செய்து கொள்ள முடியாது; அது வேறொரு ஸ்தாபனத்தையே தோன்றச் செய்யும். லூத்தரன்கள் லூத்தரன்களை தோன்றச் செய்ய முடியாது. அது மெதோடிஸ்டையே தோன்றச் செய்தது. மெதோடிஸ்டும் பெந்தெகொஸ்தேயினரைத் தோன்றச் செய்தது. பாருங்கள், அது தன் இனத்தையே பிறப்பிக்க முடியாது. ஏனெனில் அது மரித்து போனது. ஒரு எழுப்புதலைத் துவக்க அதனால் முடியாது. ஒரு ஸ்தாபனத்தில் தேவன் எப்பொழுதாவது ஒரு எழுப்புதலை ஆரம்பித்திருக்கிறாரா? சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். அவர் அவ்விதம் செய்யவே இல்லை. ஒரு எழுப்புதலுக்குப் பின் உருவானது ஒரு ஸ்தாபனமே. தேவ மனிதனாகிய லூத்தர் நீதிமானாக்கப்படுதல் என்னும் செய்தியுடன் வந்தார். அவரைத் தொடர்ந்து உருவானது லூத்தரன் ஸ்தாபனமே. அதற்கு மேல் அவர்களால் வளர முடியவில்லை. அதன்பின் தேவன், ஜான் வெஸ்லி என்னும் பெயருள்ள ஒரு மனிதனை அனுப்பினார். அதன் விளைவாக ஒரு எழுப்புதல் உண்டானது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை ஸ்தாபனமாக்கி, அது தன்னை மறுபடியும் பிறப்பிக்கக் கூடாதபடிக்கு செய்துவிட்டனர். பாருங்கள், அது பிறப்பிக்கும் சக்தியை இழந்த ஒன்று (sterile). அல்லேலூயா! ஆனால் தேவனுடைய வார்த்தை என்றும் நிலைத்திருக்கும்! அது உண்மை. அது தன் இனத்தைப் பிறப்பிக்கும், 77பெந்தெகொஸ்தே வந்தது, அதனால் உற்பத்தி செய்ய முடியாது. அது என்ன செய்தது என்று பாருங்கள். அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அதனால் தன்னை மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. அவர்களுக்கு ஓரல் ராபர்ட்ஸுகளும் மற்றவர்களும் தேசமெங்கிலும் இருக்கலாம், ஆனால் அதனால் அதை செய்ய இயலாது. அது அந்த கோவேறு கழுதையின் பழைய இயற்கை இனத்திலேயே இருக்கும். அதனால் முடியாது! அதற்கு எத்தனை ஊசிகள் போட்டாலும் அது அதே நிலையில் தான் இருக்கும். அது எவ்வளவு தான் ஆவிக்குரிய விவகாரங்களில் ஈடுபட்டிருந்தாலும், அது எதைப் பெற்றிருந்த போதிலும், அதனால் முடியாது! நீங்கள் வயது வந்தவர்கள், நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்பதை அறிவீர்கள். அதற்கு எத்தனை கணவர் அல்லது மனைவியர் இருந்தாலும், வேறென்ன இருந்தாலும், எவ்வளவு சிறிய சகோதரி சபைகளும் குழுக்களும் உருவாக்கிக் கொண்டாலும், அது எழுப்புதலைப் பிறப்பிக்காது. அது முடிந்து போன ஒன்றாகும். அது தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகி உலகத்துடன் இனசேர்க்கை செய்து கொண்ட காரணத்தால், மறுபடியும் தன்னைப் பிறப்பித்துக் கொள்ள முடியாது. தேவன் வேறொன்றை துவக்கி, தம்முடைய வார்த்தை முன்செல்லும் படி செய்வார். அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டால், அதற்கும் மரணம் நேரிடும்! அது உண்மை. அது கலப்பினமாயுள்ளதால், இனப்பெருக்கம் செய்து கொள்ள அதனால் இயலாது. அது உண்மை. 78இன்று உங்களுக்குள்ள கலப்புள்ள தானியத்தைப் பாருங்கள். “அதுவே மிகச் சிறந்த தானியம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அது கொன்று போடும் தன்மை வாய்ந்தது. அது தான் உங்களைக் கொன்று கொண்டிருக்கிறது. உங்கள் சரீரங்கள் கலப்பின உணவுக்காக உண்டாக்கப்படவில்லை. உங்கள் சரீரங்கள் கலப்பற்ற மூல தானியத்திற்காகவே உண்டாக்கப்பட்டுள்ளன. அதனால் தான் உங்கள் பெற்றோரும் மூதாதையரும் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். அதனால் தான் அவர்கள் திடகாத்திரமாக இருந்தனர். எழுபது, எண்பது வயதுள்ள மனிதர் கரடுமுரடான வலிமை பெற்றிருந்தனர். பாருங்கள், அவர்கள் இயற்கையில் விளைந்ததை உண்டு வாழ்ந்தனர். பண்டைய மலைவாழ் மக்களைக் கவனியுங்கள். அவர்கள் மானையும் கலப்பற்ற தானியத்தையும் உண்டு வாழ்ந்தனர். ஒரு மனிதனை நகரத்தில் வசிக்கச் செய்யுங்கள். அவனுக்கு முப்பத்தைந்து, நாற்பது வயதாகும் போதே கழிவு நீர் (slop) போன்றாகிவிடுகிறான். மிருதுவானவனா? நிச்சயமாக. நான் பொருளிலிருந்து விலகிச் செல்கிறேன், இல்லையா? 79கவனியுங்கள், நாம் கலாச்சாரம் என்றழைக்கும் அந்த நாகரீகத்தைக் குறித்து உங்களிடம் கூற முயன்று கொண்டிருக்கிறேன். கலாச்சாரத்தைக் குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்படுகிறீர்கள். கலாச்சாரத்தைக் குறித்த என் கருத்து என்னவென்று நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது, ஒரு முயலைக் கொல்ல போதிய தைரியமில்லாதவன், அதை வேறொருவன் கொன்ற பிறகு வயிறு புடைக்கத் தின்பதற்கு சமானமாகும். பாருங்கள், கலாச்சாரத்தைக் குறித்து நான் அவ்விதமே கருதுகிறேன். அது உண்மை. பாருங்கள். தேவன் கலாச்சாரத்தின் மூலம் வருவதில்லை. கலாச்சாரம் ஒரு மனிதனை தேவனுக்குள் நடத்துவதில்லை. ஒருவனை நாகரீகப்படுத்தி தேவனுக்குள் நீங்கள் நடத்துவதில்லை. அவன் தேவனுடைய வித்தாக பிறக்கிறான். அவன் தேவனிடத்திலிருந்து வந்தவன். அது எப்பொழுதும் தேவனாயுள்ளது. அது தேவனேயன்றி வேறொன்றாக இருக்க முடியாது. நீங்கள் நாகரீகப்படுத்தப்பட்டு அதற்குள் செல்வதல்ல. 80இப்பொழுது அவன், உருக்குலைந்த வித்தின் மூலம் தன்னுடைய வகையான ஏதேனை உருவாக்கியுள்ளான். இப்பொழுது சாத்தான் தன் மகத்தான ஏதேனை உருவாக்கிவிட்டான். அது என்ன? கலாச்சாரம், விஞ்ஞானம், அழகிய ஆலயங்கள், உயர்ந்த கூரான கோபுரங்கள், நன்கு தேர்ச்சி பெற்ற பிரசங்கிகள், கல்வி, ''விதவிதமான டாக்டர் பட்டங்கள், இலக்கியத்தில் டாக்டர் பட்டம், வேத சாஸ்திர டாக்டர் பட்டம் பெற்று டாக்டர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்“. ஒவ்வொரு முறையும் நீங்கள் 'டாக்டர்' என்று உச்சரிக்கும் போது, அது அவரை தேவனிடத்திலிருந்து அத்தனை தூரம் அகற்றி, அவரைத் தூர எறிந்துவிடுகிறது. கல்வி அறிவில்லாமல் பிரசங்க பீடத்தில் நின்று கொச்சை சொற்களை உபயோகிக்கும் எவரையும் சபையோர் விரும்புவதில்லை. அவர்களுக்கு அழகான ஒன்று தான் தேவையாக இருக்கிறது. ஆதியில் அவர்களுடைய தகப்பனாகிய காயீனும் இந்த அழகை தான் தன் மனதில் கொண்டிருந்தான். தேவன் இரத்த பலி விரும்பின போது, இவன் மலர்களையும் நிலத்தின் கனிகளையும் செலுத்தினான். ஆனால் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றிருந்த மனிதனாகிய ஆபேல்! அது இரத்தம்; இப்பொழுது அவர்கள் கூறுவது போல், அது பேரிக்காய், பீச், ப்ளம், அல்லது ஏப்ரிகாட் பழம் அல்ல. இரத்தம் தான் நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது - இழிவான இரத்தம். ஸ்திரீயானவள் தவறான நபரின் வித்து தன் கர்ப்பப் பைக்குள் புகுவதற்கு அனுமதித்து அதை துவக்கிவிட்டாள். 81நான் இப்பொழுது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் செய்தி சரியான நேரத்தில் அளிக்கப்படுகிறதென்று நிரூபித்துக் காண்பிக்க விரும்புகிறேன். கலப்பினமுண்டாக்கும் முறைகள் இந்நாட்களில் கடைபிடிக்கப்படுவதைப் பாருங்கள். ஒவ்வொரு இனத்தையும் இன்னும் அதிக அழகாக்க அவர்கள் முனைகின்றனர். தாவர இனத்தைக் கவனியுங்கள். கடந்த கோடைக் காலத்தில்... அது இந்த கோடைக் காலம். என் வீட்டில் மலர் பூக்கும் சிறு காட்டுச் செடி ஒன்றை வளர்க்கிறேன். சில நிமிடங்களுக்கு முன்பு அது என் நினைவுக்கு வந்தது. என் நிலத்திலுள்ள அந்த காட்டுச் செடி பட்டுப் போகாமலிருக்க, நான் இருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். அது கலப்பினமாகும். அது மஞ்சள் பூ பூக்கும் மற்றொரு செடியிலிருந்து உண்டானது. இந்த செடியையும் வேறொன்றையும் சேர்த்து என்ன செடி உண்டானது. மஞ்சள் பூ பூக்கும் இந்த செடி அங்கு தழைத்து நின்றது. அது வளரும் இடத்தில் நீங்கள் பத்தடி ஆழம் தோண்டினாலும் அங்கு சிறிதளவு ஈரமும் இல்லை. பாருங்கள், அது புழுதியில் வளர்ந்து வந்தது. அது மிகவும் அழகானது. அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. அது மூலச் செடி. அது கலப்பினம் இல்லை. அதனுடன் எதுவுமே சேர்க்கப்படவில்லை. அது கலப்படமற்ற உண்மையான மலராகும். ஆனால் என்னிடமிருந்த செடி வேறொன்றின் கலப்பாகும். அதற்கு தண்ணீர் ஊற்றி குழந்தையைப் போல் வளர்க்க வேண்டும். பாருங்கள்? ஆனால் மற்ற செடிக்கு அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பூச்சிகள் அதன் மேல் வருவதுமில்லை. ஆனால் கலப்பின செடியை பூச்சிகள் அரித்துப் போடாமலிருக்க மருந்து தெளிக்க வேண்டியதாய் இருக்கிறது. நீங்கள் அவ்விதம் செய்யாவிட்டால், பூச்சிகள் கொன்று விடும். ஆனால் கலப்பில்லாத செடியினருகில் எந்த பூச்சியும் வராது. 82ஓ, உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும் அப்படித்தான் இருக்கிறான். உங்களுக்கு விருப்பமான எதைக் கொண்டும் அவனைச் சோதித்து பார்க்கலாம். அவன் அப்பொழுதும் கிறிஸ்தவனாகவே இருப்பான். உங்களுக்கு விருப்பமான எதைக் கொண்டும் அவளைச் சோதித்து பார்க்கலாம். அவள் அப்பொழுதும் கிறிஸ்தவளாகவே இருப்பாள். அன்றொரு நாள் இங்குள்ள சபையிலிருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றேன். இங்குள்ள சகோதரர் ஒருவரின் பன்னிரண்டு வயதுள்ள மகள் எழுதின கடிதம் அது. அவள் தன் கடிதத்தில், “சகோ, பிரான்ஹாமே, என் தகப்பனார் மட்டைப் பந்து (base ball)... இல்லை, கூடைப்பந்து (basket ball) விளையாட்டுகளுக்கு நான் போகக் கூடாது என்கிறார். உம்மிடம் கர்த்தருடைய வார்த்தை உள்ளது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். என் தந்தை கூறுவது தவறு என்று நினைக்கிறேன். ஆனால் நீர் என்ன பதிலளிக்கிறீரோ, அதை நான் நம்புவேன்'' என்றாள். பாருங்கள், அந்த இனிமையான சிறு பெண் இப்படி எழுதினாள். ஆகவே நான் சிந்தித்து இவ்விதம் பதிலளித்தேன். “நல்லது, தேனே, நீ ஒரு கிறிஸ்தவளாக இருந்தால், எவ்விடத்திலும் அப்படியே இருப்பாய். நீ எங்கு சென்றாலும் பரவாயில்லை, அப்பொழுதும் நீ கிறிஸ்தவளாகவே இருப்பாய். ஆனால் உன் தந்தை என்ன நினைக்கிறார் என்றால், கூடைப்பந்து விளையாடும் இடங்களில், விளையாடும் இளைஞர் ஒருவரையொருவர் தகாத வசைச் சொற்களால் திட்டுவதை நீ கேட்க நேரிடும், அந்தவிடத்திலும் நீ ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே இருப்பாய் என்று நான் நம்புகிறேன். பார்த்தாயா? ஆனால் வயதில் உன் தந்தை உன்னை விட மூத்தவர். உனக்கு இப்பொழுது பன்னிரண்டு வயதாகிறது. உனக்கு நான்கு வயதுள்ள சிறு தங்கை இருப்பதாக கூறினாய். அவள் தனக்கு ஒரு காகித பொம்மை செய்து தரும்படி உன்னிடம் கேட்டால் நீ என்ன செய்வாய்? “ஓ, பேசாமல் இரு. காகித பொம்மை வெட்டித் தர எனக்கு நேரமில்லை” என்பாய் அல்லவா? பார், “நீ உன் தங்கையை விட முன்னேறி இருக்கிறாய்'' சபையும் இன்று அந்நிலையில் தான் இருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தையில் சற்று அதிகம் முன்னேறியிருக்க வேண்டும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினர், பிரஸ்பிடேரியன் என்றல்ல. அது தேவனுடைய வார்த்தையில் அதை விட முன்னேறி, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் என்னும் நிலையை அடைந்திருக்க வேண்டும்! சரி சரி. குறித்த காலத்தில் வந்துள்ள செய்தி இதை நிரூபித்துக் காட்டுகிறது. 83பாருங்கள், விஞ்ஞானத்தினால் அவனுடைய விஞ்ஞானத்தினாலும் ஆராய்ச்சியினாலும் அவர்கள் ஒவ்வொன்றையும் தாறுமாறாக்க முனைந்து வித்தியாசமான ஒரு விதையை, வித்தியாசமான ஒன்றை உருவாக்கி, அது முன்பைக் காட்டிலும் அழகாயிருக்கச் செய்கின்றனர். நம் சகோதரிகளைப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றனர் என்று சிறிது நேரத்திற்கு முன்பு நான் குறிப்பிட்டேன். உலக அழகி போட்டி ஒன்றை வைத்து இங்கு கலிபோர்னியாவில் உள்ள குளோரியா சுவான்சன், அல்லது அரை நிர்வாண அழகிகளுடன் நம் சகோதரிகளையும் நிறுத்தினால், நம் சகோதரிகள் அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல், அதிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கக் கூடும். அவர்கள் பெயர் புகழின் புத்தகத்தில் எழுதப்படாமல், ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. பாருங்கள். ''சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது'' (1பேது. 3:4). நம் ஸ்திரீகளைப் பற்றி வேதம், ''உங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து, இனிமையுள்ளவராய், சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியினால் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறது. இதுவே தேவனுடைய பார்வையில் விலையேப்பெற்ற பொக்கிஷமாய் உள்ளது. பாருங்கள்? அது உண்மை. 84அழகுபடுத்தும் சாதனங்கள் ஸ்திரீகளை வெளிப்புறமாக அழகுபடுத்துகின்றன. அது போன்ற எதுவும் இங்கு நம்மிடையே இவ்லை. ஆனால் அவர்கள் அதை தான் செய்தனர். அது சாத்தானால் உண்டானது. இந்த சரக்கு அனைத்துமே பிசாசினுடயது என்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக. அவையனைத்தும் பிசாசினால் உண்டானவையே. என் மனைவி இளமையும் அழகுள்ளவளாயும் இருந்த நிலை என் நினைவுக்கு வருகிறது. அவள் அழகு சாதனம் எதுவும் உபயோகிக்கவில்லை. இல்லவே இல்லை, அவள் முழங்கால் வரைக்குமுள்ள பாவாடை உடுத்தின சிறு பெண்ணாய் வந்தபோது, அவளுக்கு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தேன். அவளுக்கு இப்பொழுது வயதாகிறது, அவள், ''எனக்கு முகத்தில் சுருக்கம் விழுகிறது'' என்று கூறினாள். நான் அவளிடம், “உனக்கு வயதாகிறது போல, என் பார்வையும் மங்கலாகிக் கொண்டு வருகிறது. நீ முன்பு எப்படியிருந்தாய் என்று நினைத்துப் பார்க்கிறேன். வரப்போகும் ஒரு நாளில் நீ எவ்விதம் இருப்பாய் என்றும் என் இருதயத்தில் அறிந்திருக்கிறேன். பார்? இப்பொழுது நீ பெற்றுள்ள இனிமையும் அமைதலுமுள்ள ஆவியின் விளைவாக, தேவன் நம்மை கரைக்கு அப்பால் மறுபடியும் இணைப்பார். அவ்வளவு தான். அதன் பிறகு அங்கே நமது உடல்களில் எந்தவித மாற்றமுமிராது'' என்றேன். ஆகவே ஏன்.... 85ஆனால், பாருங்கள், நோவாவின் நாட்களில் தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு அவர்களுக்குள்ளே பெண்களை மனைவிகளாகத் தெரிந்து கொண்டார்கள். பாருங்கள், அவர்கள் கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்ததால், தேவகுமாரர் அவர்களைக் கண்டு இச்சித்து, அவர்களைப் பெண் கொண்டனர், பாருங்கள். தேவகுமாரராகிய நீங்கள் அந்த பெண்களின் அலங்காரத்துக்கும் அப்பால் காண்கிறீர்கள் என்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? இது என்ன? எல்லாம் அழகாக இருத்தல். இது கலப்பு செய்தல். அவர்களில் சிலரை அழைத்து அவர்கள் முகத்தைக் கழுவிப் பாருங்கள்... அது அவ்வளவு விகாரமாயிருக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கவே மாட்டீர்கள். பாருங்கள்? அது உண்மை. ஒரு அரத்தினால் வெட்டியெடுக்கும் அளவுக்கு அவர்கள் முகத்திலுள்ள அழகு சாதனம் ஒருவேளை போதிய கடினத் தன்மை பெற்றிருக்கும். ஆபாசமான, அவலட்சணமான, அசுத்தமான பெண்கள். மற்ற ஆண்களுடன் சுற்றித் திரிபவர்கள். 86நான் எதைக் குறித்தும் கவலையுறுவதில்லை. என் மனைவி... எந்த ஒரு பெண்ணில் காணப்படும் விசுவாசமுள்ள தன்மையை (loyalty) நான் மதிக்கிறேன்; “ஒரு நீக்ரோ பெண் விசுவாசமுள்ளவளாக இருக்க விரும்பினால், அவளை அந்நிலையில் வைத்திருக்க என் கடைசி துளி இரத்தத்தையும் சிந்துவேன்'' என்று என் சிறு பிராயத்தில் நான் எப்பொழுதுமே சொல்வதுண்டு. பாருங்கள், சரியானவைகளுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அவ்விதமே ஜீவிக்க முயன்று வந்துள்ளேன். அன்று இளைஞனாக இருந்தபோதும், வயதாகிவிட்ட இப்பொழுதும், என் எண்ணத்தை நான் சிறிதளவும் மாற்றிக் கொள்ளவில்லை. பாருங்கள்? 87சாத்தான் விஞ்ஞானத்தை உபயோகித்து ஏவாளுக்கு செய்தது போல, சபைக்கும் செய்து அதை தாறுமாறாக்கிவிட்டான். இன்றைக்கு அவன் தன் கலப்பான சபையின் மூலம் தன் திட்டத்தை நிறைவேற்றி, நாம் இன்று பெற்றுள்ள நவீன ஏதேனை உருவாக்கிவிட்டான். நாம் விஞ்ஞான ஏதேனில், சாத்தானின் ஏதேனில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் அதைக் காண விரும்பினால், ஏசாயா 14:12-க்கு வேதத்தை திருப்புங்கள். நீங்கள் விரும்பினால், அதை உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். 12 முதல் 14 வசனங்கள். “நான் உன்னதங்களில் ஏறுவேன்...'' என்று சாத்தான் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். - தேவனுடைய - குமாரரும் அவனைத் தொழுது கொள்ளும் வகையில் அவனுடைய ராஜ்யம் அமைந்திருக்கும்... அதை தான் அவன் அப்படியே செய்துள்ளான். அதை அவன் ஆதியில் செய்தவாறே, இப்பொழுதும் சபை, மார்க்கம் என்பவைகளின் மூலம் செய்துவிட்டான். 88தீர்க்கதரிசியாகிய பவுலும் அவன் ஏதேனில் தலைமை தாங்குவதை 2தெசலோனிக்கேயர் 2-ம் அதிகாரத்தில் காண்கிறான்... விஞ்ஞானம், கல்வி, நாகரிகம் இவைகள் கொண்ட இன்றுள்ள இந்த மகத்தான விஞ்ஞான ஏதேனுக்கு அவன் தலைமையாய் இருக்கிறான். முடிவில் அவன் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்கு தலைமை வகிப்பான். அப்பொழுது எல்லா சபைகளும் அவனை வணங்க வேண்டும். அது என்னவென்று பார்த்தீர்களா? அது ஜனங்களின் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கும் வஞ்சக ஆவியாகும். அவன் ஏவாளுக்குச் செய்தது போல, தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட தேவ குமாரர்களையும், மனித சாயலில் உண்டாக்கப்பட்ட மனுஷ குமாரத்திகளையும் பொய்யான காரியங்களுக்கு நடத்துகிறான். அவன் விஞ்ஞானம், கல்வி, கலாச்சாரம் என்னும் தன் பிரபலமான உபாயங்களின் மூலம் தனக்கென்று ஒரு நவீன, விஞ்ஞான, மரண ஏதேனை உருவாக்கிக் கொண்டான். 89நீங்கள் இப்பொழுது காண்கிறீர்களா? இதை புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், இப்பொழுது அவன் தன் ஏதேனை பெற்றுள்ளான். பாருங்கள், எல்லா சபைகளும் அவனையே வணங்குகின்றன. அதை தான் 2தெசலோனிக்கேயரில் பவுல் குறிப்பிடுகிறான். அந்த மனிதன் தன்னை தேவனென்று அழைத்து தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்திருப்பான். உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அவனை வணங்குவார்கள். பார்த்தீர்களா, இது நவீன ஏதேன். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் தன்னுடைய பெரிய, இறுதியான விருந்தின் ஸ்தலமாகிய ரோமாபுரி என்னும் ஏதேனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். அன்றொரு நாள் இங்கு போப்பாண்டவர் வந்திருந்த போது நீங்கள் கண்டீர்களா? அப்பொழுது நிகழ்ந்ததெல்லாம் பதின்மூன்று என்பதாய் அமைந்திருந்ததை கவனித்தீர்களா? அவர் பதின்மூன்று வார்த்தைகள். பேசினார், பதின்மூன்று பேர் இராப்போஜனத்தில் பங்கு கொண்டனர். அவர் பதின்மூன்றாம் எண் கொண்ட யாங்கி விளையாட்டு மைதானத்தில் பேசினார். ஒவ்வொன்றும் பதின்மூன்று என்பதாகவே அமைந்திருந்தது. நம்முடைய தேசத்தின் எண்ணும் பதின்மூன்று ஆகும். இது வெளிப்படுத்தல் 13-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது; கொடியில் பதின்மூன்று வரிகள், பதின்மூன்று நட்சத்திரங்கள், பதின்மூன்று கோடுகள்; நாணயத்தின் மேல் பதின்மூன்று எண்கள், பதின்மூன்று நட்சத்திரங்கள். எல்லாமே பதின்மூன்று. அது ஒரு ஸ்திரீ, பாருங்கள். 90இதோ தலைவனாகிய போப்பாண்டவர் அந்த ஸ்திரீயிடம் வருகிறார் கள்ள அந்திக் கிறிஸ்து, விஞ்ஞானத்தால் உருவான கள்ள மணவாட்டியிடம். கிழக்கத்திய உலகம் இல்லை, மேற்கத்திய உலகமான நமது அமெரிக்கா, உலகத்தை விஞ்ஞனத்திற்குள் வழி நடத்திவிட்டது. போப்பாண்டவர் தமது விஞ்ஞான சபைக்கு வருகிறார். இப்பொழுது எல்லா பிராடெஸ்டெண்டுகளும் பதின்மூன்று என்னும் எண் கொண்ட தேசத்தில் அவரை வணங்குகின்றனர். அதை காண்கிறீர்களா? எல்லாமே பதின்மூன்றாக உள்ளன. நமது முழுதேசம், மற்றெல்லாமே பதிமூன்று, அது ஒரு ஸ்திரீயின் உலகம். பார்த்தீர்களா? நாம் அதை பெற்றுள்ளோம். அது ஏதேன் தோட்டத்தில் ஸ்திரீயின் உலகமாக மாறினது, ஒரு நாளில் அது தேவனின் உலகமாக மாறும். இப்பொழுது கவனியுங்கள். இந்த தீர்க்கதரிசிகளும், மற்றவர்களும், இதைக் குறித்து முன்னுரைத்துள்ளனர். 91தேவன் பூமியின் மேல் அசைவாடுவதற்கு முன்பு இருந்தது போல , இது ஒரு ஆவிக்குரிய குழப்பமாகிவிட்டது. நிச்சயமாக, அது அவ்விதமே ஆகிவிட்டது. இங்கு கவனியுங்கள். இரண்டாம் ஏதேன் முதலாம் ஏதேனைப் போலவே தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஏறக்குறைய வஞ்சிக்கத் தக்கதான நிலையில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், சில நிமிடங்களுக்கு இவையிரண்டையும் ஒப்பிடப் போகிறேன். பதினொன்று மணி ஆவதால், என் பிரசங்கத்தை முடிக்க வேண்டும். ஆகவே இப்பொழுது இந்த இரண்டு ஏதேன்களையும் கவனியுங்கள். உண்மையான ஏதேனில் - முதலாம் ஏதேனில் - சாத்தான் ஏவாளுக்கு செய்தது போலவே, இந்த ஏதேனும் அதேவிதமாக உள்ளதைக் கவனியுங்கள். இவ்விரண்டும் ஒப்பிடப்படும்போது ஒரே மாதிரியாக இருப்பதை இப்பொழுது கவனியுங்கள். பாருங்கள், நமக்கு விளங்கிவிட்டது. நாம் வாழும் இந்த விஞ்ஞான ஏதேனைக் குறித்து எல்லோருக்கும் தெளிவாக புரிகின்றதா? பாருங்கள்? அது தேவனுடைய ஏதேன் அல்ல. தேவனுடைய ஏதேன் விஞ்ஞானம், கல்வி, கலாச்சாரம், ஆகியவைகளின் மூலம் உண்டாகாது. பாருங்கள், அது இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனுடைய வார்த்தையினால் உண்டாகும். கவனியுங்கள். ஏதேன் தோட்டத்தில், இவைகளை சிறிது ஒப்பிடுவோம். இப்பொழுது கவனியுங்கள். 92ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மனிதனும் அவனுடைய மனைவியும்; அந்த ஜோடி நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியாதிருந்தனர். அது சரியா? தேவனுடைய, ஏதேனில் அந்த ஜோடி நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியவில்லை. மறுபடியுமாக அவர்கள் நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியாமலிருக்கின்றனர். வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரம், லவோதிக்கேயா சபையின் காலத்தில். “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்...” அவர்கள் தேவனுடைய ஏதேனில் நிர்வாணிகளாயிருந்து, அதை அறியாதிருந்தனர். இப்பொழுது விஞ்ஞானத்தினாலும் கல்வியினாலும் உண்டாக்கப்பட்ட சாத்தானின் ஏதேனில் அவர்கள் மறுபடியும் நிர்வாணிகளாயிருந்து அதை அறியாதிருக்கின்றனர். என்ன ஒரு தாறுமாறு! இன்று நடப்பதைப் பாருங்கள். மனிதன் தன் மனைவியின் உள் ஆடைகளை அணிகிறான், அவளும் அவனுடைய ஆடைகளை அணிகிறாள். அவன் அவளைப் போல் தலைமயிரை நீளமாக வளர்க்கிறான். அவள் அவனைப் போல் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கிறாள். ஓ, என்னே! மனிதன் ஸ்திரீயாகவும், ஸ்திரீ மனிதனாவும் இருக்க முயற்சித்தல். ஒரு தாறுமாறு! இந்த லவோதிக்கேயா சபையின் காலத்திலும், சபை அதை தான் செய்து கொண்டிருக்கிறது. 93கவனியுங்கள். ஆதியிலே அவர்கள் நிர்வாணிகளாயிருந்ததை அறியாத தன் காரணம், அவர்களுடைய நிர்வாணத்தை மறைக்க பரிசுத்த ஆவி என்னும் திரை இருந்தது. ஆகவே அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவி அவர்கள் கண்களின் மேல் இருந்ததால் தங்களை சகோதரன் சகோதரியாக கண்டனரே தவிர, வேறு விதத்தில் காணவில்லை. அவர்கள் நிர்வாணிகள் என்னும் நிலையை அறியாதிருந்ததன் காரணம் பரிசுத்த ஆவியே. இப்பொழுது பரிசுத்தமற்ற, அசுத்தமான, இச்சையுள்ள ஆவியே அவர்களை திரையிட்டுள்ளது; கல்வி, விஞ்ஞானம், ''அது விஞ்ஞானப் பூர்வமானது. குட்டை கால்சட்டை அணியுங்கள். அது குளிர்ச்சியும் கூட'' என்று கூறுகின்றது. சிகப்பு இந்தியர் உங்களுக்கு இதை விட நன்றாகக் கற்று தரமுடியும், அவர்கள் குளுமை பெற வேண்டி. கம்பளத்தை தங்கள் மேல்சுற்றிக் கொள்கின்றனர். பாருங்கள், அவர்கள் அதை அணிந்து கொள்கின்றனர்... பாருங்கள், கலாச்சாரத்துக்கும் நாகரீகத்துக்கும் தங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் கருதும் அதே கல்வி. அவர்களை மறுபடியும் அறியாமைக்குள் ஆழ்த்தியுள்ளது என்னும் நிலைமையை அது அடைந்துவிட்டது, அவர்கள் முன்பைக் காட்டிலும் மோசமான நிலையில் உள்ளனர். 94பள்ளிப்படிப்பு, கல்வி, பள்ளிகளைப் பாருங்கள்! இன்றிரவு பல்கலைக்கழகத்தைப் பாருங்கள், அங்குள்ள மாணவரை! பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளம் பெண்களுக்கு இவ்விளைஞர்கள் மூலம் ஓராண்டில் எத்தனை குழந்தைகள் பிறக்கிறதென்று பாருங்கள். “இது தெருவில் காணும் குப்பை” என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படித்தான் நீங்கள் நினைக்கிறீர்கள். ''இருபத்தொன்று இரத்தினங்கள்“ (Twenty one Jewels) என்று அழைக்கப்படும் அந்த இளைஞர்கள் உதட்டுச் சாயம் பூசி, தலை மயிரை சுருளாக்கி அதை தொங்கவிடுவதாக அவர்கள் கூறுகின்றனர். அசுத்த கழுத்து கொண்ட ஆபாசமானவர்கள்!நீங்கள், ”நல்லது, அது தெருவில் காணும் குப்பை“ என்கின்றீர்கள். அப்படியா? அவர்கள் பல்கலைக்கழக மாணவர். அன்றொரு இரவு அவர்கள் குடித்து வெறித்தனர். போதை மேலிட்டு அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குடியும், விபச்சாரமும் மற்ற செயல்களும் அவர்களுக்குப் போதவில்லை. அவர்கள் புட்டிகளை உடைத்து, பெண்களின் அறைகளுக்கு ஓடிச் சென்று, கதவை தட்டி, அவர்கள் அறைக்கு வெளியே வந்த போது, முகத்தில் குத்தி, ஒரு பெண்ணின் கண்ணை முற்றிலும் பாழ்படுத்தினர். இப்படியாக அப்பெண்களில் பலர் வாழ்நாள் முழுவதும் விகாரமடைந்தனர் அவர்கள் இதை வெளியே சொல்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. அவர்களில் இரு இளைஞர்கள், தெருவில் மேலும் கீழும் வாகனத்தில் சென்று, படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்த மணமான இரு பெண்களை அவமதித்ததன் விளைவாக, காவற்படையினர் அவர்களைக் கொண்டு சென்று சிறையிலடைத்தனர். பல்கலைக்கழகத் தலைவர் அங்கு சென்றார். இவ்வித செயல்கள் அங்கு பெருகிக் கொண்டே வருகின்றன. இந்த ஒரு வேலை மாத்திரமே அவர்களுக்கு உள்ளது. தலைவர், “இவர்கள் என் பையன்கள். இவர்களை விடுதலை செய்யுங்கள்'' என்றார் அவர்கள் வெளியேவிடப்பட்டனர். பார்த்தீர்களா, நாகரீகமும், கல்வியும், மரணத்திற்கும் குழப்பத்திற்கும், நரகத்திற்குமே, வழி நடத்துகின்றது. ஆகவே அவைகளுக்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டாம். இப்பொழுது கவனியுங்கள். 95உலகம் எவ்வாறு உள்ளது என்று காண, ஏவாள் சிறிது தான் எட்டிப் பார்த்தாள். நீங்களும் அநேக சமயங்களில், “இதை சிறிது அணிந்தால் என்ன?'' என்று எண்ணியிருக்க வகையுண்டு. நான் என்ன கூறுகிறேன் என்பது புரிகின்றதா? சிறிது எட்டிப் பார்க்கலாம் என்ற நினைவு. இப்பொழுது பரி. யோவான் அல்லது... 1யோவான் 2:15-ல் தேவன், ''ஒருவன் உலகத்திலும் உலகத்திள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், அவனிடத்தில் தேவனின் அன்பு இல்லவே இல்லை'' என்று கூறியிருக்கிறார். உலகத்திலுள்ள அனைத்தும் மரித்துப் போனவை. நீங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டு, அதனின்று வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு உலகப் பிரகாரமான காரியங்கள் வேண்டியதில்லை. நீங்கள் அவைகளுக்கு மரித்திருக்கிறீர்கள். அவை மரித்துப் போனவை. மரித்துப்போன எதுவும் உங்களுக்கு வேண்டாம். அது அழுகிப் போனது, அது துர்நாற்றமுள்ளது. ஜீவிக்கின்ற ஒன்று அதைப் போன்ற அசுத்தமான ஒன்றை எப்படி விரும்பும்? பாருங்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறீர்கள் வார்த்தை உங்களைப் பிழைக்கச் செய்கிறது. 96நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்வி என்றழைக்கப்படும் இக்காலத்தில் இதை நான் நினைத்துப் பார்க்கும் போது! நீங்கள் டாக்டர் பட்டம் ஒன்றை பெறாமல் பிரசங்கபீடத்தில் ஏற முடியாது. ஒருமுறை இராணுவ குருவானவர் ஒருவர் என்னிடம் கூறினது என் ஞாபகத்திற்கு வருகிறது. அவர், “சகோ. பிரான்ஹாமே, இது முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடந்தது. இராணுவ சார்ஜண்ட்” (sergeant) என்னிடம் வந்து, “ஆர்கோனில் உள்ள போர்க் களத்துக்கு என்னுடன் வருகிறீரா?” என்றார். (அது பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த லோரேயன் என்னுமிடத்திலுள்ள லாசாலி என்னும் பகுதியில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்). நான் அவருடன் ஆர்கோன் காட்டை நோக்கிச் சென்றேன். அவர் போரில் நாசமடைந்த டாங்கிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டிருந்தார் என்றார். அவர் தொடர்ந்து, அது ஈஸ்டர் காலையாக இருந்தது. நான் ஒரு தாதியுடன் (nurse) நடந்து சென்றேன். அவள் காயமடைந்த வீரருக்கு அமெரிக்க ரோஜா மலர்களை வழங்கினாள், “ஒரு அமெரிக்கனுக்கு பழக்கமான ரோஜா மலர் , உங்களுக்குத் தெரியும். அந்த வீரர்கள் ரோஜா மலரை அவள் கரங்களிலிருந்து பிடுங்கி கூச்சலிட்டு கதறினர். ஏனெனில் அது அவர்கள் நாட்டிலிருந்து வந்தது என்று அறிந்திருந்தனர்'' என்றார். அது அவர்கள் வீட்டிலிருந்து வந்ததாகும். நாமும் கூட வார்த்தையை அவ்விதம் பிடுங்கிக் கொண்டு, ''ஓ, தேவனே, என்று கூற வேண்டிவர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது வீட்டிலிருந்து வருகின்றது“. பாருங்கள். 97அவர், ''நான் அசாதாரணமான ஒன்றைக் கண்டேன். என் இருதயத்திலே... அங்கு நான் சென்றேன். 'காப்டன்' போரில் நாசமடைந்த டாங்கிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கச் சென்றுவிட்டார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அந்த சிறு பாறையின் அருகில் செல்” என்றார். நான் சுற்று முற்றும் பார்த்தேன். அவர்கள் விஷ வாயுக்களை எறிந்து மரங்களில் இருந்த இலைகள் அனைத்தையும் பொசுக்கிவிட்டிருந்தனர். அங்கு உயிர் வாழும் எதுவும் விடப்படவில்லை, இங்கோ ஈஸ்டர். நான், 'இது என்ன ஈஸ்டர்! தரையில் புல்லும் கூட இல்லை, எதுவுமே இல்லை' என்று நினைத்துக் கொண்டேன். என்னை ஏதோ ஒன்று பாறையினிடம் கவர்ந்தது. நான் பாறையைப் புரட்டினபோது, விஷ வாயுவின் மத்தியில் பாறையின் கீழ் காக்கப்பட்ட ஒரு சிறு ஈஸ்டர் மலரைக் கண்டேன். ஆகவே நான் நினைத்தேன்: “ஓ, தேவனே, இந்த விஷம் அனைத்தும் கடந்து போகும் மட்டும், காலங்கள் தோறும் உள்ள கற்பாறையின் கீழ் என்னை வைத்துக் கொண்டு, அக்கரையில் உள்ள தேசத்தில் நான் மலரட்டும்”. 98நீங்கள் விரும்பினால் நாம் இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் நான் குறிப்பு எழுதி வைத்தவை எவ்வளவோ உள்ளன. அவைகளையெல்லாம் முடிக்க முடியாது. ஒருவேளை நான் மறுபடியும் உங்களிடம் வந்து, இதை உங்களுக்கு பிரசங்கிப்பேன். அன்றொரு நாள் நான், “சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்” என்பதை பற்றி பிரசங்கித்தேன். அதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். பாருங்கள், அது “பரிசுத்த மனிதனின் ருசியை உண்டாக்குகிறது”. சகோதரரே, சிந்தியுங்கள். நீங்கள் எதை செய்தாலும், சிந்தித்துப் பாருங்கள்! எபேசியர் 5:26 அதைக் குறித்து கூறுகிறது. முன்குறித்தல் என்பதைக் குறித்து நாம் அநேக முறை பேசியிருக்கிறோம். பாருங்கள், அது அநேகரை இடறச் செய்கிறது. அது தேவனுடைய வார்த்தை. ''நாம் தேவனுடைய வார்த்தையினால் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம்'' என்று அவரே முன்குறித்தல் என்னும் அந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார். அன்றியும் அதிலே... நாம்... நீ முன்குறிக்கப்பட்டிருந்தால், அது சம்பவிக்க வேண்டியதே. ஏனெனில் அதுதான் அது. தேவன் உன்னைத் தெரிந்து கொண்டார். ஏனெனில் நீ என்ன செய்வாய் என்பதை அவர் ஆதியிலிருந்தே அறிந்திருந்தார். 99கல்வியையும் விஷத்தையும் சாத்தான் உன் மேல் தெளித்து, “நீ நவீனமாயிருக்க வேண்டும். நீ இதுவாக இருக்க வேண்டும்'' என்று கூற அவனுக்கு இடங்கொடாதே. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பதைத் தவிர வேறொன்றுமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வார்த்தையினால் பிறந்திருந்தால், அவ்விதமே இருப்பீர்கள். அந்த தெளிப்பை கவனியுங்கள். ஒரு நல்ல விதையை நீங்கள் எடுத்து, அதற்கு தெளிப்பு மருந்து அடித்தால், அது விதையைக் கொன்றுபோடும். அதுபோல் அவர்கள் ஸ்தாபன சரக்கை உங்கள் மேல் தெளித்தால், அது மூல வார்த்தை உங்கள் மேல் கொண்டுள்ள செல்வாக்கை அழித்துவிடும். அவர்கள் உங்களிடம், “நீங்கள் இதை செய்ய வேண்டும். மற்ற பெண்கள் அவ்விதம் செய்கின்றனர். மற்ற மனிதர் அவ்விதம் செய்கின்றனர்'' என்று கூறினால், அதை நம்பாதீர்கள். அது தேவன் தம் வார்த்தையினால் உங்கள் மேல் கொண்டுள்ள செல்வாக்கை அழித்துவிடும். அது உங்களுக்குத் தெரியும். 100நம்முடைய பொருள், “தெளிக்கப்பட்டு ஒத்த வேஷம் தரியாமல்'' உங்களில் இருக்கும் வித்தினால் ''மறுரூபமாகுங்கள்'' என்று கூறுகின்றது. இன்றைய மக்கள் தேவன் ஒருவர் இருப்பதை விசுவாசிக்காதவர் போல் நடந்து கொள்கின்றனர். அது உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்கின்றனர். அவர்களை மூடர்கள் என்று அழைக்க நான் விரும்பவில்லை. ஆனால், “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்'' என்று சங். 14:1 உரைக்கிறது. நீங்கள் ஒருவரை மூடன் என்று அழைக்கக் கூடாது. ஆனால் அவர்கள் அதைப் போலவே நடந்து கொள்கின்றனர். அவர்கள் தேவன் இல்லாதது போல் செயல்படுகின்றனர். இந்த வார்த்தை அசட்டை பண்ணப்படுகிறது. 101அன்றொரு நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைக் காணும்படி என்னை அறைக்கு அழைத்தனர். பில்லிபால் என்று நினைக்கிறேன், அல்லது வேறு யாரோ, தொலைக்காட்சியில் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக என்னிடம் கூறினான். எங்களிடத்தில் தொலைகாட்சிப் பெட்டி கிடையாது. என் வீட்டில் என்றைக்குமே ஒன்று இராது. நீங்கள் ஒன்றை வைத்துக் கொள்ள விரும்பினால், அது உங்களைப் பொறுத்தது. அதை வைக்க வேண்டாமென்று தேவன் என்னிடம் கூறினார். இங்கு நாங்கள் வந்தபோது, இந்த இனிமையான, முதிய சகோதரியின் வீட்டை வாடகைக்கு எடுத்தேன், அவர்களுடைய வீட்டில் ஒரு தொலைகாட்சி பெட்டி இருந்தது. ஏனெனில் தொலைகாட்சி பெட்டியுடனே அவர்களுடைய வீடு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் காண நான் பிள்ளைகளை அனுமதிப்பதுண்டு. அவர்கள் என்னை அழைத்து, சுவிசேஷ பாடல்கள் நிகழ்ச்சி ஒன்று நடப்பதாகக் கூறினர். சுவிசேஷப் பாடல்களைப் பாடுபவர் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அவர்கள் ஒரு கூட்டம் 'ரிக்கிகளை'ப் போலவே நடந்து கொண்டனர். அவர்கள் நடத்தை, தங்கள் உடலைக் குலுக்குதல், ரிக்கி தலைமயிர் கத்தரிப்பு போன்றவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்கு இழிவைக் கொண்டு வருவதாக அமைந்திருந்தன. அது கேலிக் கூத்தைப் போல் காட்சியளித்தது. 102காயீன் அப்படிப்பட்ட ஒருவனாக இருந்தான். அவன் நிச்சயமாக தன் செயல்களில் மதாபிமானம் கொண்டவனாக இருந்தான், ஆனால் அவனுக்குள் தவறான வித்து இருந்தது, பாருங்கள். ஆகவே அது சர்ப்பத்தின் வித்தை தோன்றச் செய்தது. சாத்தான் ஏதேனின் வித்தின் மேல் சர்ப்பமாக சீறினான். அது தான் காயீனைத் தோன்றச் செய்தது. அவன் தன் விஷத்தை அதன்மேல் பூசினான். காயீன் தேவனுடைய பரிபூரண சித்தம் இன்னதென்று அறிந்திருந்தான். ஆயினும், அவன் அதை செய்ய மறுத்ததால், அவன் சர்ப்பத்தின் வித்து என்பதை நிரூபித்தான். அவன் தேவனுடைய பரிபூரண சித்தம் இன்னதென்று கண்ட பிறகும், அதை செய்ய அவன் மறுத்தான். தேவன் ஆபேலின் செய்தியை உறுதிப்படுத்தினதை அவன் கண்டான். அதுவே தேவனுடைய சித்தம் என்பதை அறிந்து கொண்டான். பாருங்கள்? தேவன் ஆபேலின் செய்தியை உறுதிப்படுத்தினதை அவன் கண்டான். தேவன் அவனிடம் என்ன கூறினார்? அவர், ''நீயும் அதையே செய், உன் சகோதரன் செய்தது போலவே நீயும் என்னை தொழுது கொள். அப்பொழுது பிழைப்பாய்'' என்றார். அவன் அப்படி செய்தானா... அவன் தேவனுடைய பரிபூரண சித்தம் இன்னதென்று கண்டான். ஆயினும் அவன் அதை செய்ய விரும்பவில்லை. பாருங்கள், அவன் அதனுடன் வேறொன்றைக் கூட்டவே விரும்பினான். 103அதுபோல் இந்த வேத சாஸ்திரிகளும் இந்த வேதத்தைப் படிக்கின்றனர். ஆனால் அதின்படி செய்ய அவர்கள் விரும்புவதில்லை. பாருங்கள்? அது சர்ப்பத்தின் வித்தைக் காண்பிக்கிறது. வார்த்தை ஜனங்களின் முன்னிலையில் எளிய முறையில் உறுதிபடுவதை அவர்கள் கண்டுள்ளனர். தேவனுடைய வார்த்தைக்கு மக்கள் தங்களை தாழ்த்துவது மிகவும் கடினம் என்பது போல் தோன்றுகிறது. ஸ்திரீகளாகிய உங்களிடம் பெண்கள், “நீங்கள் ஏன் நீண்ட தலைமயிர் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் முழங்காலுக்கு கீழ் ஆடை அணிகிறீர்கள்?'' என்று கேட்டு, அவர்களிடம் நீங்கள் அதன் காரணத்தை எடுத்துரைக்கும் போது, அவர்கள் தோள்களைக் குலுக்குவதை நீங்கள் அனைவரும் கண்டிருக்கிறீர்கள் அல்லவா? அது சரிதானே? பாருங்கள், அவர்களுக்குள் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய கண்ணியம் இருக்குமானால், அவர்கள் அது சரியென்று அறிந்து கொள்வார்கள். பாருங்கள்? அது சரியென்று அவர்கள் அறிவார்கள். ஆனால், பாருங்கள், அதற்கு தங்களைத் தாழ்த்த அவர்களால் முடியவில்லை. பாருங்கள், அதுதான். காயீன் என்ன செய்தான் என்று பாருங்கள். உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்ள அவனால் முடியவில்லை. அவனால் அப்படிச் செய்ய முடியவில்லை...! 104ஓ, பெந்தெகொஸ்தேகாரரும் கூட, “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! நான் என் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கிறேன், அந்நிய பாஷைகள் பேசுகிறேன்'' என்கின்றனர். ஹா! அங்கே ஏதோ தவறுள்ளது என்று அது காண்பிக்கிறது, வித்து வித்தியாசமான ஒன்றை தோன்றச் செய்கிறது. ஒரு விதையினால் முடியாது. தேவனுடைய வித்து தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும் ஒரு ஸ்திரீயை தோன்றச் செய்யாது. அது அப்படி செய்யாது. அதனால் அவ்விதம் செய்ய முடியாது. அவ்விதம் செய்யவே முடியாது. ஏனெனில் வேதம் அவ்விதம் கூறுகின்றது. பாருங்கள், அது அவ்விதம் செய்ய முடியாது. இல்லை, ஐயா. தேவனுடைய வார்த்தைக்குத் தாழ்த்துவது மிகக் கடினமான செயல் போல் தென்படுகிறது. 105அதை ஆதியாகமம் 4:6,7-ல் கவனியுங்கள். இங்கு எழுதி வைத்துள்ள சில வேதவாக்கியங்களை நான் படிக்கிறேன். அவர், “ஆபேல் செய்தபடியே நீயும் செய். உன் சகோதரன் செய்வதைக் கண்டாயா? நீயும் சென்று ஆபேல் செய்ததைப் போலவே செய். அவன் என்னை ஆராதித்தது போல் நீயும் ஆராதித்தால், உன்னை நான் ஆசிர்வதிப்பேன். இல்லையேல், பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும்'' என்றார். பாவம் என்பது அவிசுவாசமே. ''நீ ஆபேலைப் போல் செய்யாவிடில்! அவனுடைய செயலை நான் உறுதிப்படுத்தி, அதை அவன் சரியாகச் செய்யும்படி நான் வெளிப்படுத்தினதையும் நீ கண்டிருக்கிறாய். நீயும் அவ்விதமே செய்யாவிடில், பாவம் - அவிசுவாசம் - உன் வாசற்படியில் படித்திருப்பதை அது காண்பிக்கிறது.'' பாருங்கள்? இன்றைக்கும் தேவன் உறுதிப்படுத்துவதை அவர்கள் காண்கின்றனர். தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் காண்கின்றனர். இவையாவும் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். அதைக் குறித்து அவர்கள் அறிந்துள்ளனர். தேவன் தம்முடைய அடையாளங்களை மேலே வானத்திலும், கீழே பூமியிலும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறதென்று அவர்கள் காண்கின்றனர். ஆயினும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாருங்கள், சாத்தான், சர்ப்பத்தின் வித்து; புத்திசாலிகள், வேதாகமக் கல்லூரியில் நன்கு கல்வி பயின்று வெளியே வந்தவர்கள். அவர்கள் பிரசங்க பீடத்தில் எப்படி சரியாக நிற்கவேண்டும், ஒவ்வொரு வார்த்தையும் எப்படி இலக்கணத்தோடு பேச வேண்டும் என்றெல்லாம் அறிந்தவர்கள். பாருங்கள்? நிச்சயமாக. அப்படிப்பட்ட ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது. அவர்களால் அவ்விதம் செய்யவே முடியாது. பாருங்கள், அவர்கள் செய்ய மாட்டார்கள். அப்படி செய்வதென்பது அவர்களால் முடியாத செயல் ஆகும். 106“இல்லையென்றால், பாவம் வாசற்படியில் படுத்திருக்கிறது. அவிசுவாசம் வாசற்படியில் படுத்திருக்கிறது”. அதன் பிறகு அவன் மனப்பூர்வமாக (willfully) கீழ்ப்படியாதவனாகிவிடுகிறான். ''நீ நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற் போனால், அது உனக்குப் பாவமாயிருக்கும்.'' (யாக். 4:17) நன்மையானது என்னவென்று அறிந்திருந்தும், அதை நீ செய்யாமற் போனால், பாருங்கள்? வார்த்தை உறுதிப்படுத்தப்பட்ட பின்பும் அவன் அதை ஏற்றுக் கொள்ளாமல், மனப்பூர்வமாய் கீழ்ப்படியாதவனாகி, பிரிக்கும் எல்லைக் கோட்டை கடந்தான். அவன் கடந்தபோது ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டான். நீங்கள் போக வேண்டிய அளவுக்கு ஒரு எல்லைக் கோடு உள்ளது. அதைக் கடந்து மறுபக்கம் சென்றால், நீங்கள் வெளியேறிவிடுகின்றீர்கள். அது உங்களுக்குத் தெரியும், இல்லையா? ஒரு எல்லைக் கோடு உள்ளது. நீங்கள் நம்பாவிட்டால், எபிரேயர் 10:26-ஐ படியுங்கள். அந்த வேத வாக்கியத்தை தான் நான் அங்கு குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன், பாருங்கள். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியிராமல் இது புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு வசனம். அது சரியா? சத்தியமானது உங்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, அதை நீங்கள் அறியும் அறிவை அடைந்த பிறகு மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால், அந்த பாவத்தினிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியிராது. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையே இருக்கும். (எபி. 10:27) அது சரியா? பாருங்கள், நீங்கள் அந்த கோட்டைக் கடக்கலாம். வனாந்தர வழியாக பிரயாணம் செய்த இஸ்ரவேல் புத்திரைப் போல. இஸ்ரவேலர் அதை தான் செய்தனர். அவர்கள் மோசேயின் செய்தியைக் கேட்டு அது உறுதிப்படுத்தப்பட்டதைக் கண்ட பிறகும், ''ஓ, பாருங்கள் பிள்ளைகளே, நாம் அனைவரும் ஒருவரே. நாம் ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்ள வேண்டும், நாம் இதை செய்ய வேண்டும்'' என்று கூறின கள்ளத்தீர்க்கதரிசிக்கு செவி கொடுத்தனர். மோசேயோ அவர்களுக்கு வேறு விதமாக போதித்திருந்தான், அதை தேவன் உறுதிப்படுத்துவதை அவர்கள் கண்டிருந்தனர். பாருங்கள், பிலேயாம் மோசேயைக் காட்டிலும் ஒரு நல்ல போதகனாக அவர்களுக்குத் தென்பட்டான். அவன் ஒரு சிறப்பான நாட்டைச் சேர்ந்தவன், அங்கு சிறந்த ஜனங்கள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு ஒன்றாக இருந்தனர். அந்த மோவாப் தேசம் சிறந்த இராணுவத்தையும், மற்ற சிறந்த காரியங்களையும் பெற்றிருந்தது. அக்காலத்து மக்கள் அதைக் கண்டு பயந்திருப்பார்கள். இதோ ஒரு தீர்க்கதரிசி வருகிறான். அவன் கள்ள அபிஷேகம் பெற்றவன், பாருங்கள். அவன் அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசியிடம் வருகிறான் (எவ்வளவு நெருங்கியுள்ளதென்று கவனியுங்கள்). அவன் ஜனங்களுக்குப் போதித்தான். அவர்களில் அநேகர் அதை பின்பற்றினர். இதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். பாருங்கள், அவர்கள் வார்த்தையல்லாத ஒன்றை உறுதிபடுத்தப்பட்டு, வார்த்தை என்று நிரூபிக்கப்படாத ஒன்றை பின் தொடர்ந்தனர். 107நீங்களும் வேறு யாராகிலும் இங்கு வந்து வித்தியாசமானவைகளைப் போதிக்க அனுமதிக்க வேண்டாம். தேவன் உறுதிப்படுத்தி நிரூபித்துக் கொண்டு வருவதை மட்டும் கவனியுங்கள். அவர்கள் முன் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, “தேவன் வானங்களில் தோன்றினார். மோசே வண்டுகளை, பேன்களை, தவளைகளை பேசி சிருஷ்டித்தான்; கொப்பளங்களையும், வியாதிகளையும் வருவித்து, அதன் பின்பு அதை போக்கினான். அவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தான், அதன் வழியாக நாங்கள் வந்தோம்... வானத்திலிருந்து விழுந்த மன்னாவினால் எங்களைப் போஷித்தான். ஓ, அவன் தான் எங்கள் தீர்க்கதரிசி” என்றனர். ஆனால் இங்கு வேறொரு தீர்க்கதரிசி வந்து, ''தேவனுக்கு மகிமை! நானும் ஒரு தீர்க்கதரிசி. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன், புரிந்து கொள்ளுங்கள். நான் மோசேயை விட நன்றாக இலக்கணத்துடன் பேசுவேன். நான் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன்'' என்றெல்லாம் கூறுகிறான். முதலாவதாக நடந்தது என்ன தெரியுமா? அவர்கள் அதில் மயங்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் அழிந்து போயினர். அவர்களில் ஒருவரும் ஜீவிக்கவில்லை. அவர்களில் ஒருவரும் பரலோகத்தில் இருப்பதில்லையென்று இயேசு கூறினார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்'' என்றனர். பாருங்கள், பெந்தெகொஸ்தேயினரும் சரிதான், அவர்கள் உண்மையில் அனுபவங்கள் எல்லாம் கடந்து வந்தனர். ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்.'' அவரோ, ''அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். “மரணம் என்பது நித்திய பிரிவினை'', அவர்கள் இந்த அனுபவங்களின் வழியே வந்திருந்தும், மறுபடியும் உயிரோடெழமாட்டார்கள். மறைபொருளாகக் கூறுவோமானால், அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசினர், ஆவியில் நடனமாடினர், மற்றும் பல செய்தனர். 108ஆனால் அந்த இரு தீர்க்கதரிசிகளிடையே பலப்பரீட்சை எழுந்தபோது; அவர்களில் ஒருவன் வார்த்தையில் நிலை நின்றிருந்தான், மற்றவன் வார்த்தைக்கு அப்பாற்பட்டவனாயிருந்தான். ஆனால் இருவரும் தீர்க்கதரிசிகளே. உங்களுக்குப் புரிகின்றதா? புரிந்தால், ''ஆமென்'' என்று கூறுங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). ஒருவன் வார்த்தையில் நிலைநின்றான், மற்றவன் வார்த்தைக்கு விலகியிருந்தான்; இருவருமே தீர்க்கதரிசிகள், தீர்க்கதரிசிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருவன் மாத்திரமே வாத்தையை பெற்றிருந்தான். கடைசி நாட்களில் கள்ள அபிஷேகம் பெற்றவர்கள், பாருங்கள். ஒரு தீர்க்கதரிசி... இருவரும் தீர்க்கதரிசிகளே. ஒருவன் வார்த்தையில் நிலைநின்று வார்த்தையால் உறுதிபடுத்தப்பட்டவன்; மற்றவனோ வார்த்தையால் உறுதிப்படுத்தப்படாதவன். மறுபடியும் காயீன், ஆபேல். இவ்விரண்டையும் பார்த்தீர்களா, தவறான ஒன்றும், உண்மையான ஒன்றும்? சரி. 109ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் அழிந்து, அழுகிப் போயினர். அவர்கள் ஆத்துமாக்கள் மரித்து மறைந்து போயின. அவர்கள் சபைக்குச் சென்று, தேவன் அவர்களுக்கு நியமித்தவைகளைச் செய்து, தங்கள் கடமையின் பாதையில் சரியாக இருந்தனர். ஆனால் அவர்கள் வார்த்தையால் உறுதிபடுத்தப்படாத, சரியென்று நிரூபிக்கப்படாத ஒரு கள்ள போதகனை ஏற்றுக் கொண்டனர். அவன் வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தான். ஒரு உண்மையான தீர்க்கதரிசியை நீங்கள் இன்னும் என்னவெல்லாம் அழைக்க விரும்புகிறீர்களோ, அவ்வகையில் அவன் இருந்தான். இருப்பினும், அவன் வார்த்தையினாலும் தேவனுடைய அடையாளங்களினாலும் ஆவிக்குரிய பிரகாரமாய் நிரூபிக்கப்படாதவனாயிருந்தான். நீதியும், கௌரவமும் கொண்டிருந்த பக்தியுள்ள மக்கள் வனாந்தரத்தில் மரித்து அழிந்துபோயினர். அவர்கள் பரலோகத்தில் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். 110நாம் எங்கு நடக்க வேண்டுமென்று காண்கிறீர்களா? உங்களுக்கு விளங்குகிறதா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அதை நழுவ விடாதீர்கள். நோவாவின் காலத்தில் வார்த்தை வித்து பூமியிலிருந்து வானத்துக்கு ஒரு மிதக்கும் மறுரூபத்தைக் கட்டியது போல். நோவா கொண்டிருந்த ஒரு சிறு பிரத்தியேக கொள்கை (cult) மக்களுக்குப் பயித்தியமாகத் தென்பட்டது. அவன் அவர்களிடம், ''கர்த்தர் உரைக்கிறதாவது. தேவன் உரைத்துவிட்டார், மழை வரப்போகிறது'' என்றான். அந்நாளில் இருந்த விஞ்ஞானிகளும், கல்விமான்களும், பக்திமான்களும், ''அந்த வயோதிப உளறு வாயனைப் பாருங்கள். அவனுக்கு வயதாகின்றது, அவன் சிந்தை நழுவிக் கொண்டிருக்கிறது'' என்றனர். ஆனால் பாருங்கள், அவன் கூறினது சரியே. ஏனெனில் அவன் உறுதிபடுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. முடிவில் அவன் செய்தி உண்மையில் உறுதிபடுத்தப்பட்டது. அவன் என்ன செய்தான்? அவன் பிரசங்கித்துக் கொண்டிருந்த வார்த்தையின்படியே, அந்த பேழையின் மூலம் அவன் பூமியிலிருந்து மகிமைக்கு மறுரூபப்பட்டான். அது மறுரூபமாயிற்று. அந்த விஞ்ஞானத் தெளிப்பு, மீதியானவர்களை நியாயத்தீர்ப்புக்குள் அழுக வைத்தது. நியாயத்தீர்ப்பின் ஜலப் பிரளயத்திலே அவர்கள் அழுகிப் போயினர். இந்த கல்வியின் மகத்தான விஞ்ஞான யுகத்தில் ஜனங்கள் என்ன செய்ய முயல்கின்றனர்? இந்த ஏதேன் சபை வார்த்தைக்குத் திரும்பி ஏதேன் நிலையை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, அது விஞ்ஞான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை உயர்த்துகிறீர்களா? மக்கள் தேவனுடைய வார்த்தையை உயர்த்த முயல்கின்றனரா, அல்லது தங்களையே உயர்த்திக் கொள்கின்றனரா? இவ்விரண்டில் சபை எதை செய்கின்றது என்று வியக்கிறேன். 111அவனுடைய உருக்குலைந்த வித்து, அறிவுத் திட்டம் போன்றவை மானிட வர்க்கம் முழுவதையுமே விஞ்ஞானத்தில் ஆழ்த்தி, அவர்கள் விஞ்ஞானப் பூர்வமாக தேவனுடைய வார்த்தையை அறியாதிருக்கும்படி செய்துவிட்டன. விஞ்ஞானப் பூர்வமாக தேவனுடைய வார்த்தையை அறியாமலிருத்தல்! அது ஒரு பெரிய வாக்குமூலம், இல்லையா? ஆனால் அவர்கள் அவ்விதமே உள்ளனர். “அது அப்படியிருக்க முடியாது'' என்கிறீர்களா? இயேசு வந்த நாளிலும் அவ்விதமே இருந்தது. இயேசு வந்த நாளில், அந்த மனிதர் தேவனுடைய வார்த்தையை எழுத்தின்படி மாத்திரம் அறிந்திருந்தனர், அவர்கள் அப்படித் தானே இருந்தனர்? நிச்சயமாக. தேவன் புறாவின் சிறகுகள் மேல், அவர் என்ன செய்வார் என்று உரைத்திருந்ததை செய்து நிறைவேற்றின போதிலும், இயேசு யாரென்பதை அவர்கள் அறியாமலிருந்தனர். வார்த்தை என்ன உரைத்திருந்ததோ, அதையே அவர் செய்தார். ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.'' (யோவான். 10:37). ஆனால் அவர் என்ன செய்வாரென்று வார்த்தை உரைத்திருந்ததோ, அதை அவர் அப்படியே செய்தார். ஆனால் அந்த நாட்களில் அவர்களிடையே விஞ்ஞானிகள் இருந்தனர். அவர்கள் விஞ்ஞான பூர்வமாய் அறிவில்லா திருந்து, மனப்பூர்வமாய் பாவம் செய்தனர், 112இச்சை குருடாக்கிப் போட்டது. அவளுடைய நிர்வாணத்தை காண்பதற்கு அவர்களுக்கு தேவனுடைய வார்த்தை அவசியமாய் உள்ளது. வெளிப்படுத்தல் 3-ம் அதிகாரத்தில், “உன் நிர்வாணத்தை நீ காணும்படி, நீ பார்வையடையும்படிக்கு, உன் கண்களுக்கு கலிக்கம் போடும்படிக்கு, அதை என்னிடத்தில் வாங்கிக் கொள்ள உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது. கலிக்கம் என்பது தேவனுடைய வார்த்தை. அது கண்களுக்கு சுகத்தையளித்து, தேவனுடைய வல்லமையின் மூலம், உலக காரியங்களிலிருந்து தேவனுடைய சமூகத்துக்கு உன்னை மறுரூபப்படுத்துகிறது. அப்பொழுது நீ காண்கிறாய்! ''நான் ஒரு காலத்தில் காணாமற் போயிருந்தேன், இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டேன். நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்'' என்று கூறுவாய். பாருங்கள், அது வித்தியாசமாய் இருக்கும்... இன்று சபைக்கு விடுக்கப்படும் அழைப்பு இதுவே. அதாவது, “நீ என்னிடத்தில் வந்து, உன் கண்களுக்கு கலிக்கம் வாங்கி, என் கலிக்கத்தை உன் கண்களுக்குப் போடு. அப்பொழுது நீ காண்பாய்.'' 113உள்ளில் உண்மையாகவே ஒன்றைப் பெற்றுள்ள நபர் எவர் மேலும் பரிசுத்த ஆவி இறங்கட்டும். குணமாகுதல் உள்ளிருந்து வருகிறது. உனக்குள் இருக்கும் ஆவி உன்னை குணமாக்கட்டும். உண்மையான ஆவி உண்மையான வித்தை அபிஷேகிக்குமானால், அது தேவனுடைய குமாரனை அல்லது குமாரத்தியை பிறப்பிக்குமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. ஆனால் உண்மையான ஆவி ஊமுள் வித்தின் மேலும் விழும். மழை கோதுமை செடியின் மேல் விழுந்து அதை பிழைக்கச் செய்வது போல், “ஒரு முள் செடியின் மேல் விழுந்து அதை பிழைக்கச் செய்யும். ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்'' (மத். 7:20). பாருங்கள்? நாம் தேவனுடைய கனிதரும் மரங்களாக, தேவனுடைய வார்த்தை என்னும் கனி தருகிறோம். இயேசு, ''ஒருவன் தன்னைத் தான் வெறுத்து என்னைப் பின்பற்றக் கடவன். ஒருவன் தன் கல்வியை, தன் அறிவை, தன் பட்டங்களை வெறுத்து என்னைப் பின்பற்றக் கடவன்'' என்றார். 114மக்கள் தாங்கள் கண்ணியத்தை (decency) குறித்து கொண்டிருந்த பொதுவான கருத்துக்களை இழந்துவிட்டனர். இங்கு நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களை கூறாமல் விட்டு விடுகிறேன்... நான் இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறேன், மக்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த கண்ணியத்தை கைவிட்டுள்ளனர். அவர்கள் முன்பு போல் இப்பொழுது இல்லை.இங்குள்ள வயது சென்ற சகோதரர்களும், நானும், சகோதரிகளும் அதை அறிந்திருக்கிறோம். அவர்கள் தங்கள் பொதுவான புரிந்துகொள்ளும் தன்மையையும் இழந்துள்ளனர். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நவீன விஞ்ஞானக் காலம் மக்களின் மன உணர்ச்சியை பாதித்து, அவர்கள் இயற்கையாகக் கொண்டிருந்த விவேகத்தை இழக்கும்படி செய்துள்ளது. ஒரு ஸ்திரீயை சகோதரியாக மதிக்க அவர்களால் முடியவில்லை. அது அசுத்தமான ஒன்று... 115ஸ்திரீகளும் ஆபாசமான ஆடைகளை அணிந்து மக்கள் நடுவில் வருகின்றனர். அதன் பிறகு, “நான் நல்லவள் தான்'' என்கின்றனர். அவள் எதற்காக இவ்விதம் வெளியே செல்ல வேண்டும்? அவள் குருடாக்கப்பட்டிருக்கிறாள். இங்குள்ள இளம் பெண்களே, உங்கள் தாய், அல்லது என் தாய், இக்காலத்து பெண்கள் உடை உடுத்தி சாலையில் செல்வது போல அன்று செய்திருந்தால், ஆடை உடுத்த அறியக் கூடாத அளவுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது என்று நினைத்து அவர்களை பயித்தியக்கார விடுதியில் சேர்த்திருப்பார்கள். நல்லது, அன்று அது மூளைக் கோளாறு என்றால், இன்றும் அது மூளைக் கோளாறு தான். இப்பொழுதும் அது அதேவிதமான ஸ்திரீயே. பாருங்கள்? ஆனால் அவர்கள் தங்கள் கண்ணியம் அனைத்தும், தங்கள் விவேகம் அனைத்தும் இழந்துவிட்டனர். அவர்கள் நவீன அறிவு, கலாச்சாரம், கல்வி ஆகியவைகளைக் கொண்டவர்களாய், “இப்படி இருப்பது முன்னைக் காட்டிலும் அதிக ஆரோக்கியம் தருகிறது'' என்கின்றனர். அது பாவமானதும் மரணமும் ஆகும்! கவனியுங்கள், ஓ, அவர்கள் முன்பு இருந்ததுபோல் இப்பொழுது இல்லை... 116சபை வாழ்க்கையையும் கவனியுங்கள். முன்னாளில், சபை வாழ்க்கையில், தீர்க்கதரிசி கர்த்தர் உரைக்கிறதாவது என்று ஒன்றைக் கூறினால், அது மக்களில் அசைவை உண்டாக்கி, அவர்கள் அதில் நிலைநின்றனர். அவர்கள் அசைந்தனர். ஆனால் இன்றோ, ''அந்த நபரை எனக்குப் பிடிக்கவில்லை. வோட்டு மூலம் அவரை வெளியே அனுப்பிவிடுங்கள்'' என்கின்றனர். ஆஹ்! பாருங்கள்? பாருங்கள், அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லை. தேவனுடைய ஆவிக்கு மக்கள் இப்பொழுது அசைவதில்லை. தேவனுடைய வார்த்தையே அவருடைய ஆவி. அவருடைய வார்த்தை அவர் தீர்க்கதரிசிகளிடத்தில் வருகிறது. அந்த வார்த்தை உங்களை உலகத்தின் காரியங்களினின்று, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமான சாயலுக்கு மறுரூபப்படுத்துகின்றது. தீர்க்கதரிசிகளின் மூலமாக மட்டுமே வார்த்தை வரமுடியும். அவர்கள் அதை உரைத்தனர். அது வார்த்தையோடு ஒப்பிடப்பட்டு, அது வார்த்தை தான் என்பது காண்பிக்கப்பட வேண்டும். பிறகு அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளும்போது, அது உன்னை உலகத்தின் குமாரன் அல்லது குமாரத்தி என்பதிலிருந்து தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தியாக மறுரூபப்படுத்துகிறது. 117இங்குள்ள உங்களையே எடுத்துக் கொள்வோம். உங்களில் எத்தனை பேருக்கு அந்த அனுபவம் உண்டு? நாம் எல்லோருமே அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். ஏனெனில் வார்த்தை உரைக்கப்பட்டு, அது விசுவாசிக்கப்பட்டது. வார்த்தை புறப்பட்டு வந்து, இருதயமாகிய விளை நிலத்தில் விழுந்து, அங்கிருந்து வளர்ந்தது. பாருங்கள்? உன்னை மறுரூபப்படுத்துதல். அவருடைய பரிசுத்த ஆவி வார்த்தை - வித்தை அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துகிறது. பேரிக்காய் மரம் பேரிக்காய் கனியையும், ஆப்பிள் மரம் ஆப்பிள் பழங்களையும் தருவதுபோல், அவருடைய வார்த்தை தேவனுடைய குமாரரையும் குமாரத்திகளையும் தோன்றச் செய்யும். அதைதான் அது செய்ய வேண்டியதாய் உள்ளது. 118ஒருநாள் இவ்வுலகம் மறுபடியும் இருளிலும் குழப்பத்திலும் இருந்தபோது, தேவனுடைய ஆவியானவர் முன்குறிக்கப்பட்ட வித்தின்மேல் அசைவாடினார். அந்த முன்குறிக்கப்பட்ட வித்து மறுரூபப்பட்டு ஏசாயா. 9:6-ஐ நிறைவேற்றினது. அந்த தீர்க்கதரிசி அங்கு நின்று கொண்டிருந்தான் - அவன் நாடுகளிலிருந்த மக்களின் மனதைக் கவர்ந்திருந்தான். அவன் காலத்திலிருந்த மார்க்க சம்பந்தமான மக்கள் அவனை விசுவாசித்தனர். ஆனால் எல்லோரும் அல்ல. இந்த தீர்க்கதரிசி உரைத்தவை சரியாக இருப்பதை அவர்கள் கண்டனர். அவன் உரைத்தவை பிழையின்றி நிறைவேறின. இந்த மனிதன் மக்களின் முன் நின்று, ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றுரைத்தான். ஓ, அது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஆனால் பாருங்கள். தேவனே அதை உரைக்கவில்லை, அவர் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் அதை உரைத்தார். வேதத்தில் அதைக் குறித்து எதுவுமே எழுதி வைக்கப்படவில்லை. ஆனால் இந்த தீர்க்கதரிசி எழுந்து நின்று, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றுரைத்தான். ஏசாயா. 9:6ல், ”நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்'' என்றுள்ளது. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்னும் அந்த வார்த்தை உரைக்கப்பட்டபோது, அது ஜீவனுள்ள வித்து. அதை என்றாவது ஒருநாளில் ஏற்றுக் கொள்ள ஒரு விளைநிலம் இருக்க வேண்டும். அவர் தேசங்கள் முழுவதும் தேடினார், ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் தேசங்கள் முழுவதும் சென்று பார்த்தார், ஒன்றும் கிடைக்கவில்லை. 119ஆனால் ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் கழித்து, அந்த முன் குறிக்கப்பட்ட வித்து ஒரு விளைநிலத்தைக் கண்டு பிடித்தது. அது வளர ஆரம்பித்தது. தேவன், “ஆதியில் வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று உரைத்தது போல். ஒரு வேளை எண்ணூறு ஆண்டுகள் கழித்து வெளிச்சம் உண்டாயிருக்கக் கூடும். ”மரம் உண்டாகக் கடவது'', அவர் உரைத்த ஒவ்வொன்றும் அவ்விதமே தோன்றினது. இங்கு ஒரு முன் குறிக்கப்பட்ட வித்து, “தேவன் நம்மோடிருக்கிறார்'' என்னும் இம்மானுவேலைத் தோன்றச் செய்தது. ''அவரை புறஜாதிகள் நாடி வருவார்கள்'' (ஏசா. 11:10. தமிழ் வேதாகமத்தில், ''ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்'' என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). நாம் இயேசுவாகிய அவரையே இன்று நாடிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், முன் குறிக்கப்பட்ட வித்து! 120சாத்தான் ஏவாளுக்குச் செய்தது போலவே, இதன் மேலும் தன் விஷத் தெளிப்பை தெளிக்க முயற்சித்தான், ஆனால் அவன் முயற்சியில் தோல்வியடைந்தான். இங்கு விரட்டியடிக்கும் பொருள் (repellent) இருந்தது. அவர் முன்குறிக்கப்பட்ட வித்தாக இருந்ததால், அவரைத் தங்கள் பக்கம் இழுத்து, பரிசேயனாகவோ அல்லது சதுசேயனாகவோ செய்ய அவர்களால் முடியவில்லை, அவரை ஒரு ஸ்தாபனத்துக்குரியவராக செய்ய அவர்களால் முடியவில்லை. அவர் தேவனுடைய முன்குறிக்கப்பட்ட, உரைக்கப்பட்ட வார்த்தையாக இருந்தார். பிசாசினால் தன்னுடைய அவிசுவாசத்தை அவர் மேல் எறிய முடியவில்லை. அந்த விரட்டியடிக்கும் பொருளை அவர் தம்மேல் கொண்டிருந்தார். தேவனே, விரட்டியடிக்கும் பொருளை எங்கள் மேல் தெளிப்பீராக என்பதே என் ஜெபமாகும். அது உண்மை. பின்பு ஆவியானவர் அவர் மேல் அசைவாடி அவரை கல்வாரி சிலுவைக்கு அனுப்பினார். அது இந்நாளில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது மட்டுமின்றி, இந்நாளின் சபை வரைக்கும் இருந்த எல்லா முன்குறிக்கப்பட்ட வித்துக்களுக்கும் வெளிச்சத்தைக் கொண்டு வந்து, அவர்களை தேவனுடைய குமாரராகவும் குமாரத்திகளாகவும் மறுரூபப்படுத்தி, தேவனுடைய சமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 121''முன்குறித்தல்'' என்னும் வார்த்தையைக் குறித்து நீங்கள் இடறல் அடையாதீர்கள். அதை ஏற்கனவே உங்களுக்கு விளக்கியுள்ளேன். உங்களுக்கு எபேசியர். 1:5-ஐ காண்பிக்க விரும்புகிறேன். கவனியுங்கள், அன்றிரவு நான் உங்களிடம் கூறினது போல, அது துவக்கத்தில் நீங்கள் உங்கள் தகப்பனுக்குள் இருந்தது போல். நீங்கள் அவருக்குள் இல்லாமலிருந்தால், இவ்வுலகிற்கு வந்திருக்கமாட்டீர்கள். ஆனால் பாருங்கள், உங்களைத் தோன்றச் செய்ய, அது ஒரு விளைநிலத்தின் வழியாக வர வேண்டியிருந்தது, இப்பொழுது நீங்கள் உங்கள் தகப்பனுடைய குமாரனும் குமாரத்தியுமாயிருக்கிறீர்கள். பாருங்கள், அது ஒரு வித்து. நீங்கள் எப்பொழுதாகிலும்... அதுபோல், நீங்கள் இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாக, உண்மையான முன் குறிக்கப்பட்ட வித்தாக இருப்பீர்களானால், எதுவும் சிருஷ்டிக்கப்படும் முன்பே நீங்கள் தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் எப்பொழுதுமே தேவனுக்குள் இருந்தீர்கள். உங்கள் ஜீவ அணு தேவனுடைய தன்மையாக அவருடைய சிந்தையில் இருந்தது. 122இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த அழகிய சிறுமியை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தேவன், இந்நாளில் ஒரு பெண் இருப்பாள். அவளுடைய பெயர் இதுவாக இருக்கும். அவள், “இதுவாக அதுவாக இருப்பாள்'' என்று தம் சிந்தையில் கொண்டிருந்தார். ”அவள் இந்நேரம் வரைக்கும் என்னவெல்லாம் செய்வர் என்று அவர் அறிந்திருந்தார். அவள் இங்கு சிகப்பு உடையுடன் அமர்ந்து செய்தியைக் கேட்பாள்'' என்றும் அவர் அறிந்திருந்தார். அது அவருடைய சிந்தையில் இருந்தது. உங்கள் கணவர் யாரென்றும், உங்கள் இருவரையும் அவர் இணைத்து, நீங்கள் இந்நாளில் இங்கு உட்கார்ந்திருப்பீர்கள் என்றும் அவர் அறிந்திருந்தார். அதை நீங்கள் நிறைவேற்றாமல் இருக்க எந்த வழியும் இல்லை, பாருங்கள். ஏனெனில் நீங்கள் வளருகிறீர்கள். நீங்கள் வளரும் வித்தாக உள்ளே இருக்கும் வரைக்கும், அந்த வித்து என்ன செய்ய வேண்டுமென்று உரைக்கப்பட்டதோ, அதை அது அப்படியே தோன்றச் செய்ய வேண்டும். அது முற்றிலும் உண்மை. அது அவருடைய வார்த்தை. அவருடைய வார்த்தையை அவர் காக்கிறார், அதன் மேல் அவர் கவனமாயிருக்கிறார். 123நீ உன் தகப்பனுக்குள் ஜீவ அணுவாக இருந்து, அவருடைய குமாரத்தியாக இவ்வுலகில் தோன்றினாய். சகோதரரே, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் அவ்விதமே தோன்றினீர்கள். உங்கள் தகப்பனுக்குள் நீங்கள் இராதிருந்தால், இவ்வுலகில் நீங்கள் தோன்றியிருக்கவே முடியாது. அவ்விதமே நீங்கள் தேவனுக்குள் இராதிருந்தால்... நீங்கள் வேதத்தின் செய்தியையும், இந்நாளுக்குரிய தற்போதைய செய்தியையும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் தேவனுக்குள் இருந்தீர்கள் என்பதன் உறுதிப்பாடாய் அது அமைந்துள்ளது. நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதன் காரணமே, இங்கு நீங்கள் அமர்ந்திருக்க வேண்டுமென்று முன் குறிக்கப்பட்டதே. இல்லையெனில் நீங்கள் இங்கிருக்க மாட்டீர்கள், நீங்கள் தெருவில் இருந்து, உங்களில் சிலர் குடிகாரராயும். இன்னும் சிலர் வேறொருவரின் மனைவியுடன் சுற்றித் திரிபவர்களாயும் இருந்திருப்பீர்கள். பெண்களாகிய நீங்கள் விவாகமாகியும், வேறு பெண்களின் கணவருடன் சுற்றித் திரிந்திருப்பீர்கள். இப்படி ஏதாவதொன்றை செய்திருப்பீர்கள். ஆனால் பாருங்கள், இங்கிருக்க வேண்டுமென்று நீங்கள் முன்குறிக்கப்பட்டீர்கள். உங்களால் அதை தவிர்க்க முடியாது. உங்களுக்கு ஒரு பிதா இருக்கிறார், அவர் தேவன். நீங்கள் அவருடைய வித்துக்கள். 124ஏற்ற காலத்திலே அவர் உங்களைத் தோன்றச் செய்தார். நீங்கள் அவருக்குள் சிந்தையாக இருந்தீர்கள், இப்பொழுது அவருடன் ஐக்கியங் கொள்ளக் கூடிய நபராக இருக்கின்றீர்கள், பாருங்கள்? நீங்கள் துவக்கத்தில் உங்கள் தந்தைக்குள் இருந்து, இப்பொழுது அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் அவருடன் ஐக்கியங் கொள்வது போல இது. இப்பொழுது நாம் நம்முடைய பிதாவாகிய தேவனுடன் ஐக்கியங் கொள்ளக் கூடிய தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். பாருங்கள்? அது மிகவும் அழகானது! நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அல்லவா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அப்பொழுது நீங்கள் அவரைப் போலாகின்றீர்கள். நீங்கள் அவருடைய குமாரராயிருந்தால், அவருடைய தன்மைகளாக ஆதியில் அவருக்குள் இருந்தீர்கள். நினைவு கொள்ளுங்கள். ஆதியிலே நீங்கள் அவருக்குள் இருந்திருந்தால், வார்த்தையாகிய இயேசு மாமிசமாகி மானிடரிடையே தேவனாக வாசம் செய்த போது, நீங்கள் அவருக்குள் இருந்து, அவர் மேல் சுமத்தப்பட்ட பழிச் சொற்களை நீங்களும் சுமந்தீர்கள். அவர் கல்வாரிக்கு சென்றபோது. நீங்களும் அவருக்குள் இருந்து கல்வாரிக்கு சென்றீர்கள், நீங்கள் அவருக்குள் மரித்தீர்கள், நீங்கள் அவருக்குள் உயிரோடெழுந்தீர்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குள் இருந்து, அவருடன் ஒருமித்து உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? 125நான் ஒரு அமெரிக்கனானால், அவளுடைய அவமானத்தில் எனக்கு பங்குண்டு, அவளுடைய மகிமையிலும் எனக்கு பங்குண்டு. அவள் எதுவோ, அது நான். நான் அமெரிக்க குடிமகன். நான் பிளிமத் பாறையில் வந்திறங்கினேன். ஆம், ஐயா. ஆம். நான் பிளிமத் பாறையில் வந்திறங்கினேன். நான் கையொப்பமிட்டேன்... அவர்கள் சுதந்திரசாசனத்தில் கையொப்பமிட்ட போது, நானும் அந்த அறையில் இருந்தேன். அவர்களுடன் நானும் அதில் கையொப்பமிட்டேன். அவள் பொருளாதாரத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கிறேன். நான் சுதந்திர சாசனத்தில் கையொப்பமிட்டேன். அது உண்மை. ஃபோர்ஜ் பள்ளத்தாக்கில் வாஷிங்டன் நதியைக் கடக்கையில் நானும் அவருடன் அக்காலையில் அங்கிருந்தேன். அவருடன் நானும் ஜெபித்தேன். நீயும் அமெரிக்கனாய் அங்கிருந்தாய். நீ ஒரு அமெரிக்கனானால், அமெரிக்காவின் ஒவ்வொன்றிலும் நீ பங்கு பெறுகிறாய். குவாமில் (Guam) நான் கொடியேற்றினேன். அவர்கள் அதைச் செய்ய நான் உதவினேன். ஒவ்வொரு கோட்டையையும் நான் பிடித்தேன். ஒரு புரட்சிக்காரனாய் அவள் அவமானத்தை நான் சுமந்தேன். அவள் எவ்விதமோ, அவ்விதமே நானும் இருக்கிறேன். 126கிறிஸ்து எதுவாக இருந்தாரோ, அது அனைத்துமாக நானும் இருக்கிறேன். அவர் என்னவாக இருக்கிறாரோ, அவ்விதமே நானும் இருக்கிறேன். ஓ, தேவனே! அவர் மதவெறியன் என்று கருதப்பட்டால், நானும் அவ்விதமே இருக்கவேண்டும். அவருடைய ஆவியின் கிரியைகளின் விளைவாக அவர் பெயல்செபூல் என்று அழைக்கப்பட்டால், நானும் அவ்விதமே. அவர் எவ்விதமோ, நானும் அவ்விதமே. அவர் எவ்விதமோ நீயும் அவ்விதமே. நாமே அமெரிக்காவின் அழியாப் புகழுக்கும், விடுதலைக்கும், புகழுக்கும், மகிமைக்கும் அல்லது அவமானத்திற்திற்கும் காரணக் கர்த்தாக்களாக இருக்கிறோம். நாம் அவ்விதம்தான் இருக்கவேண்டும். நாம் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக இருக்க வேண்டும். அவர் உலகத்தில் ஜீவித்த காலத்தில் நானும் அவரோடு ஜீவித்தேன், அவர் மரித்தபோது, நானும் அவரோடு மரித்தேன். அவர் உயிர்த்தெழுந்தபோது, நானும் அவரோடு உயிர்த்தெழுந்தேன். இப்பொழுது நான் அவரோடே கூட ஒன்று கூடி உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவருடைய ஒரு பாகமாயிருக்கிறேன். அவர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கு நானும் இருக்கிறேன். ''நான் இருக்கிற இடத்திலே என் ஊழியக்காரனும் இருப்பான்.'' 127இப்பொழுது அவரால் நம்முடனும், நம்மூலமும் ஐக்கியம் கொண்டு, அவருடைய வார்த்தையை நம்மிடம் ஒப்படைக்க முடிகிறது, நாம் அவருடைய வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறோம். அவர்... வார்த்தையாயிருக்கிறார். அவரில் நாம் ஒரு பாகமாக இருப்போமானால், அப்பொழுது நாம் வார்த்தையின் ஒரு பாகமாக ஆகின்றோம். எனக்கு கைகள் இருப்பதை நான் எப்படி மறுக்கக் கூடும்? ஒரு முட்டாள் என்னை மன்னிக்கவும் விஞ்ஞானம் எனக்குக் கைகள் இல்லை என்று என்னதான் கூறினாலும், எனக்கு கைகள் உண்டு. நான் அவைகளை உபயோகிக்கிறேன். எனக்கு ஒரு தேவன் உண்டென்று நான் அறிந்திருக்கிறேன். எனக்கு ஒரு இரட்சகர் உண்டு. என் ஆத்துமாவில் அவரை நான் உணர்கிறேன். நான் அவரின் ஒரு பாகமாக இருக்கிறேன். அப்படித்தான் இந்த வார்த்தை கூறுகின்றது, அப்படித்தான் நான் இருக்கிறேன். இந்த வார்த்தையின் ஒரு பாகத்தை நான் மறுதலித்தால், எனக்கு கையோ, காதோ, கண்ணோ இருப்பதை நான் மறுதலிப்பது போலாகும். அவ்விதம் மறுதலித்து விட்டு, என் சரியான மனநிலையிலுள்ள ஒரு மனிதனாக நான் இருக்க முடியாது. அதைப் போலவே, நான் தேவனுடைய எந்த வார்த்தையாகிலும் மறுதலித்துவிட்டு, தேவனுடைய உண்மையுள்ள ஆவியில் நிலைக்க முடியாது. நான் ஸ்தாபனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவைகளைக் குறித்து தேவன் கூறினதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாருங்கள்? நீங்கள் ஸ்தாபனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 128இப்பொழுது ''மறுரூபப்படுதல்''... அவர் வார்த்தையின் மூலம் நம்மை மறுரூபப்படுத்தி இளைப்பாறச் செய்ய முடியும். ஏனெனில் நாம் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறோம். என் இயற்கை பிறப்பில் நடந்த அநேக காரியங்கள் உண்டு. அவைகளைக் குறித்து என்னால் பெருமை பாராட்ட முடியாது. நான் உங்களுக்கு சொல்லுகிறேன். பெருமை பாராட்ட எனக்கு ஒன்றுமில்லை. முதலாவதாக, என் பெற்றோர் பாவிகளாயிருந்தனர். அவர்கள் முன்னோர் துரோகிகளும் துப்பாக்கி சண்டை புரிவர்களுமாயிருந்தனர். அவர்களில் அநேகர் அப்படி சண்டையிட்டே மடிந்தனர். கென்டக்கியில் அவர்கள் குடிகாரரும், கள்ளச் சாராயம் காய்ச்சுவோராயும் இருந்தனர். என் தாய் பாதி சிகப்பு இந்தியர். எனக்கு பெருமை பாராட்ட ஒன்றுமேயில்லை. என் குடும்ப வம்சத்தைக் குறித்தும் தான் பெருமை கொள்ள முடியாது. 129ஆனால், தேவனுக்கு மகிமை! நான் பெருமை பாராட்டும்படி ஒன்றுண்டு. அதுதான் என் இரண்டாம் பிறப்பு. அது இயேசு கிறிஸ்துவிலிருந்து வருகிறது. நாம் பெற்றுள்ள அந்த தகப்பனைக் குறித்து நான் பெருமை பாராட்ட முடியும். அவரே என் பிதா. அவரே என் இரட்சகர். அவரே என் மீட்பர். அவர் எனக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் அவரைக் குறித்து நான் மேன்மை பாராட்டுவேன். ஏனெனில் இப்பொழுது நான் அவருடைய குமாரனாகிவிட்டேன், இனி ஒரு போதும் நான் சார்லஸ் பிரான்ஹாமின் குமாரன் அல்ல. நான் இயேசு கிறிஸ்துவின் குமாரன். அது உண்மை. இப்பொழுதுள்ள என் மறுபிறப்பைக் குறித்து நான் பெருமை கொள்ள முடியும். ஆனால் என் முதலாம் பிறப்பைக் குறித்து நான் பெருமை கொள்ள முடியாது, பெருமைப்பட அதில் ஒன்றுமில்லை. அதைக் குறித்து நான் வெட்கமடைகிறேன். ஆனால் என் இரண்டாம் பிறப்பைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. இல்லவே இல்லை. அதை அவர் எப்படி செய்தார்? ''தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினாலே சுத்திகரித்தார்'' (எபே. 5:26). அது உண்மை. 130முன்குறிக்கப்பட்ட விசுவாசிகள் உண்மையிலேயே வார்த்தையில் நிலைத்து நிற்பார்கள். அதை அவர்கள் மாறுபடுத்துவதில்லை. அதை மாறுப்படுத்த முடியாது. ஓ, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளே, நாம் ஏன் இந்த மகத்தான ஐக்கியத்தை எல்லா தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுடனும் கொள்ளக் கூடாது? அதை நாம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்ய மாட்டார்கள், அவ்வளவுதான். ஏனெனில் அவர்கள் ஆதியிலிருந்தே உண்மையான தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் அல்ல. பாருங்கள், சென்ற இரவு நான் கூறினது போல... அதை நான் இங்கு எழுதி வைத்துள்ளேன். ஆனால் அதைக் குறிப்பிட எனக்கு நேரமில்லை. அதை விட்டுவிட்டு, இப்பொழுது முடிக்கப் போகிறேன். 131உள்ளுக்குள் இருக்கும் உள்ளான அந்த சிறு பகுதிதான் ஆத்துமா. அங்கிருந்து தான் நீ ஆரம்பிக்கிறாய். அதிலிருந்து வந்தால், நீ ஒரு ஆவி. பின்பு நீ ஜீவிக்கிற ஒருவனாக இருக்கிறாய், ஜீவிக்கிற ஒருவனுக்கு தொடர்பு கொள்ள ஐம்புலன்கள் உள்ளன. இரண்டாவதாகிய ஆவிக்கு ஐம்புலன்கள் உள்ளன. வெளிப்புற சரீரத்திற்கு பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்டல் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. உட்சரீரத்ற்கு அன்பு, மனச்சாட்சி போன்ற ஐம்புலன்கள் உள்ளன. ஆனால் அந்த உள்ளிற்கும் உள்ளானது தான் கட்டுப்படுத்தும் கோபுரம் (control tower). அதை கட்டுப்படுத்துவது தேவன் அல்லது சாத்தான். நீ தொடர்பு கொள்பவைகளில், கிறிஸ்தவனைப் போல் பாவனை செய்யலாம். நீ கிறிஸ்தவனைப் போல் பிசாசுகளைத் துரத்தலாம். ஆனால் உள்ளேயிருக்கும் அந்த கட்டுப்படுத்தும் கோபுரம் அந்த ஆரம்பம், தேவனுடைய தல்லாடல் இருக்குமானால், அது என்றைக்குமே தேவனிடத்தில் திரும்பாது. உங்களுக்குப் புரிகிறதா? யூதாஸ் பிசாசுகளைத் துரத்தவில்லையா? இயேசுவை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து மரணத்துக்கு ஒப்புக் கொடுத்த காய்பா தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? ஆனால் அவனால் வார்த்தையில் நிலைபெற முடியவில்லை. பாருங்கள்? அது உண்மை. 132ஸ்தாபன சபையிலிருந்தும் உலகிலிருந்தும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக மறுரூபமடைதல். (முடிக்கப் போகும் இந்நேரத்தில் இதை கவனியுங்கள்). அலைகின்ற தேவனுடைய குமாரர் எவ்விதம் இவ்வுலகில் அலைகின்றனர் என்று கவனியுங்கள். மார்க்கம் தப்பி அலையும் நட்சத்திரங்களைப் போல அவர்களும் நிலையில்லாமல் ஒரு ஸ்தாபனத்திலிருந்து வேறொரு ஸ்தாபனத்திற்கு அலைகின்றனர். இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் நீரில் அசைவது போல் அவர்கள் உள்ளனர். லீயோ, கிழக்கு பகுதியில் இதை நாம் கண்டிருக்கிறோம். காற்றடித்து அந்த இலைகளை தண்ணீரின் மேல் அசையச் செய்யும். சிறு காற்றும் கூட இந்த இலைகளை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு கொண்டு சென்றுவிடும். ஆனால் தேவனோ நாம் ஸ்திரமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இயேசுவிலே நங்கூரமிடப்பட்டுள்ளேன், வாழ்வின் புயல்களை தைரியமாக எதிர்ப்பேன். இயேசுவிலே நங்கூரமிடப்பட்டுள்ளேன், காற்றிற்கோ அலைக்கோ நான் அஞ்சிடேன். பாருங்கள், அது எதுவாயிருந்தாலும். நீங்கள் பள்ளியிலிருந்த அந்த நாளில் கண்ட இஞ்ச் கேப் மணி (Inch Cape bell) உங்களுக்கு நினைவிருக்கும். 133வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை நிறைவேற்றுவதற்கென, ஆபிரகாம் சாராள் இருவரின் சரீரங்களும் மாற்றப்பட்டன. பாருங்கள், ஆபிரகாம் வாக்குத்தத்தத்தைப் பெற்றபோது, அவர்கள் வயது முதிந்தவர்களாய் இருந்தனர். ஆபிரகாமுக்கு அப்பொழுது எழுபத்தைந்து வயது, சாராளுக்கு அறுபத்தைந்து வயது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு அவளுக்கு நின்று போயிருந்தது. அவள் சிறுமியாயிருந்த முதற்கொண்டே, ஒன்றுவிட்ட சகோதரியான (half-sister) அவளுடன் அவன் வாழ்க்கைப்பட்டிருந்தான். அந்த வாக்குத்தத்தம் காக்கப்பட வயது சென்ற அவர்களின் சரீரங்கள் இளமையாக மாற்றப்பட்டன. அந்நாளுக்குரிய வாக்குத்தத்தம் அதன் விளைவாக நிறைவேறினது. தேவனுக்கு மகிமை! அது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது. பாருங்கள்? நான் எப்படி இருந்தேன் என்றோ, எப்படி இங்கு வந்தேன் என்றோ எனக்கும் கவலையில்லை. இந்நாளுக்கான வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கென நாம் மறுரூபமடைவோம். அப்பொழுது நாம் பரிசுத்த ஆவியின் இனிமையைக் கொண்டவர்களாய் சகோதரரும் சகோதரிகளுமாக ஒருமித்து வாசம் பண்ணுவோம். 134இதற்கு முன்னடையாளமாக, ஏனோக்கின் முழு சரீரமும் தேவனுக்குள் மறுரூபப்படுத்தப்பட்டது. அவன் மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான் எலியாவிற்கும் அவ்விதமே சம்பவித்தது. மரித்து உறைந்து போயிருந்த இயேசுவின் சரீரம் மறுரூபப்படுத்தப்பட்டது. அது நொறுக்கப்பட்டு, காயங்கள் உண்டாக அடிக்கப்பட்டு, அவருடைய விலாவெலும்புகள் முதுகின் வழியாக வெளியே தெரிந்தன. அவருடைய இருதயம், ஒருவேளை இவ்வளவு அகலமுள்ள ஈட்டியால் ஊடுருவப்பட்டது. குத்தப்பட்ட ஈட்டி அவருடைய இருதயத்தையும் துளைத்தது. அதிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது. அவருடைய சரீரத்திலிருந்த சிறிது ஈரமும் காய்ந்து போயிற்று. அவருடைய இரத்தம் ஈட்டியின் வழியாக ஒடி, அவருடைய பாதங்களின் வழியாக தரையில் சொட்டினது. அவர் மரித்து போனார். அவருடைய மரணத்தை சந்திரனும் நட்சத்திரங்களும் அறிவித்தன. பூமிக்கு நடுக்கம் ஏற்பட்டு அவர் மரணத்தை அறிவித்தது. பூமியிலிருந்த கற்பாறைகளும் மற்றவைகளும் அசைந்தன. எல்லாமே அவருடைய மரணத்தை அறிவித்தன. தேவனும் கூட தம் முகத்தை மறைத்துக் கொண்டார். அவர் மரித்தார். ஆனால் அவருடைய சரீரம் மறுரூபமடைந்தது. ஏன்?ஏனெனில் தேவன், ''அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன். என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன்'' என்று உரைத்திருந்தார். ஆகவே இதை செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. 135இந்நாட்களில் ஒன்றில் நம் சரீரமும் சவப்பெட்டியில் நீட்டப்பட்டிருக்கலாம்... நீங்கள் வந்து, நான் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதைக் காண வகையுண்டு. அதுபோல் நானும் வந்து, உங்களை அவ்விதமே கண்டு, அடக்கத்திற்காக கடைசி வார்த்தைகள் கூறிட நேரிடலாம். ஆனால் நம்மை கல்லறையில் வைத்திருக்க யாராலும் ஒருபோதும் முடியாது. அவர்கள் ஒருவேளை கற்பாறைகளை உங்கள் உடலின் மேல் வைத்திருக்கலாம், உங்களைக் கடலில் புதைத்திருக்கலாம், அவர்கள் விரும்பினதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமை... 2தெசலோனிக்கேயரில் பவுல், ''சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: தேவ எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும்'' இன்று காலையில் நாம் பாடினது போல், “மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம்''. 136தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமை நம்மை விஞ்ஞானம், கல்வி இவைகளின் குழப்பத்தினின்றும், உலக காரியங்களினின்றும், நவீன அறிவினின்றும் பிரித்தெடுத்து, தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக மறுரூபப்படுத்தியுள்ளது. மரணமும் கூட நம்மை கல்லறையில் பிடித்து வைத்திருக்க முடியாது. நாம் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். “ஓ, நீங்கள் அப்படியா கூறுகிறீர்கள்?'' நான் அப்படித்தான் இது உண்மையென்று கூறுகிறேன்! அந்த வார்த்தையாகிய இயேசு பூமியின் மேல் நின்றார், அவர் வார்த்தை. அவர் உயிரோடெழுந்தார், அவர் லாசருவை உயிரோடெழுப்பினார். அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்'' என்றார். தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையைத் தடுக்க யாராலும் முடியாது. அவன் மறுபடியும் உயிர்த்தெழுந்தே ஆகவேண்டும். 137நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நவீன விஞ்ஞான ஏதேனின் குழப்பத்திலிருந்து விஞ்ஞானம், கல்வி, பண்பாடு போன்ற நவீன காரியங்களிலிருந்து நாம் உயிர்த்தெழுவோம் என்றாவது ஒரு நாளில், “இந்த மாமிசமாகிய அங்கி விழுந்துபோம். நாம் உயிர்த்தெழுந்து நித்திய பரிசைப் பெறுவோம். நாம் ஆகாயத்தின் வழியாக செல்வோம். அப்பொழுது இவையெல்லாம் முடிந்துவிடும். தேவனுடைய வார்த்தையானது நம்முடைய மனம் கொண்டிருந்த நவீன அறிவிலிருந்து அதை விலக்கி, நம்முடைய மனதை மறுரூபப்படுத்தி, நம்முடைய இருதயங்களையும் ஆவியையும் புதுப்பித்து தேவனிடம் சேர்த்துள்ளது. அதை உரைத்த அதேஆவி, நம்மை இவ்வளவு தூரம் மறுரூபப்படுத்தியுள்ளது. அது இன்னமும் நம்மை மகிமையுள்ள சரீரத்துடன் அவருடைய சமுகத்தில் அவருடைய மகிமையில் கொண்டு சேர்க்கும். “அவர்கள் வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்''. இந்த விஞ்ஞான ஆராய்ச்சியினால் நாம் தோட்டத்தை நடுகிறோம், நம் பிள்ளைகள் அதன் கனியைப் புசிக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகள் அதை அவர்களிடமிருந்து எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் நடுகின்றனர், வேறொருவன் அதை புசிக்கிறான். அவர்கள் கட்டுகின்றனர், வேறொருவன் அதில் குடியிருக்கிறான். ''என் ஊழியக்காரரின் நாட்கள் நீடித்திருக்கும். அவர்கள் தங்கள் சந்தானத்தோடு இருப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும் வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை''. என்ன? ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்னும் தேவனுடைய வார்த்தையை உரைத்த அதே தீர்க்க தரிசியின் மூலம் தேவன் இந்த வாக்குத்தத்தத்தைச் செய்திருக்கிறார். 138அதை நாம் எப்படி பெறுகின்றோம்? இப்பொழுதே நாம் மறைவாக (potentially) அங்கிருக்கிறோம், பாருங்கள், ஏனெனில் தேவன் அவ்விதம் உரைத்திருக்கிறார். அது அப்படியே ஆகவேண்டும். அவர் லாசருவை எழுப்பினபோது, “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் மனுஷ குமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும். அப்பொழுது சிலர் ஜீவனை அடையும்படியாகவும், சிலர் ஆக்கினை அடையும்படியாகவும் எழுந்திருப்பார்கள்'' என்றார் (யோவான். 5:28-29) இது என்ன?மறுரூபமாதல், தேவனுடைய வார்த்தையினால் மறுரூபமாதல் நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக்கி; வரப்போகும் உலகத்தில் நமக்கு ஜீவனைக் கொடுக்கும். ஓ, என்னே! நான் இன்னும் என்ன சொல்லக் கூடும்? மற்ற காரியங்களுக்கு செவி கொடுக்காதீர்கள். இவ்வுலகின் மாயமான ஐசுவரியத்தை இச்சியாதே அது அதிவிரைவில் அழிந்து போம் உன் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு அவை என்றென்றும் அழியாது. தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் (அதை நாம் பாடுவோம்!) தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள், (இதோ அது இங்குள்ளது!) உன் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் நம் பயணம் முடியும் நேரத்தில் தேவனுக்காய் நாம் உண்மையாய் இருந்திருப்பின் அளவில்லா இன்பமுற்ற நம் ஆத்துமா பளிங்கும் சுத்தமுமான நம் மகிமையின் வீட்டைக் காணும் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் (மறுரூபப்படு). தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள். உன் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் விஞ்ஞானம் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது எதை நிரூபித்த போதிலும், அதைக் கவனியாதிருங்கள். சபையும் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது எதை கூறினாலும், அதை கவனியாதிருங்கள். ஏனெனில் நாம் தேவனின் மாறாத கரத்தைப் பற்றியுள்ளோம். காலங்கள் மாறும், விஞ்ஞானம் மாறும். மாறாத அக்கரத்தைப் பற்றிக் கொள்! உன் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு தேவளின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள். 139பிதாவாகிய தேவனே, இக்காலை உம் சமூகத்தில் நாங்கள் ஒன்று கூடியிருந்த இந்நேரத்தில், நான் நீண்ட ஒரு செய்தியை பிரசங்கித்தேன். ஓ, ஆண்டவரே, இவ்விதைகளை இம்மக்களின் இருதயங்களில் நீர் வைக்கும்படியாக ஜெபிக்கிறேன், ஆண்டவரே, நாங்கள் பலவீனர், எங்கள் உடலமைப்பு பலவீனமானது என்பதை நாங்கள் ஜெபிக்கும் இந்நேரத்தில் நினைவு கூருவீராக... சில நேரங்களில் எந்த பக்கம் திரும்புவதென்று நாங்கள் அறியாதவராய் இருக்கின்றோம். அன்புள்ள தேவனே, நீரே எங்களைத் திருப்பி, உம்முடைய மகத்தான ஆவியினால் எங்களை வழி நடத்தும். ஆண்டவரே, எங்களுக்கு உதவி புரியும். பிதாவே, எங்களைத் தனிமையில் விடாதிரும். எங்களை தனிமையாக விடுவதில்லையென்று நீர் வாக்களித்திருக்கிறீர். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. நான் உன்னோடு இருப்பேன்'' என்பதே உம் வாக்குத்தத்தமாயுள்ளது. பிதாவாகிய தேவனே, நம்முடைய சகோதரர் லீயோ, ஜீன் இவர்களை நீர் வழிநடத்த வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஆண்டவரே, இங்குள்ள இம்மக்களுக்கு இவர்கள் எவ்வகையான தலைவராய் இருக்க வேண்டுமோ, அவ்விதம் இருக்கும் படி அருள்புரியும். அவர்கள் தங்கள் சுய எண்ணங்களை உபயோகிக்காமல், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்களை நடத்துவாராக. ஆண்டவரே, பிள்ளைகள் போல் உள்ள இந்த புருஷரையும், ஸ்திரீகளையும், ஆசிர்வதியும். அவர்களுக்கு நீர் நீண்ட ஆயுளைத் தர ஜெபிக்கிறேன். கர்த்தாவே, கூடுமானால் அவருடைய வருகையை நாங்கள் காண உயிர் வாழட்டும். நாங்கள் காண்போம் என்று நம்புகிறோம், ஏனெனில் எல்லாமே மிகச் சமீபமாய் இருப்பதை நாங்கள் காண்கிறோம். அது மிகவும் சமீபமாய் உள்ளது! பிதாவே, அதை அருளும். உமக்கென்று உழைக்க எங்களோடு அவர்களையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென். உங்களை நீண்ட நேரம் வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். சகோ. லீயோ.